கொரோனா வார்டுக்குள் ஆன்லைன் டெலிவரி மூலம் சிக்கன் தந்தூரி, பிரியாணி! அடங்காத நோயாளிகள்!

|

சேலம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டுக்குள் நேற்று சிக்கன் தந்தூரி மற்றும் சிக்கன் பிரியாணியுடன் டோர் டெலிவரி செய்ய வந்த பொறுப்பான ஆன்லைன் டெலிவரி விநியோகரை பார்ஸளுடன் மருத்துவமனை பாதுகாப்பாளர் தடுத்து நிறுத்தியுள்ளார். மருத்துவர்கள் ஆர்டர் செய்திருப்பார்களோ என்று யோசித்த பாதுகாப்பாளர் அதற்கு வாய்ப்பு இல்லை என்பதை அறிந்து விசாரித்த போதுதான் உண்மை வெளியில் வந்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டு

தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டு

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (எஸ்.ஜி.எம்.கே.எம்.சி.எச்) கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நோய்யாளிகளுக்கு தினமும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, புரதச்சத்து மிகுந்த சைவ உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அசைவ பிரியர்களுக்கு சைவ உணவு போதுமானதாக இல்லை.

கோவிட்-19 நோயாளிகள் செய்த சேட்டை

கோவிட்-19 நோயாளிகள் செய்த சேட்டை

கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நான்கு கோவிட்-19 நோயாளிகள், தங்கள் வார்டில் நோயாளிகளுக்கு என்று வழங்கப்படும் சைவ உணவு சலிப்புத்தட்டி, அசைவ உணவு சாப்பிட வேண்டும் என்று ஏங்கியுள்ளனர். தங்கள் ஏக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நான்கு நோய்யாளிகளும் ஒன்று சேர்ந்து ஆன்லைனில் அசைவ உணவு ஆர்டர் செய்துள்ளனர்.

ஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ்! அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை!ஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ்! அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை!

ஆன்லைன் இல் சிக்கன் தந்தூரி மற்றும் பிரியாணி

ஆன்லைன் இல் சிக்கன் தந்தூரி மற்றும் பிரியாணி

தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் இருந்தும் சிக்கன் தந்தூரி மற்றும் பிரியாணி உணவை ஆர்டர் செய்து, டோர் டெலிவரி செய்யும் முகவரியில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டு முகவரியைக் குறிப்பிட்டுள்ளனர். ஆன்லைன் இல் உணவை ஆர்டர் செய்துவிட்டு கமுக்கமாக பிரயாணிக்காகப் பொறுமையாகக் காத்திருந்துள்ளனர்.

ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டது... உணவு தயாரிக்கப்பட்டது...

ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டது... உணவு தயாரிக்கப்பட்டது...

ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டது... உணவு தயாரிக்கப்பட்டது...டெலிவரி பார்ட்னர் பார்ஸளுடன் வருகிறார்... என்று நோட்டிபிகேஷன் வந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் காத்திருந்துள்ளனர். அந்த பொறுப்பான டெலிவரி விநியோகர், பார்சல் உடன் கொரோனா வார்டுக்குள் நுழைய முயன்றபோது, ​​பாதுகாப்புப் பணியாளர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார். விசாரணையில் நான்கு பேருக்கான தந்தூரி மற்றும் பிரியாணியை டெலிவரி செய்ய வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

108எம்பி கேமராவுடன் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!108எம்பி கேமராவுடன் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த டீன் டாக்டர் ஆர்.பாலஜினாதன்

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த டீன் டாக்டர் ஆர்.பாலஜினாதன்

இந்த தகவல் உடனே மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.பாலஜினாதன் மற்றும் பிற மருத்துவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. டாக்டர் பாலாஜினாதன் நேரில் வந்து டெலிவரி விநியோகரிடம் விசாரித்துள்ளார், கோவிட்-19 நோயாளிகள் உணவு ஆர்டர் செய்துள்ளனர் என்பது தனக்குத் தெரியாது என்றும், நிறுவனத்தின் மேப் இல் காட்டிய விலாசத்தைப் பின்பற்றி வந்ததாக அவர் டீனிடம் தெரிவித்திருக்கிறார். உணவு ஆர்டர் நோயாளிகளிடமும் மருத்துவர்கள் விசாரணையை நடத்தியுள்ளார்.

உண்மையை ஒப்புக்கொண்ட நோயாளிகள்

உண்மையை ஒப்புக்கொண்ட நோயாளிகள்

கொரோனா தொற்றுக்குப் பதிக்கப்பட்ட நான்கு நோயாளிகளும் தந்தூரி சிக்கன் மற்றும் பிரியாணியை ஆர்டர் செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளுக்கு மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படும் வரை அசைவ உணவுகளைச் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். புரதச்சத்து நிறைந்த சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Online Food Delivery Partner Enters Corona Ward With Chicken Tandoori And Briyani : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X