திடீரென அக்கவுண்டில் ரூ.30 கோடி வந்தா என்ன செய்வீங்க: பூவிற்கும் பெண்ணின் கணக்கில் "ரூ.30 கோடி" வரவு

|

பொதுவாக ஆன்லைனில் பணத்தை கொள்ளையடித்ததை குறித்து கேள்வி பட்டிருப்போம். ஏதோ தமிழ் தெரியாத வட இந்தியர் போன் சார் நான் மெயின் பிரான்ச்-ல் இருந்து கால் பண்றேன். உங்க ஏடிஎம் கார்ட் எக்ஸ்பெரி ஆகி விட்டது தற்போது நீங்கள் உங்களது கார்ட் நம்பரை சொல்லமுடியுமா என கேட்பார்.

வங்கி கணக்கில் இருக்கும் பணம் அபேஸ்

வங்கி கணக்கில் இருக்கும் பணம் அபேஸ்

ஏடிஎம் கார்ட் எக்ஸ்பெரி ஆகி விட்டது என தெரிந்தவருக்கு கார்ட் நம்பர் தெரியாமல் இருக்குமா என்பதை கூட அறியாத சிலர் தங்களது கார்ட் நம்பரை சொல்லுவார்கள் அதன்பின் சார் ஓகே., இப்போ உங்களுக்கு ஓடிபி வந்திருக்கும் அதை சொல்லுங்கள் என்று கேட்பார். அதை கொடுத்துவிட்டால் அவ்வளவுதான் தங்களது வங்கி கணக்கில் இருக்கும் பணம் அபேஸ் செய்யப்படும்.

வங்கி டெபிட் மெசேஜ் கூட வராது

வங்கி டெபிட் மெசேஜ் கூட வராது

ஒரு சிலர் இதுபோன்று வரும் போன்களை கலாய்த்து விடுவார்கள்., இல்லை அவரை சரமாரியாக திட்டி விடுவார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் ஓடிபி எண்களே ஹேக் செய்தும் பணம் அபேஸ் செய்யப்படுகிறது. அதேபோல் குறிப்பாக பெரும்பாலான ஹேக்கர்கள் பெரிய தொகையை திருடுவதில்லை. சில்லரை தொகையை மட்டுமே வங்கி டெபிட் மெசேஜ் கூட வராத அளவிற்கு திருடுகிறார்கள்.

இந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்: அமெரிக்காவிற்கு கூகுள் கடிதம்- சுந்தர்பிச்சை பாராட்டுஇந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்: அமெரிக்காவிற்கு கூகுள் கடிதம்- சுந்தர்பிச்சை பாராட்டு

அசால்ட்டாக நடந்து கொள்வது

அசால்ட்டாக நடந்து கொள்வது

ஆன்லைன் ஹேக்கர்களிடம் இருந்த தங்களை தற்காத்து கொள்ள வங்கிகள் மட்டுமின்றி அரசு சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு தான் வருகிறது. இருப்பினும் அதை பொருட்படுத்தாத சிலர் நமது கணக்கில் இருப்பது ரூபாய் ஐநூறோ., ஆயிரமோ இதையா திருடப்போகிறார்கள் என கூறி அசால்ட்டாக நடந்து கொள்கிறார்கள்.

விவரம் சொன்னதை கூட மறந்திருப்போம்

விவரம் சொன்னதை கூட மறந்திருப்போம்

ஏதாவது சூழ்நிலையில் அதே வங்கி கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை கிரெடிட் ஆனால் மெசேஜ் உங்களுக்கு மட்டுமல்ல அந்த ஹேக்கர்களுக்கும் செல்லும். அப்போது நம் கார்ட் குறித்த விவரம் சொன்னதை கூட மறந்திருப்போம். வங்கி கணக்கை சரியாக பராமரிக்காத காரணத்தால் வங்கியில் இருந்து பிடித்துக் கொண்டார்கள் என நினைப்பது உண்டு.

99 ஸ்மார்ட்போன்களை வைத்து Google-க்கு தண்ணிகாட்டிய ஓவியர்! எல்லாம் சிவப்பா மாறிடுச்சு!99 ஸ்மார்ட்போன்களை வைத்து Google-க்கு தண்ணிகாட்டிய ஓவியர்! எல்லாம் சிவப்பா மாறிடுச்சு!

கணக்கில் பெரும் தொகை வரவு

கணக்கில் பெரும் தொகை வரவு

இதெல்லாம் ஒருபுறம் இருக்க கர்நாடக மாநிலத்தில் சன்னபட்னா என்ற இடத்தில் வசித்து வரும் பூவிற்கும் பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி திடீரென வரவு வைக்கப்பட்டுள்ளது. சன்னபட்னா என்ற இடத்தைச் சேர்ந்த சையத் மாலிக் புர்ஹான் என்பவர் தனது மனைவியுடன் பூ கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் இவரது வீட்டுக்கு வந்த வங்கி அதிகாரிகள் சிலர், உங்களது கணக்கில் பெரும் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதே என்பது குறித்து விசாரித்துள்ளனர்.

தம்பதியினர் பெரும் அதிர்ச்சி

தம்பதியினர் பெரும் அதிர்ச்சி

இதுகுறித்து எதுவும் தெரியாது என்று கூறியதையடுத்து பூவியாபாரி மற்றும் அவரது கணவரை வங்கிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்குதான் தெரிந்துள்ளது தனது மனைவியின் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது என்று. இதுதெரிந்து பூவியாபாரம் செய்யும் தம்பதியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வங்கிக் கணக்கு குறித்த விவரத்தை கூறிய தம்பதி

வங்கிக் கணக்கு குறித்த விவரத்தை கூறிய தம்பதி

இதுகுறித்து பூவியாபாரி ஒருவர் கூறுகையில், தனது மனைவி ஆன்லைன் மூலம் சேலை வாங்கியதாகக் கூறிய அவர், பின்னர் தங்களது மனைவி ஆன்லைன் மூலம் சேலை வாங்கியதில் கார் பரிசாக விழுந்துள்ளது எனவும் இதுகுறித்த விவரங்களுக்கு வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்கும் படியும் தெரிவித்துள்ளதாக கூறினார். அப்போது அவரது மனைவி வங்கிக் கணக்கு குறித்த விவரத்தையும் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

சொன்னா கேட்கனும்., தூக்கிட்டு போயிட்டான்ல., செல்பிக்கு போஸ் கொடுத்த பெண் பறிபோன செல்போன்- வீடியோசொன்னா கேட்கனும்., தூக்கிட்டு போயிட்டான்ல., செல்பிக்கு போஸ் கொடுத்த பெண் பறிபோன செல்போன்- வீடியோ

விரைவில் கைது செய்வோம்

விரைவில் கைது செய்வோம்

இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் ராம்நகர போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது புர்ஹானின் மனைவி வங்கிக் கணக்கை மர்ம நபர்கள் சிலர் இயக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், அவர்களை விரைவில் கைது செய்வோம் என்றும் தெரிவித்தனர்.

Best Mobiles in India

English summary
Online Fraud: Rs.30 crore credited in flower seller account

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X