ஒரே ஒரு போஸ்ட்.. டோட்டல் உலகமும் ஆஃப்.. களத்தில் சம்பவம் செய்ய OnePlus Watch 2 ரெடி.. என்ன ஸ்பெக்ஸ்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம், அதன் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனமான ஒன்பிளஸ் வாட்ச் 2 (OnePlus Watch 2) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வாட்ச் பற்றிய சிறப்பம்ச தகவல்கள் இதோ.
OnePlus Watch 2: ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஸ்மார்ட்வாட்ச் கேட்டகிரியை இந்த முதல் ஸ்மார்ட்வாட்ச் உடன் தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை ஒன்பிளஸ் வாட்ச் என்ற பெயருடன் அறிமுகம் செய்தது. இப்போது நிறுவனம் அதன் ஸ்மார்ட்வாட்ச் போர்ட்போலியோவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.

இரண்டாவது ஒன்பிளஸ் வாட்ச்: ஒன்பிளஸ் நிறுவனம் அதன் இரண்டாவது ஸ்மார்ட்வாட்ச்சான புதிய OnePlus Watch 2 வாட்ச் சாதனத்தை அதன் சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக இப்போது டீஸ் செய்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் அல்லது இரண்டாவது ஸ்மார்ட்வாட்ச் சாதனம் என்று அழைக்கப்படும் சாதனம் ஒன்பிளஸ் வாட்ச்சின் வாரிசாக வெளிவருகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒன்பிளஸ் டீசர்: இதை நிறுவனம் ஒன்பிளஸ் வாட்ச் 2 (OnePlus Watch 2) என்ற பெயருடன் அறிமுகம் செய்யவுள்ளதாக அந்த டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் வாட்ச் 2 சாதனத்தை "இட்ஸ் அபௌட் டைம்" (It's about time) என்ற புதிய குறிப்புடன் ஸ்மார்ட்வாட்ச்சின் புதிய டீசரை ஒன்பிளஸ் இப்போது வெளியிட்டுள்ளது. இது இப்போது ஸ்மார்ட்வாட்ச் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அறிமுகம் எப்போது? நம்பகமான டிப்ஸ்டர் மேக்ஸ் ஜாம்போரின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் வாட்ச் 2 என்ற புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் WearOS இயங்குதளத்தில் இயங்கும் என்று கூறியுள்ளார். இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனம் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் அறிமுகமாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தெரியாதவர்களுக்கு, ஒன்பிளஸ் கம்யூனிட்டியில் (OnePlus Community) போட்டி நடைபெற்று வருகிறது.

ஒன்பிளஸ் வாட்ச் (OnePlus Watch): இந்த போட்டிக்கான இறுதி தேதியுடன் இந்த அறிமுக தேதி ஒத்துப்போகிறது. ஆகையால், நிறுவனத்தின் ஒன்பிளஸ் வாட்ச் 2 அறிமுகம் இதே தேதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்திற்கு முன்பாக, வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் வாட்ச் 2 சாதனத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. அதுபற்றிய கூடுதல் பார்வை இதோ.
ஒன்பிளஸ் வாட்ச் 2 சிறப்பம்சம்: முந்தைய லீக் தகவலின் படி, ஒன்பிளஸ் வாட்ச் 2 சாதனமானது 1.43″ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது 1.39″ இன்ச் OLED டிஸ்பிளேவுடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வட்ட டயலைத் தக்கவைத்து, மெட்டல் கேசிங் அம்சம், பக்கவாட்டில் இரண்டு பட்டன்கள், ப்ளூடூத் அழைப்பிற்கான ஸ்பீக்கர் கிரில்போன்ற அம்சங்களை வழங்கும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது.
GPS இருக்கா? இது GPS, 5ATM + IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் அம்சத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், இது RTOS க்கு பதிலாக WearOS இயங்குதளத்துடன் இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முதல் OnePlus வாட்ச்சில் உள்ள 402mAh பேட்டரியுடன் ஒப்பிடும்போது, இது பெரிய பேட்டரியை பேக் செய்ய கூடும் என்று நம்பப்படுகிறது.
விலை என்ன? OnePlus நிறுவனம் இப்போது இந்தியாவிலும் அதே டீசரை வெளியிட்டுள்ளது. எனவே இந்திய சந்தைக்கான விலை மற்றும் விற்பனை தேதி MWC 2024 நிகழ்வில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் Samsung Galaxy Watch 6 தொடர் மற்றும் Google Pixel Watch 2 உடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மலிவாக இருக்குமா? என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications