ஆன்லைன் வகுப்பிற்கு தடை சொன்ன அமைச்சர்! முடிவில் திடீர் திருப்பம்!

|

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பிற்குத் தடை எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த சில மணி நேரத்திலேயே, ஆன்லைனில் வகுப்பு எடுப்பதைத் தடுக்க முடியாது என்று திடீரென தனது அறிவிப்பை மாற்றி அறிவித்திருக்கிறார்.

அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்திலிருந்து தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறாத நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கே=ஜூன் 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியது.

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பா?

இந்நிலையில் இந்த கல்வியாண்டில் வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்பது தற்பொழுது உறுதியாகி உள்ளது. பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்தில் தான் திறக்கக் கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கிறது. ஜூலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை. தமிழக அரசு அதன் அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே உறுதியாக நமக்கு தெரியவரும்.

4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!

ஆன்லைனில் வகுப்புகள்

இந்த நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் தனியார்ப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் எச்சரித்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பாகப் புதிதாக வகுப்பறையை நோக்கி என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முன்னதாக சென்னை, திருவள்ளூரில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் தற்பொழுது தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது என்று தெரிவித்தார்.

ஆன்லைனில் வகுப்பு எடுப்பதைத் தடுக்க முடியாது

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுதும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊரடங்கில் கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார்ப் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய சிறிது நேரத்திலேயே தனது நிலைப்பாட்டை அமைச்சர் மாற்றி, ஆன்லைனில் வகுப்பு எடுப்பதைத் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Online Class Will Be Banned In Tamilnadu Says Education Minister Senkottayan Takes A Turnover : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X