வீடு தேடிவரும் மதுபானம்: ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் டெலிவரி: இந்தியாவில் களமிறங்கிய விநியோக தளம்!

|

Innovent Technologies Private Limited-ன் முதன்மை பிராண்டான Booozie, இந்தியாவில் 10 நிமிடத்தில் மதுபான விநியோக செய்யும் வகையிலான முதல் தளத்தை உருவாக்கி இருக்கிறது. ஆன்லைன் மூலம் மதுபான விநியோக செய்யும் சில நிறுவனங்கள் முன்னதாகவே இருந்தாலும், இதுவரை 10 நிமிட சேவை என்று எதுவும் இல்லை என Booozie குறிப்பிட்டிருக்கிறது. ஐதராபாத்தை தளமாக கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலமாக கொல்கத்தாவில் 10 நிமிடங்களில் மது டோர் டெலிவரி சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.

கலால் துறையின் ஒப்புதலுடன் விநியோகம்

கலால் துறையின் ஒப்புதலுடன் விநியோகம்

மேற்கு வங்க மாநில கலால் துறையின் ஒப்புதலுடன் இந்த சேவை கிழக்கு பெருநகரில் தொடங்கப்பட்டிப்பதாக நிறுவனத்தில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. Booozie புதுமையான AI-ஐப் பயன்படுத்தி நுகர்வோர்களின் நடத்தை மற்றும் ஒழுங்குமுறைகளை கணித்து அருகிலுள்ள கடையிலிருந்து மதுபானங்களை எடுத்து சென்று 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் வகையிலான ஒரு தொகுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்னோவென்ட் டெக்னாலஜிஸ், B2B லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை தளத்தை உருவாக்கி இருக்கிறது. இது டெலிவரி செலவுகளை கணிசமாக்கி Booozie-ஐ மலிவான தளமாக மாற்றுகிறது.

விநியோகத்துக்கான பற்றாக்குறையை எளிதாக்க நடவடிக்கை

விநியோகத்துக்கான பற்றாக்குறையை எளிதாக்க நடவடிக்கை

"நுகர்வோர்களின் தேவை மற்றும் சந்தையில் தற்போது இருக்கும் விநியோகத்துக்கான பற்றாக்குறையை எளிதாக்க, விநியோகஸ்தற்களுக்கான கதவுகளை திறக்க முடிவு செய்திருக்கும் மேற்கு வங்க அரசின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்" என நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Booozie நிறுவனத்தின் அர்ப்பணிப்பு

Booozie நிறுவனத்தின் அர்ப்பணிப்பு

அதிநவீன தொழில்நுட்பங்களின் மூலம் கட்டுப்பாடான குடிப்பழக்கத்திற்காக Booozie அர்ப்பணிப்புடன் இருக்கும் எனவும் வயதுக்குட்பட்ட விநியோகம், கலப்படம், அதிகப்படியான நுகர்வு போன்ற அச்சங்கள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் Booozie இணை நிறுவனர் மற்றும் சிஇஓ விவேகானந்த் பலிஜேபள்ளி தெரிவித்துள்ளார்.

மக்களிடையே அதிகரித்து வரும் ஆன்லைன் பழக்கம்

மக்களிடையே அதிகரித்து வரும் ஆன்லைன் பழக்கம்

ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி கூடிய விரைவில் வேகமாக ஆர்டர்களை டெலிவரி செய்து வருகின்றனர். ஆன்லைன் விற்பனை தளங்கள் தங்களது சேவையை படிப்படியாக விரிவுப்படுத்தி வருகிறது. அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனம் சமீபத்தில் அதன் சேவையை விரிவுப்படுத்தி அறிவித்தது.

வீட்டு சேவைகள் வணிகம்

வீட்டு சேவைகள் வணிகம்

பிளிப்கார்ட்டில் வாங்கப்படும் பொருட்களுக்கான சேவையை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஜீவ்ஸ் செய்து வந்தது. இந்த சேவை பெங்களூரூ மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் நேரலையில் இருக்கிறது. விரைவில் மற்றும் சிறந்த இந்திய நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும். பிளிப்கார்ட்டின் வீட்டு சேவைகள் வணிகத்தில் வாஷிங் மெஷின் பழுது உள்ளிட்ட பிற சலுகைகளும் அடங்கும். மின்வணிக தளத்தில் விற்பகப்படும் தயாரிப்பு வகைகளும் இதில் உள்ளடக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தனித்து செயல்பட்டு வந்த நிறுவனம்

தனித்து செயல்பட்டு வந்த நிறுவனம்

2016-17 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதியளிப்பு மந்தநிலை காரணமாக பல வீட்டு சேவை நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதன்காரணமாக அர்பன்க்ளாப் எனப்படும் அர்பன் நிறுவனம் தனித்து செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அர்பன் நிறுவனத்துக்கு போட்டியாக பிளிப்கார்ட் களமிறங்கி இருக்கிறது. அர்பன் நிறுவனம் அழகு தொடர்பான சேவைகள் உட்பட நாடு முழுவதும் வீட்டுலேயே சேவைகளை வழங்குபவராக செயல்பட்டு வந்தது. இருப்பினும் பிளிப்கார்ட் அழகு சார்ந்த சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட நுகர்வோருக்கு மட்டுமே சேவைகள்

குறிப்பிட்ட நுகர்வோருக்கு மட்டுமே சேவைகள்

இதுவரை பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் ஏசி, வாஷிங் மெஷின், பர்னிச்சர் போன்ற பெரிய உபகரணங்களை வாங்கும் நுகர்வோருக்கு மட்டுமே சேவைகளை ஜீவீஸ் மூலம் வழங்கி வந்தது. இனி நுகர்வோர்கள் நிறுவனத்தின் போட்டி சந்தைகள் உட்பட எங்கிருந்து சாதனங்கள் வாங்கினாலும் ஏசி சேவைக்கான ஆர்டரை புக் செய்யலாம். பிளிப்கார்ட் பல ஆண்டுகளாக இந்த திறன்களை வழிவகுத்து வருவதாகவும் இப்போது நேரடியாக நுகர்வோருக்கு திறந்த விடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மின்னணு பொருட்கள் பழுது, ப்ளம்பரிங், க்ளீனிங் போன்ற பல்வேறு சேவைகளும் இதனுள் அடக்கம். இதன்மூலம் பிளிப்கார்ட் மற்றொரு புதிய வணிகப் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது.

File Images

Best Mobiles in India

English summary
Online Liquor Delivery: India's first 10 minute liquor Delivery Platform

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X