Home
News

ரூ.35,000 லாம் இல்ல.. அதை விட ரொம்ப கம்மியான விலை.. OnePlus-ன் அடுத்த அறிமுகம்.. இந்தியர்கள் ஹேப்பி!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் அடுத்த அறிமுகம் ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) ஸ்மார்ட்போன் தான் என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால்.. அது முற்றலும் தவறு! அதற்கு முன்பாகவே இன்னொரு ஒன்பிளஸ் தயாரிப்பு இந்தியாவில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனம் தனது இரண்டாவது ஆண்ட்ராய்டு டேப்லெட்டில் (Android Tablet) வேலை செய்வதாகவும், அது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) டேப்லெட்டை விட மிகவும் மலிவான விலைக்கு வெளியாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

OnePlus-ன் அடுத்த அறிமுகம்.. இந்தியர்கள் ஹேப்பி

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த அறிமுகம் குறித்த இந்த தகவல் , நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான @1NormalUsername மற்றும் ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வழியாக கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி இந்த டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) என்று அழைக்கப்படலாம்.

அதாவது இது ஒன்பிளஸ் பேட் டேப்லெட்டின் 'டோன்டு-டவுன் வேரியண்ட்' (Toned-down variant) ஆக இருக்கலாம். அறியாதோர்களுக்கு டோன்டு-டவுன் வேரியண்ட் என்றால், முன்னதாக வெளியான ஒரு மாடலை விட சற்றே குறைவான அம்சங்களுடன் வரும் இன்னொரு மாடல் ஆகும். ஆக இதன் விலை நிர்ணயமும் குறைவாக இருக்கும்.

நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் பேட் டேப்லெட்டின் விலை நிர்ணயம் ரூ.37,999 ஆகும். ஆக டோன்டு-டவுன் வேரியண்ட் ஆக வரும் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டின் விலை நிர்ணயம் இதை விட குறைவாகவே இருக்கும். அதாவது இது கண்டிப்பாக ரூ.35,000 க்கு மேல் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படாது.

இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது பிஐஎஸ் (BIS) தளத்தில் காணப்பட்டுள்ளது. அறியாதோர்க்கு பிஐஎஸ் என்கிற இந்திய தரநிலைகள் பணியகத்தின் (Bureau of Indian Standards) சான்றிதழை பெற்றால் தான் எந்தவொரு டிவைஸும் இந்திய சந்தையில் அறிமுகமாக முடியும்.

ஆக ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது முதலில் சீன சந்தையில், அதனை தொடர்ந்து இந்திய சந்தையில் அறிமுகமாகாமல் நேரடியாக இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஐஎஸ் தாளத்தில் OPD2304 மற்றும் OPD2305 என்கிற 2 மாடல் பெயர்களின் கீழ் காணப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது இரண்டு வகைகளின் கீழ் வெளியாகும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று வைஃபை வேரியண்ட் (Wi-Fi variant) ஆகவும், மற்றொன்று எல்டிஇ வெர்ஷனாகவும் (LTE version) இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் பேட் ஆனது வைஃபை வேரியண்ட்டின் கீழ் மட்டுமே வாங்க கிடைக்கிறது.

ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் டேப்லெட்டின் அம்சங்களை நினைவூட்டும் வண்ணம், இது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடனான 11.6-இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த டேப்லெட் மீடியாடெக்கின் ஃபிளாக்ஷிப் சிப்செட் ஆன டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 9510mAh பேட்டரியை பேக் செய்கிறது. அது 65W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும் இது 552 கிராம் என்கிற குறைவான எடை மற்றும் 6.5 மிமீ தடிமன் என்கிற மெலிதான வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, 30எஃப்பிஎஸ்-ல் 4கே வீடியோ ரெக்கார்டிங், இஐஎஸ் (EIS) உடனான 13 மெகாபிக்சல் ரியர் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. அது 30எஃப்பிஎஸ்-இல் ஃபுல்எச்டி ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இது வைஃபை மாறுபாட்டில் மட்டுமே வாங்க கிடைக்கிறது

ஆடியோவைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டில் 3.5மிமீ ஆடியோ ஜாக் இடம்பெறவில்லை. ஏனென்றால் இந்த டேப்லெட் ஒன்பிளஸ் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்பட்ஸ்களை விளம்பரப்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தினை கொண்டுள்ளது. ஒருவேளை கோ வேரியண்ட்டில் 3.5மிமீ ஆடியோ ஜாக் பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Working On New Android Tablet in Affordable Price All You Need Yo Know About OnePlus Pad Go
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X