தலைவன் இறங்கிட்டான்.. OnePlus கெத்தா வெளியிடும் முதல் ஃபிலிப் போன்.. எதிர்பார்ப்பு எகுறுகிறது.. விலை என்ன?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் விரைவில் அதன் முதல் ஒன்பிளஸ் ஃபிலிப் ஸ்மார்ட்போன் (OnePlus flip smartphone) சாதனத்தை அறிமுகம் செய்யுமென்று தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் தயாரிப்பு வரிசையில் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone), பட்ஜெட் ஸ்மார்ட்போன் (budget smartphone), போல்டபில் ஸ்மார்ட்போன் (foldable smartphone) என்று பல பிரிவுகளை கொண்டுள்ளது. இன்னும் ஒன்பிளஸ் நிறுவனம் என்டர் ஆகாத செக்மென்ட் என்றால், அது கிளாம்ஷெல் ஃபிலிப் ஸ்மார்ட்போன் (clamshell flip smartphone) சாதன பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஒன்பிளஸ் ஃபிலிப் ஸ்மார்ட்போன் பற்றிய விபரங்கள் இதோ.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் ஃபிலிப் ஸ்மார்ட்போன் சாதனத்தை உருவாக்கி வருவதாக டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய கிளாம்ஷெல் ஃபிலிப் ஸ்மார்ட்போன் சாதனத்தை ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் வி ஃபிலிப் (OnePlus V Flip) என்ற பெயருடன் அறிமுகம் செய்யலாம் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

OnePlus-ன் முதல் ஃபிலிப் ஸ்மார்ட்போன் ரெடியா? எப்போது அறிமுகம்?
சமீபத்தில் வெளியான தகவலின் படி, இந்த புதிய ஒன்பிளஸ் வி ஃபிலிப் ஸ்மார்ட்போன் (OnePlus V Flip Smartphone) சாதனம் வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது ஜூன் ஆகிய இடைப்பட்ட காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஒன்பிளஸ் ஃபிலிப் ஸ்மார்ட்போன் நேரடியாக சாம்சங் (Samsung), மோட்டோரோலா (Motorola) மற்றும் டெக்னோ (Tecno) போன்ற பிராண்டுகளின் பிலிப் போன்களுடன் நேரடியாக போட்டியிடும்.
இப்போது பிலிப் ஸ்மார்ட்போன் சந்தையில், சாம்சங் கேலக்ஸி Z பிலிப் சீரிஸ் (Samsung's Galaxy Z Flip series), மோட்டோரோலா ரேஸர் (Motorola Razr) மற்றும் டெக்னோ பிலிப் போன் (Tecno flip phone) போன்ற மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவை ஏற்கனவே பிரீமியம் தரத்தில், நிலையான விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஒன்பிளஸ் வி ஃபிலிப் ஸ்மார்ட்போன் (OnePlus V Flip Smartphone):
ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்யவிருக்கும் அதன் முதல் ஃபிலிப் ஸ்மார்ட்போன் சாதனமான ஒன்பிளஸ் வி ஃபிலிப் ஸ்மார்ட்போன் சாதனத்தை மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஸ்மார்ட்போனாக உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் இப்போது மாட்டியுள்ளது. மற்றொரு லீக் தகவலில் ஒன்பிளஸ் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய பிலிப் ஸ்மார்ட்போன் ஒப்போ பிராண்டின் மருவடிவமைப்பு செய்யப்பட்ட Oppo Find N5 Flip போனாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எது எப்படியாக இருந்தாலும், ஒன்பிளஸ் நிறுவனம் அப்படியே Oppo Find N5 Flip போனை பெயர் மட்டும் மாற்றி விற்பனை செய்யாது என்று நம்பப்படுகிறது. ஆகையால், புதிய போனை நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு நடுவே ஒன்பிளஸ் நிறுவனம் அதன் போல்டபில் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய சாதனமான ஒன்பிளஸ் ஓபன் 2 (OnePlus Open 2) சாதனத்தை வெளியிட தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்பிளஸ் ஓபன் 2 (OnePlus Open 2):
இந்த புதிய OnePlus Open 2 சாதனத்தில் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite SoC) உடன் மேம்படுத்தப்பட்ட 5700mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஹசல்பிளாட் டியூன் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட 50MP ட்ரிபிள் அல்லது குவாட் கேமராவையம் இந்த போன் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் 2025 ஆம் ஆண்டின் காலாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிலிப் ஸ்மார்ட்போன் சாதனத்தின் அம்சங்களை கூட்டி, விலையை குறைத்து அறிமுகம் செய்தால், சாம்சங், மோட்டோரோலா மற்றும் டெக்னோ போன்ற பிராண்டுகளின் பிலிப் போன் பிரிவு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட அதிக வாய்ப்புள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய Flip போனை ரூ. 32,999 விலை முதல் வழங்கலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications