பேஸ்புக்கில் அதிகம் தொந்தரவு செய்கிறார்களா?

Written By:

இன்றைய நவீன கால கட்டத்தில் வெளியுலக குற்றங்களை விட பேஸ்புக் மூலம் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வரத் துவங்கியுள்ளன. இப்படியே சென்றால் இந்த உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்று நமக்கு கேட்கத்தோன்றும்.

பேஸ்புக்கில் உங்களிடம் ஆபாசமாக பேசும் நபரை தண்டிக்க புது வழி ஒன்று வந்துள்ளது. முதலில் அச்சுறுத்தும்/ஆபாசமாக பேசும் நபர்களை பிளாக் செய்யாதீர்கள். மாறாக , ரிபோர்ட் அப்யூஸ் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் அதிகம் தொந்தரவு செய்கிறார்களா?

தொடர்பில் இருந்த படியே காட்டி கொடுத்தால்.. புகார் கொடுப்பாரை, வெளிக் காட்டாமலே, சைபர் கிரைம் ஆக்க்ஷன் எடுக்கிறது இதன் மூலம் அந்த நபர் மிக எளிதாக பிடிபட்டு விடுவார்.

மேலும் இதை நீங்கள் மறவாதீர்கள் நம்முடைய அத்தனை பதிவுகளும், லைக்ஸ், கம்மெண்ட்ஸ், போஸ்ட், Inbox உரையாடல்கள் பதிவாகின்றது தேவை படும் போது அதை வைத்து தவறான நபர்களை பிடித்துவிடலாம் மேலும் அது ஒரு சாட்சியாகவே மாறுகிறது.

இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக, தைரியமாக, முகநூலை நல்லவற்றிற்கு பயன்படுத்தலாம் அதில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளது அவற்றிற்கு நாம் அதை இனி பயன்படுத்து என உறுதி ஏற்போம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot