ஒன்பிளஸ் வாட்ச் 2 டிசைன்ல அவ்வளவு சீன் இல்லை.. ஆனா ஸ்பெக்ஸ்ல கெத்தா அலறவிட்டாங்க.. அப்படி என்ன இருக்கு?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அடுத்த மாதம் அதன் புதிய ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) சாதனமான ஒன்பிளஸ் வாட்ச் 2 (OnePlus Watch 2) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாகவே இந்த ஸ்மார்ட்வாட்சின் புகைப்படம் மற்றும் சிறப்பம்ச தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் வாட்ச் 2 (OnePlus Watch 2) சாதனத்தின் புகைப்படங்கள் இந்த டிவைஸ் வட்ட வடிவ டயல் டிஸ்பிளே (round dial display) உடன் வருகிறது என்பதை நமக்கு தெளிவாக காண்பித்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த, அதன் முதல் ஸ்மார்ட்வாட்ச் சாதனமான ஒன்பிளஸ் வாட்ச் 1 (OnePlus Watch 1) மாடல் கூட வட்ட வடிவ டயலை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நிறுவனம் மீண்டும் அதன் முந்தைய மாடலின் தோற்றத்தை அப்படியே பின் தொடர்ந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால், புதிய ஒன்பிளஸ் வாட்ச் 2 சாதனத்தில் நிறுவனம் சில மாற்றங்களை செய்துள்ளது. சில மேம்படுத்தல்களையும் செய்துள்ளது. வரவிருக்கும் இந்த புதிய ஒன்பிளஸ் வாட்ச் 2 சாதனத்தின் சிறப்பம்ச (OnePlus Watch 2 specifications) விபரங்களும் இணையத்தில் இப்போது லீக் ஆகியுள்ளது.
ஒன்பிளஸ் வாட்ச் 2 (OnePlus Watch 2):
OnePlus ஆனது அதன் புதிய OnePlus வாட்ச் 2 உடன் ரவுண்ட் டயல் டிசைனுடன் தொடர்வது போல் தெரிகிறது. இதை மைஸ்மார்ட்பிரைஸ் (MySmartPrice) இன் மூலம் வெளிவந்த 5K ரெண்டர்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஒன்பிளஸ் வாட்ச் 2 சாதனத்தின் ஒரு பக்கத்தில் அசாதாரண ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்ற பகிள் கொண்ட ஸ்மார்ட்வாட்சின் முழு வடிவமைப்பையும் ரெண்டார் புகைப்படங்கள் காண்பித்துள்ளன.
ஒன்பிளஸ் வாட்ச் 2 இல் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம் (OnePlus Watch 2 Specifications):
ஒன்பிளஸ் வாட்ச் 2 ஸ்மார்ட்வாட்ச்சின் முக்கிய விவரக்குறிப்புகளையும் சமீபத்திய லீக் தகவல் சுட்டிக்காட்டியுள்ளது. இதில் ஒன்பிளஸ் வாட்ச் 2 ஸ்மார்ட்வாட்ச் ஒரு பக்கத்தில் ஸ்பீக்கர் கிரில் மற்றும் மறுபுறம் இரண்டு பட்டன்களைக் கொண்டிருக்கும் என்பதை காட்டியுள்ளது. நாம் எதிர்பார்த்ததை போலவே ஒன்பிளஸ் வாட்ச் 2 ஸ்மார்ட்வாட்ச் 1.43' இன்ச் உடன் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.
ஸ்னாப்டிராகன் W5 Gen 1 சிப்செட் Snapdragon W5 Gen 1 SoC):
இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் W5 Gen 1 சிப்செட் (Snapdragon W5 Gen 1 SoC) ஆதரவை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இது தனிப்பயன் RTOS இயங்குதளத்தைத் தக்கவைத்துக்கொள்ள கூடிய திறனுடன் வரும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் சமீபத்திய சிப்செட்டைக் கொண்டிருக்கும் போது, OnePlus சாதனத்தை மேம்படுத்துவது அசாதாரணமானது.
எனவே, OnePlus Watch 2 சாதனம் கூகுளின் வியர் ஓஎஸ் (Google wearOS) உடன் வரலாம் என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் வாட்ச் 2 ஸ்மார்ட்வாட்ச் இன் அதிகாரப்பூர்வ வெளியீட்டைப் பொறுத்தவரை, OnePlus வாட்ச் 2 வரும் 2024 இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனுடன் இது வெளிவரலாம்.
ஓன்பிளஸ் 12 (OnePlus 12):
எது எப்படியிருந்தாலும், அடுத்த மாத தொடக்கத்தில் ஒன்பிளஸ் 12 பற்றிய கூடுதல் விபரங்கள் நமக்கு தெரிய வரும். வரவிருக்கும் OnePlus ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டிசம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் பெரிஸ்கோப் ஜூம் கேமராவுடன் அதன் முன்னோடியை விட மிகவும் பிரகாசமான டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிராண்ட் அதன் வழக்கமான வெளியீட்டு காலவரிசையைப் பின்பற்றினால், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா போன்ற உலகளாவிய சந்தைகளுக்கு இந்த ஒன்பிளஸ் 12 சாதனம் வரலாம். இத்துடன் சேர்த்து ஒன்பிளஸ் வாட்ச் 2 சாதனமும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications