Home
News

OnePlus வயர்லெஸ் சார்ஜரில் கிடைக்கும் அந்த அம்சம் என்னவென்று தெரியுமா?

ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஏப்ரல் 14ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியாகச் சொன்னால் இன்னும் ஒரு வாரத்தில் உலக அளவில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. வெளியான கசிவுகளின்படி, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட் போனில் நீண்டகாலமாகக் கோரப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் முறையாக வயர்லெஸ் சார்ஜிங் அம்சம்

முதல் முறையாக வயர்லெஸ் சார்ஜிங் அம்சம்

முதல் முறையாக ஒன்பிளஸ் நிறுவனம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை நம்மால் காண முடியுமென்று ஒரு தகவல் முன்பிலிருந்தே வலைத்தளங்களில் லீக் ஆகிவருகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் சார்ஜிங் அம்சத்திற்கு வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜர் என்று பெயரிடப்பட்டுள்ளதை நாம் ஏற்கனவே அறிவோம், ஆனால் டெக்டிராய்டரில் உள்ளவர்கள் இன்று அதன் சில முக்கிய அம்சங்களை வெளிச்சம் போட்டுள்ளனர்.

30W இல் சார்ஜ் செய்யும் வயர்லெஸ் சார்ஜரா?

30W இல் சார்ஜ் செய்யும் வயர்லெஸ் சார்ஜரா?

முதலாவதாக, பெயர் குறிப்பிடுவது போல, வயர்லெஸ் சார்ஜர் ஒன்ப்ளஸ் 8 ப்ரோவை 30W இல் சார்ஜ் செய்யும் - இது நிறுவனத்தின் வயர்டு சார்ஜரின் அதே வேகம் என்பது குறிப்பிடத்தக்கது. வார்ப் சார்ஜிங் அம்சத்தின் படி சாதனம் 30 நிமிடங்களுக்குள் 0% முதல் 50% வரை சார்ஜ் செய்யப்படும் மற்றும் 80 நிமிடங்களில் 100% வரை சார்ஜ் செய்யப்படும். இதே வேகத்தில் புதிய வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜர் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்!

அந்த சூப்பர் அம்சம் இதுதானா?

அந்த சூப்பர் அம்சம் இதுதானா?

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 4,510 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜர் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. வயர்லெஸ் சார்ஜரின் வடிவமைப்பு ஆன்லைனில் இன்னும் வெளிவரவில்லை, உள்ளே குளிரூட்டும் கூலிங் பேன் விசிறி இடம்பெற்றுள்ளது என்ற தகவல் மட்டும் இப்போது வெளியாகியுள்ளது.

அந்த முக்கியமான சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றா?

அந்த முக்கியமான சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றா?

இந்த வயர்லெஸ் சார்ஜர் கூலிங் பேன் உங்கள் ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் வயர்லெஸ் சார்ஜர் இரண்டையும் அதிக வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வயர்லெஸ் சார்ஜரின் சிறந்த அம்சங்களில் ஒன்று "AI ஸ்லீப் பயன்முறை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI ஸ்லீப் பயன்முறை என்ன செய்யும் தெரியுமா?

AI ஸ்லீப் பயன்முறை என்ன செய்யும் தெரியுமா?

இது ஒன்பிளஸ் வயர்லெஸ் சார்ஜருக்குள் இருக்கும் கூலிங் பேன் விசிறியை சாதனம் முழுமையாக சார்ஜ் செய்தப்பின் இரவில் தானாகவே ஆஃப் செய்து வயர்லெஸ் சார்ஜரை ஸ்லீப் மோட்டிற்கு கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.டெக்டிராய்டரின் தகவல் இந்த வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜரின் வெளியீட்டு விலையைத் தோராயமாகக் குறிப்பிட்டுள்ளது.

வயர்லெஸ் சார்ஜரின் விலை

வயர்லெஸ் சார்ஜரின் விலை

ஒன்பிளஸ் ரசிகர்கள் மற்றும் அனைவரும் எதிர்பார்க்கும் இந்த ஒன்பிளஸ் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜரின் விலை சுமார் 70 யூரோக்கள், அதாவது இந்திய மத்தின்படி சுமார் ரூ.5,750 இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், எப்போது இது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என்ற விவரங்களை அறிய, நாம் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்காகக் காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
OnePlus Warp Charge 30 Wireless Charger Expected to Feature Cooling Fan : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X