மே 24: தரமான அம்சங்களுடன் வெளிவரும் புதிய 40-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.! அம்சங்கள்.!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டு வரும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளன என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வரும் மே 24-ம் தேதி தனது புதிய ஒன்பிளஸ் டிவி 40Y1 (OnePlus TV40Y1) மாடலை அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

ஒன்பிளஸ் டிவி 40 ஒய் 1 மாடல்
ஏற்கனவே ஒன்பிளஸ் டிவி 32 ஒய் 1 மற்றும் ஒன்பிளஸ் டிவி 43 ஒய் 1 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் ஒன்பிளஸ் டிவி 40 ஒய் 1 மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடலும் தனித்துவமான அம்சங்களுடன்
வெளிவரும்.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் டிவி 32 ஒய் 1 மாடல் ரூ.15,999-க்கும், ஒன்பிளஸ் டிவி 43 ஒய் 1 மாடல் ரூ.26,999-க்கு வாங்க கிடைக்கிறது. எனவே வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் டிவி 40 ஒய் 1 மாடல் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஆன்லைனில் வெளிவந்த ஒன்பிளஸ் டிவி 40 ஒய் 1 மாடலின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

1,920x1,080 பிக்சல்கள்
ஒன்பிளஸ் டிவி 40 ஒய் 1 மாடல் ஆனது 40-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். பின்பு 1,920x1,080 பிக்சல்கள், டிசிஐ-பி 3 கலர் கேமட்,பெசல்லெஸ் வடிவமைப்பு, காமா எஞ்சின் பிக்சர் என்ஹான்சர் (93 சதவீத கவரேஜ்) உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி..

ஆண்ட்ராய்டு டிவி 9
ஒன்பிளஸ் டிவி 40 ஒய் 1 மாடலில் 64 பிட் ப்ராசஸர் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு டிவி 9 அடிப்படையிலான ஆக்ஸிஜன் பிளேவில் இயங்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஅந்நிறுவனம்.

Chromecast ஆதரவு
ஒன்பிளஸ் டிவி 40 ஒய் 1 சாதனத்தில் Chromecast ஆதரவு, Google Play ஸ்டோர் அணுகல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளது. மேலும் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இதுதவிர யூடியூப், ப்ரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆப் வசதிகளை இந்த ஒன்பிளஸ் டிவி 40 ஒய் 1 மாடலில் பயன்படுத்த முடியும். பின்பு இரண்டு 20 வாட் ஸ்பீக்கர்கள் ஒன்பிளஸ் டிவி 40 ஒய் 1 மாடலில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக டால்பி ஆடியோ ஆதரவு வழங்கும் என்று கூறப்படுகிறது.

வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் வி 5, ஈத்தர்நெட் போர்ட், ஆர்எஃப் கனெக்ஷன் இன்புட், யுஎஸ்பி போர்ட், எச்.டி.எம்.ஐ போர்ட், ஒரு ஏ.வி இன், ஒரு டிஜிட்டல் ஆடியோ அவுட்புட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒன்பிளஸ் டிவி 40 ஒய் 1 மாடல்.


Click it and Unblock the Notifications