அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் புதிய ஒன் ப்ளஸ் எக்ஸ்..!?
ஒன் ப்ளஸ் எக்ஸ் அல்லது ஒன் ப்ளஸ் மினி என தற்சமயம் அழைக்கப்பட்டு வரும் ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதோடு வெளியாக இருக்கும் கருவியில் டூயல் சிம் ஸ்லாட், 1.9 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 2450 எம்ஏஎச் பேட்டரி, 4ஜி எல்டிஈ, எப்எம் ரேடியோ போன்ற சிறப்பம்சங்கள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக வெளியான சில தகவல்களை வைத்து பார்க்கும் போது இந்த கருவியானது 5 இன்ச் 1080பி டிஸ்ப்ளே, 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ், ஆக்டா கோர் மீடியாடெக் ஹெலியோ எக்ஸ்10 எஸ்ஓசி, 2ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம் கொண்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
மேலும் 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா கொண்டிருப்பதோடு இந்தியாவில் இந்த கருவி ரூ.16,300 வரை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications