அட OnePlus Mini Phone கிடக்குது.. முதல்ல இந்த OnePlus Mini Watch-ஐ பாருங்க.. எப்போ அறிமுகம்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஒன்பிளஸ் 13 சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் 13 மினி அல்லது ஒன்பிளஸ் 13டி என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என்கிற எதிர்பார்ப்புகள் ஒருபக்கம் எகிறிக்கொண்டே இருக்க.. மறுபக்கம் இந்நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலின் புதிய மினி வேரியண்ட்டை (OnePlus Watch 3 Mini Variant) , இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது
முன்னதாக வெளியான ஒரு லீக் போஸ்டர் வழியாக, ஒப்போ வாட்ச் எக்ஸ்2 (Oppo Watch X2) மற்றும் ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலின் மினி வேரியண்ட் உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல் கிடைத்தது. தற்போது, மினி ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலின் இந்திய வெளியீடு (OnePlus Watch 3 Mini India Launch) நினைத்ததை விட விரைவில் நடக்கலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

ஒன்பிளஸ் வாட்ச் 3 மினி மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? மினி வேரியண்ட் 43மிமீ அளவு (43mm size) கொண்ட மாடலாக இருக்கலாம் என்றும் இந்த புதிய மாடலில் 18மிமீ ஸ்ட்ராப் (18mm Strap) இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி இதன் அம்சங்கள் 46மிமீ அளவில் அறிமுகமான ஒன்பிளஸ் வாட்ச் 3 ( (OnePlus Watch 3 46mm size) மாடலுடன் ஒற்றுப்போகலாம்.
ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களை உள்ளடக்கிய ஒன்பிளஸ் 13 சீரிஸின் கீழ் ஒன்பிளஸ் 13 மினி அல்லது ஒன்பிளஸ் 13டி என்கிற மாடல், 2025 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் (2025 Q3) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2025 ஏப்ரல் - ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் 13 மினி என்ன ஸ்பெஷல் ஆக இருக்கும்? நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர்களில் ஒருவரா டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸில் இருந்து வரவிருக்கும் "சிறிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்" (Small Flagship Smartphone) ஆனது உயர்நிலை செயல்திறன் (High-end performance) மற்றும் நீண்ட பேட்டரி லைஃப்பை (Long battery life) வழங்கும்.
மேலும் ஒன்பிளஸ் 13 மினி அல்லது ஒன்பிளஸ் 13டி மாடல் ஆனது இன்டர்நேஷனல் ஆஸ்தெட்டிக் (International aesthetic) உடனான மிகவும் சிம்பிள் ஆன கேமரா யூனிட்டை (Simple Camera Unit) கொண்டிருக்கும் என்றும், இது பார்ப்பவர்களை டக்கென்று ஈர்க்கும் படியான.. மிகவும் அழகான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்பிளஸ் 13 மினி அல்லது ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் OnePlus 13 Mini Or OnePlus 13T Price Expected)? லீக் ஆன விவரங்களின் படி, ஒன்பிளஸ் 13 மினி அல்லது ஒன்பிளஸ் 13டி ஆனது மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பவர்டு ஸ்மார்ட்போனாக சந்தையில் நிலைநிறுத்தப்படலாம்.
இது சுமார் 3,000 யுவான்களுக்கு (415 அமெரிக்க டாலர்கள் - இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.36,000 க்கு) அறிமுகம் செய்யப்படலாம். தற்போதைக்கு 3,099 யுவான் என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கும் ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரேஸிங் எடிஷன் (Realme GT 7 Pro Racing Edition) ஸ்மார்ட்போன் தான், சீனாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பவர்டு ஸ்மார்ட்போனாக உள்ளது; ஒன்பிளஸ் இதை முறியடிக்க விரும்புவது போல் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








