36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய ஏர்டெல் குழுமம்., 5ஜி-க்கு தயாராகும் ஜியோ: அடுத்த கட்டத்தை நோக்கி!

|

உலகளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகள் வழங்கி வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் இணைய தேவை என்பது பிரதானமாக இருக்கிறது. குறிப்பாக கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் கருத்தரங்கம் என பல தேவைக்கும் இணைய சேவை பிரதானம்.

ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல்

ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல்

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பிரதானமாக இருப்பது ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல், பிஎஸ்என்எல் உள்ளிட்டவைகள் ஆகும். ஒவ்வொரு நிறுவனங்களும் வழங்கும் திட்டங்களின் விலை மாறுபாட்டைவிட இணைய வேகத்தில் அதிக மாறுபாடு உள்ளது என்றே கூறலாம்.

குறுகிய காலத்தில் ஜியோ அசுர வளர்ச்சி

குறுகிய காலத்தில் ஜியோ அசுர வளர்ச்சி

சமீபத்தில் வோடபோன் ஐடியா., விஐ என்ற புதிய பிராண்டை அறிவித்து வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜியோ அறிமுகமான குறைந்த காலங்களில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஜியோவுடன் போட்டிப்போடும் முயற்சியில் விஐ, ஏர்டெல் திக்குமுக்காடி வருகின்றன.

குறைந்த விலையில் ஜியோ அதிக சலுகை

குறைந்த விலையில் ஜியோ அதிக சலுகை

சமீபத்திய ஒரு நிறுவனத்தின் அறிக்கையில் கூட, விஐ அதிவேக இணையத்தை வழங்குவதாகவும், ஜியோ இணைய சேவை அதிக இடத்தில் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஜியோவின் வளர்ச்சிக்கு இது ஒரு காரணமாக கருதப்பட்டாலும் ஜியோவின் பிரதான வளர்ச்சி என்பது குறைந்த விலையில் அதிக இணைய தரவுகளுடன் கூடிய திட்டத்தை வழங்கவதாகும்.

விரைவில் விலை உயர்வு

விரைவில் விலை உயர்வு

அதேபோல் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் 1ஜிபி தரவு மிகக் குறைந்த விலையில் கிடைத்து வருகிறது. இதையடுத்து விலை உயர்வை அறிவிக்க ஏர்டெல், விஐ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராக உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்பதில் ஏர்டெல் உறுதியாக உள்ளது என ஏர்டெல் தலைவர் சுனில்மிட்டல் தெரிவித்தார்.

அடுத்தடுத்து விலை உயர்வை அறிவிக்க வாய்ப்பு

அடுத்தடுத்து விலை உயர்வை அறிவிக்க வாய்ப்பு

முதலில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனம் விலை உயர்வை அறிவிக்கும் என்பது உறுதியாகவில்லை என்றாலும் முதலில் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்ததும் அடுத்தடுத்து விலை உயர்வை தொடர்ச்சியாக நிறுவனங்கள் அறிவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்டர் செய்த பொருள் வீட்டுக்கு வந்தது: பார்சலுக்குள் இருந்த ஒருவரின் கொரோனா பரிசோதனை சாம்பிள்-உரைந்து போன பெண்ஆர்டர் செய்த பொருள் வீட்டுக்கு வந்தது: பார்சலுக்குள் இருந்த ஒருவரின் கொரோனா பரிசோதனை சாம்பிள்-உரைந்து போன பெண்

5ஜி சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யும் ஜியோ

5ஜி சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யும் ஜியோ

அதேபோல் மறுபுறம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் நோக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. ஜியோ கூடிய விரைவில் இந்தியாவில் 5ஜி போனை அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஏர்டெல் குழுமத்தின் நடவடிக்கை

ஏர்டெல் குழுமத்தின் நடவடிக்கை

அதேபோல் ஒன்வெப் நிறுவனம் உலகளவில் முதன்மை தொலைத்தொடர்பு அலைக்கற்று உரிமைகளை பெற்றிருக்கிறது. இந்த நிறுவனத்தை இந்தியாவின் பிரதான தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் பிரிட்டன் அரசுடன் இணைந்து நடத்தி வருகிறது.

36 செயற்கைகோளை விண்ணில் ஏவிய ஒன்வெப்

36 செயற்கைகோளை விண்ணில் ஏவிய ஒன்வெப்

ஒன்வெப் நிறுவனம் மொத்தமாக 648 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டிருக்கிறது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை 36 செயற்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இதன்மூலம் மொத்தமாக 110 செயற்கைகோளை நிறுவனம் விண்ணில் நிறுவனம் ஏவி இருக்கிறது.

2022 மத்தியில் அதிவேக இணையம்

2022 மத்தியில் அதிவேக இணையம்

உலக நாடுகள் முழுவதும் அதிவேக இணையத்தை வழங்குவதை நோக்கமாக கொண்ட இந்த நிறுவனம் செலுத்தும் செயற்கைகோள்கள் அனைத்தும் தாழ் புவி வட்டப்பாதையில் நிறுத்தப்படும் செயற்கைகோளாகும். அதேபோல் இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு மத்தியில் அதிவேக இணையம் வழங்கப்படலாம் எனவும் 2021 இறுதிக்குள் உலக நாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

File images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oneweb Launches 36 Satellites to Provide High Speed Internet: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X