ரூ.85,000 டிஜிட்டல் முறையில் திருட்டு.. உஷார் மக்களே.! இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..
போன் மூலம் பண மோசடி செய்யும் டிஜிட்டல் சைபர் தாக்குதல்கள் தற்பொழுது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமான பொதுமக்கள் தங்களின் பணத்தை மர்ம கும்பல்களிடம் இழந்து வருகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் இதுபோன்ற மோசடி தாக்குதல்களில் மக்கள் சிக்கி பணத்தை இழக்கின்றனர் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இதே போன்று சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு நேர்ந்த சோகம்
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியைச் சேர்ந்தவர் பாலன். இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பாலன் தனது தனிப்பட்ட தேவைக்காக புதிய சிம்கார்டு ஒன்றை அருகில் இருந்த கடையில் இருந்து வாங்கி இருக்கிறார். வழக்கம் போல் சேவை மைய அதிகாரியிடம் இருந்து அழைப்பு ஒன்று வரும், அதை ஏர்த்து சிம் ஆக்டிவேட் செய்வதற்கான விதிமுறைகளைப் பின்பற்றுங்கள் என்று சிம் வழங்கியவர் அறிவுறுத்தியுள்ளார்.

புதிதாக வாங்கிய சிம் கார்டை ஆக்டிவேட் செய்ய போய் ரூ. 86,500 அபேஸ்
அதேபோல், சிம் வாங்கிய அதே நாளில் பாலின் செல்போன் எண்ணிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சேவை மைய அதிகாரி போல் பேசிய நபர், புதிதாக வாங்கிய சிம் கார்டை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால், ரூ.10 செயலாக்க கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைச் செலுத்தத் தனி பிரத்தியேக தளம் உள்ளது என்று கூறி, அதற்கான லிங்க் ஒன்றையும் பாலனுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மெசேஜ்ஜில் வந்த லிங்க்
அந்த லிங்கை கிளிக் செய்து, லிங்கிற்குள் சென்று கட்டணம் செலுத்தும் இடத்தில் ரூ. 10 கட்டணத்தைச் செலுத்துங்கள் என்று அந்த நபர் கூறியுள்ளார். இதனை நம்பி, பாலன் அவர்கள் கூறியது போல லிங்கை ஓபன் செய்து 10 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் பாலனின் SBI வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 86,500 திடீரென எந்த அனுமதியும் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது.

சில நொடியில் பாலனின் அனுமதி இல்லாமலே ரூ. 86,500 திருட்டு
அழைப்பில் இருந்த நபர் பாலன் பேசிக்கொண்டிருக்கும் போதே அழைப்பைத் துண்டித்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தனது வங்கி கணக்கில் இருந்து 86,500 ரூபாய் திருடப்பட்டிருப்பதைக் கண்டு பாலன் அதிர்ந்துபோனார். இது தொடர்பாகப் பாலன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாலன் வழங்கிய புகாரைத் தொடர்ந்து நூதன முறையில் பணத்தைச் சூறையாடிய மர்ம நபரை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.

SBI தனது வாடிக்கையாளர்களுக்காக வெளியிட்ட பாதுகாப்பு டிப்ஸ்
சமீபத்தில் இது போன்ற விஷயங்களில் மக்கள் சிக்காமல் கவனமாக இருக்கும் படி SBI தனது வாடிக்கையாளர்களை எச்சரித்து, சில பாதுகாப்பு டிப்ஸ்களையும் வெளியிட்டிருந்தது. SBI வெளியிட்டிருந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தது, "வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து சில கவர்ச்சிகரமான சலுகை மெசேஜ்களை அனுப்பி, அவர்களின் ஹேக்கிங் வலைக்குள் மக்களைச் சிக்கவைக்கிறார்கள். பொதுவாக நம்ப முடியாத சலுகை மெசேஜ்களுடன் ஒரு லிங்க்-ஐ இணைத்து அனுப்புகிறார்கள்.

இதை அடிக்கடி செய்தால் பாதுகாப்பாக இருக்கலாம் -SBI
அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்லுமாறு ஹேக்கர்கள் போலியான மெசேஜ்களை அனுப்புகிறார்கள். சலுகை கிடைப்பதாக எண்ணி பயனர்கள் இதை கிளிக் செய்து, மோசடிக்கு காரர்களிடம் சிக்குகின்றனர். இதனால் ஏராளமானோர் பணத்தை இழக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது எப்படி வைரசை வீழ்த்த உதவுகிறதோ, அதேபோல் அடிக்கடி பயனர்களின் பாஸ்வோர்டை மாற்றம் செய்வது பாதுகாப்பு அளிக்கும் என்று SBI தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

இதையெல்லாம் ஒரு போதும் செய்யாதீர்கள்.. விழிப்புடன் செயல்படுங்கள்
இதன் மூலம் இணைய வழி மோசடிகளில் இருந்து மக்கள் தப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. முன்-பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளையும், மெசேஜ்களையும் மற்றும் போலி லிங்குகளையும் மக்கள் தவிர்ப்பது நல்லது என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரித்துள்ளது. தெரியாத நபர்களிடம் வங்கி விவரங்களைப் பகிர்வது, OTP மற்றும் பாஸ்வேர்டு போன்ற தகவல்களைக் கூறவேண்டாம் என்றும், அழைப்பு மூலம் அதிகாரி போல் வரும் வாய்ஸ் கால்களை ஒரு போதும் நம்ப வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








