Home
News

ஐயோ சாமி.! இந்த OnePlus டிவிய முதல்ல வெளியவிடுங்கப்பா.! கூப்பாடு போட்டு வெயிட் பண்ணும் ரசிகர்கள்.!

ஒன்பிளஸ் நிறுவனம் (OnePlus) கடந்த ஏப்ரல் மாதம் அதன், புதிய OnePlus Y1S Pro 43' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதனுடன் வெறும் ரூ. 32,999 என்ற விலைக்கு நிறுவனம் 50' இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது. இப்போது, ​​நிறுவனம் அடுத்தபடியாக OnePlus Y1S Pro சீரிஸ் வரிசையில் புதிய மாடலை கொண்டு வந்துள்ளது.

ஒரு ஸ்மார்ட் டிவிக்காக கூப்பாடு போட்டு வெயிட் பண்ணும் ரசிகர்கள்.!

ஒரு ஸ்மார்ட் டிவிக்காக கூப்பாடு போட்டு வெயிட் பண்ணும் ரசிகர்கள்.!

ஒன்பிளஸ் நிறுவனம் இப்போது அதன் OnePlus Y1S Pro சீரிஸ் வரிசையில் புதிதாக 55' இன்ச் மாடலை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்துடன் இணைந்து இஷான் அகர்வால், வரவிருக்கும் OnePlus Y1S Pro 55' இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் ரெண்டர் விபரங்களைப் பகிர்ந்திருக்கிறார். இந்த புதிய OnePlus Y1S Pro 55' இன்ச் டிவி மாடலை பற்றி என்ன கூறுகிறார் என்று பார்க்கலாமா?

பட்ஜெட் விலையில் மிகப் பெரிய டிஸ்பிளே உடன் புது OnePlus TV

பட்ஜெட் விலையில் மிகப் பெரிய டிஸ்பிளே உடன் புது OnePlus TV

இந்த புதிய ஸ்மார்ட் டிவியை வெளியில் இருந்து பார்த்தால், இதன் முந்தைய மாடலான 43' இன்ச் மற்றும் 50' இன்ச் OnePlus Y1S Pro மாடலின் உடன்பிறப்புகளுக்கு மிகவும் ஒத்ததாக இருக்கிறது. OnePlus லோகோவுடன் திரைக்குக் கீழே ஒரு கணிசமான சின் வழங்கப்பட்டுள்ளது. பெசல்ஸ் இல்லாத வடிவமைப்பை வழங்க, நிறுவனம் 2 பக்கங்களிலும், மேற்புறத்திலும் உள்ள பெசல்களை சிறியயதாக்கியுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் கம்மி விலையில் இந்த டிவி எதிர்பார்க்கப்படுவதனால், எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.

OnePlus Y1S Pro 55' இன்ச் டிவியின் ரிமோட் விபரங்கள்

OnePlus Y1S Pro 55' இன்ச் டிவியின் ரிமோட் விபரங்கள்

சமீபத்திய ரெண்டர் விபரங்கள், வரவிருக்கும் OnePlus Y1S Pro 55' இன்ச் மாடலுடன் அனுப்பப்படும் ரிமோட்டைப் பற்றிய தோற்றத்தையும் காண்பித்துள்ளது. ரிமோட்டில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon prime video), நெட்ஃபிலிக்ஸ் (Netflix) மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) கீஸ், வால்யூம் ராக்கர், ஹோம், பேக் கீஸ் மற்றும் ரவுண்ட் நேவிகேஷன் கண்ட்ரோலர் பட்டனை கொண்டுள்ளது.

OnePlus Y1S Pro 55' இன்ச் ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சம்

OnePlus Y1S Pro 55' இன்ச் ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சம்

OnePlus Y1S Pro சீரிஸ் வரிசையில் உள்ள 43' இன்ச் மற்றும் 50' இன்ச் மாடல்களைப் போலவே, வரவிருக்கும் OnePlus Y1S Pro 55' இன்ச் மாறுபாடும் 4K தெளிவுத்திறனை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி Android TV OS அவுட் ஆப் தி பாக்ஸ் இல் இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டிவி அனைத்து முக்கிய OTT பயன்பாடுகளையும் ஆதரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4K அல்ட்ரா HD தரத்தில் அதிக டிமாண்ட் உடன் வரவிருக்கும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி

4K அல்ட்ரா HD தரத்தில் அதிக டிமாண்ட் உடன் வரவிருக்கும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி

இந்த OnePlus Y1S Pro 55' இன்ச் டிவியானது, Dolby Atmos ஆதரவுடன் குறைந்தது 24W ஸ்பீக்கர்களையும் ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. MySmartPrice இன் சமீபத்திய அறிக்கையில் Oneplus Y1S Pro 55' இன்ச் டிவியின் சில முக்கிய விவரக்குறிப்புகளை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின்படி, OnePlus TV 4K அல்ட்ரா HD தீர்மானம் மற்றும் HDR10+ மற்றும் MEMC-க்கான ஆதரவுடன் வரும் என்பதைப் பக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் OnePlus Y1S Pro 55' இன்ச் எப்போது கிடைக்கும்?

இந்தியாவில் OnePlus Y1S Pro 55' இன்ச் எப்போது கிடைக்கும்?

OnePlus Y1S Pro 55' இன்ச் ஸ்மார்ட் டிவியில் இரண்டு USB 2.0 ஸ்லாட்டுகள், மூன்று HDMI 2.1 (ஒரு eARC உட்பட), 1 RJ45 மற்றும் 1 RF இன்புட் போர்ட் இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. OnePlus Y1S Pro 55' இன்ச் ஸ்மார்ட் டிவியின் விவரக்குறிப்புகளைப் பற்றியது அவ்வளவுதான். இந்தியாவில் இந்த டிவியின் வெளியீட்டுத் தேதியை நிறுவனம் இன்னும் குறிப்பிடவில்லை என்றாலும், அது விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய OnePlus TV Y1S Pro சீரிஸ் இல் இருக்கும் அம்சங்கள் என்னென்ன?

தற்போதைய OnePlus TV Y1S Pro சீரிஸ் இல் இருக்கும் அம்சங்கள் என்னென்ன?

தெரியாதவர்களுக்கு, தற்போதைய OnePlus TV Y1S Pro தொடரில் HDR10+ ஆதரவு மற்றும் குறுகிய பெசல்கள் கொண்ட 43' இன்ச் மாடல் மற்றும் 50' இன்ச் மாடல்கள் 4K உடன் வருகின்றன. MEMC, டைனமிக் கான்ட்ராஸ்ட், கன்டென்ட் ஆப்டிமைசேஷன், சிறந்த வண்ண மறு உருவாக்கம் உள்ளிட்ட AI- இயங்கும் சிறந்த காட்சி அனுபவத்துடன் இந்த டிவிகள் வருகின்றன. இந்த ஸ்மார்ட் டிவி MediaTek MT9216 சிப்செட் உடன் இயக்குகிறது.

அட்டகாசமான ஸ்டோரேஜ் உடன் மிரட்டலான ஸ்மார்ட் டிவி அனுபவம் வேண்டுமா? அப்போ இது தான் ரைட் சாய்ஸ்.!

அட்டகாசமான ஸ்டோரேஜ் உடன் மிரட்டலான ஸ்மார்ட் டிவி அனுபவம் வேண்டுமா? அப்போ இது தான் ரைட் சாய்ஸ்.!

இது 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. OnePlus Y1S Pro டிவிகள் ஸ்மார்ட் மேனேஜர் அம்சத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இது உங்கள் ஸ்மார்ட் டிவி அனுபவத்தையும், டிவியின் செயல்திறனையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த ஸ்மார்ட் டிவிகள் இன்பில்ட் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் கூகுள் குரோம்காஸ்ட் ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 10 டிவி ஓஎஸ்ஸில் இயங்குகின்றன.

OnePlus Y1S Pro 55' இன்ச் டிவி விலை என்ன?

OnePlus Y1S Pro 55' இன்ச் டிவி விலை என்ன?

இந்த OnePlus Y1S Pro சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளின் இணைப்பு அம்சங்களைப் பற்றிப் பார்க்கையில், இவை புளூடூத் 5.0 ஆதரவு, 1 ஈதர்நெட் போர்ட், 2 HDMI 2.0 போர்ட்கள், 2 USB 2.0 போர்ட்கள் மற்றும் டூயல்-பேண்ட் வைஃபைக்கான ஆதரவு போன்றவற்றுடன் வருகிறது. OnePlus சாதனங்களுடன் தடையற்ற இணைப்பிற்கு OnePlus Connect 2.0 ஆதரவும் இதில் உள்ளது. வரவிருக்கும் OnePlus Y1S Pro 55' இன்ச் டிவி இந்தியாவில் ரூ.35,000 முதல் ரூ.39,000 விலைக்குள் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Y1S Pro 55 Inch Budget Smart TV Price and Specification Details Ahead of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X