Home
News

முதல் முறையாக போல்டபில் போனை அறிமுகம் செய்கிறதா OnePlus? OnePlus சாம்ராஜ்யத்தின் புது Phone!

இந்த வருடம் யாருக்கு அதிர்ஷ்டம் அடித்ததோ இல்லையோ தெரியவில்லை, ஆனால், ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்திற்கு அமோக அதிர்ஷ்டம் அடித்துவிட்டது என்று தான் நாம் கூற வேண்டும். காரணம், நிறுவனம் இந்த வருடம் அறிமுகம் செய்த அணைத்து சாதனங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

ஒன்பிளஸ் (OnePlus) இந்த வரும் ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து ஒன்பிளஸ் வரிசையில் முதல் டேப்லெட் சாதனமாக நிறுவனம் ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) சாதனத்தை அறிமுகம் செய்தது. பிறகு, பட்ஜெட் பிரியர்களை குஷியடைய செய்யும் விதத்தில் நிறுவனம் ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) சாதனத்தை அறிமுகம் செய்து அசத்தியது.

முதல் முறையாக போல்டபில் போனை அறிமுகம் செய்கிறதா OnePlus?

இப்போது இந்த வரிசையில் நிறுவனம் விரைவில் மற்றொரு புது சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் அதன் முதல் போல்டபில் ஸ்மார்ட்போனை வெளியிட தயாராகி வருகிறது. இந்த ஒன்பிளஸ் போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனம் தான் OnePlus பிராண்டின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டிவைஸ் ஆக அறிமுகமாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்பதை முன்னதாக OnePlus உறுதிப்படுத்தியது.

ஆனால், டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர் வரவிருக்கும் ஒன்பிளஸ் போல்டபில் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு காலவரிசை தகவலை இப்போது வெளியிட்டுள்ளார். இவருடைய ட்வீட் படி, இந்த புதிய ஒன்பிளஸ் போல்டபில் ஸ்மார்ட்போன் (OnePlus Foldable Smartphone) வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாத இடைவெளியில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும்.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 மற்றும் கூகுள் பிக்சல் ஃபோல்டு ஆகியவற்றின் வெளியீட்டிற்குப் பிறகு இது அதிகாரப்பூர்வமாகச் செல்லும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வதந்திகளின் படி, OnePlus நிறுவனம் இந்த போனை OnePlus V Fold என அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது ஃபிளிப் பதிப்பில் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வரவிருக்கும் OnePlus ஃபோல்டபிள் பற்றிய அறியப்பட்ட விவரங்களைப் பார்ப்போம்.

முதல் முறையாக போல்டபில் போனை அறிமுகம் செய்கிறதா OnePlus?

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2023 இன் போது, ​​நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாதனம் பற்றிய தகவலை வெளியிட்டது. இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும் உறுதி செய்தது. இது இப்போது ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனால், சரியான தேதி இன்னும் வெளியாகவில்லை. இது சீனாவில் அறிமுகமான ஒப்போ பைண்ட் N2 (OPPO Find N2) போனின் இன் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாககும்.

தெரியாதவர்களுக்கு OnePlus கடந்த ஆண்டு OPPO உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இரண்டு போன்களுக்கும் இடையே சில ஒற்றுமைகளை நாம் காணலாம். இருப்பினும், இது OPPO Find N2 இன் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாக இருக்குமா அல்லது வெவ்வேறு விவரக்குறிப்புகளைக் கொண்டிருக்குமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்னும் சில தினங்களில் சில முக்கிய விபரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus V Fold a New Foldable Smartphone Tipped To Launch In August
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X