Home
News

OnePlus Nord 2T இந்திய விலை நிர்ணயம் இவ்ளோ தானா? எப்போது அறிமுகமாகும்?

இந்தியாவில் நல்ல முறையில் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால்.. பெரும்பாலான இந்தியர்களின் கவனம் தன் மேல் திரும்ப வேண்டும் என்றால்.. சாம்சங், சியோமி, ரியல்மி போன்ற நிறுவனங்களை சமாளிக்க வேண்டும் என்றால்.. பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தே ஆக வேண்டும் என்கிற உண்மையை ஒன்பிளஸ் (OnePlus) புரிந்துகொண்டதன் விளைவாக உருவானதே - நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்!

ஒன்பிளஸின் அடுத்த நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன்!

ஒன்பிளஸின் அடுத்த நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன்!

நோர்ட் சீரீஸ் அறிமுகத்தின் விளைவாக, வெளிவந்தாலே அது ரூ.38,000 - ரூ.40,000 பட்ஜெட்டில் தான் என்றிருந்த ஒன்பிளஸின் பிம்பம் சுக்குநூறாக உடைந்தது. பட்ஜெட் வாசிகள் கூட - இன்னும் கொஞ்சம் காசு போட்டு - ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களையே வாங்கினால் என்ன என்றும் யோசிக்க தொடங்கினர்.

அப்படியான யோசனைகளின் வெற்றியாக, ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போனாக வெளிவரும் மாடல் தான் - ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி (OnePlus Nord 2T 5G).

க்ளோபல் மார்க்கெட்டில் அறிமுகம் ஆகிடுச்சு.. இந்தியாவில் இனிமேல் தான்!

க்ளோபல் மார்க்கெட்டில் அறிமுகம் ஆகிடுச்சு.. இந்தியாவில் இனிமேல் தான்!

மீடியாடெக் டைமன்சிட்டி 1300 எஸ்ஓசி கொண்டு இயங்கும் ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகமான நிலைப்பாட்டில், தற்போது வெளியாகியுள்ள ஒரு 'லீக்' தகவலின்படி, வருகிற ஜூன் 27 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்பது போல் தெரிகிறது. இந்த தகவலை நமக்கு அளித்தது, டிப்ஸ்டர் பராஸ் குக்லானி (@passionategeekz) ஆவார்.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? என்கிற தகவலையும் அவர் லீக் செய்து உள்ளார். அதுகுறித்த விவரங்களை பார்க்கும் முன் ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி பார்த்துவிடலாம்.

இந்திய வேரியண்ட்டில் வேறுபட்ட அம்சங்களை எதிர்பார்க்கலாமா?

இந்திய வேரியண்ட்டில் வேறுபட்ட அம்சங்களை எதிர்பார்க்கலாமா?

வாய்ப்பில்லை ராஜா! ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் ஆனது ஐரோப்பாவில் அறிமுகமான வேரியண்ட்-ஐ போலவே தான் இருக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி-யின் க்ளோபல் வேரியண்ட் ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 12.1 கொண்டு இயங்குகிறது மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கும் 6.43-இன்ச் ஃபுல்-எச்டி+ அமோஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மேலும் இதன் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் பேக் செய்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இது மீடியாடெக் டைமன்சிட்டி 1300 SoC உடனாக 12ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமரா செட்டப், பேட்டரி லைஃப் எப்படி இருக்கும்?

கேமரா செட்டப், பேட்டரி லைஃப் எப்படி இருக்கும்?

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஆனது 50 மெகாபிக்சல் சோனி IMX766 மெயின் சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெற்றுள்ளது. இதன் கேமரா யூனிட்டில் 8 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 355 சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சாரும் அடக்கம்.

செல்பீக் கேமராவை பொறுத்தவரை, இது 32 மெகாபிக்சல் சோனி IMX615 சென்சார்-ஐ பெற்றுள்ளது. மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஆனது 256ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜை வழங்குகிறது. பேட்டரி மற்றும் சார்ஜிங்-ஐ பொறுத்தவரை, இது 80W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,500mAh பேட்டரியை வழங்குகிறது.

என்ன விலைக்கு வரும்?

என்ன விலைக்கு வரும்?

வெளியான லீக் தகவலின்படி, ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.28,999 க்கும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.31,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

இது க்ரே ஷேடோ மற்றும் ஜேட் ஃபாக் வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

அறிமுகத்தின் போது என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?

அறிமுகத்தின் போது என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் நோர்ட் 2டி 5ஜி மாடலின் அறிமுகத்தின் போது, சில தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளின் மீது ரூ.4000 வரையிலான கேஷ்பேக் சலுகையை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விற்பனையை பொறுத்தவரை, நோர்ட் 2டி 5ஜி ஆனது ஜூலை 3 முதல் ஜூலை 5 க்குள் ஏதாவது ஒரு தேதியில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் தொடர்பான எந்தவொரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனவே நாம் மேற்கண்ட அனைத்து தகவலையும் மேலோட்டமாக எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கிறோம். அதிகாரப்பூர்வ தகவல் ஏதேனும் கிடைக்கும் பட்சத்தில் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
OnePlus's next budget smartphone could be OnePlus Nord 2T may launch soon in India, Check the Expected launch date in India, the Expected Price in India, and the Specifications.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X