OnePlus TV U1S வாங்க போறீங்களா? அப்போ இந்த சலுகையை பார்த்திட்டு வாங்க முடிவு செய்யுங்கள்..
ஒன்பிளஸின் பிரீமியம் ஸ்மார்ட் டிவி தொடரான ஒன்பிளஸ் டிவி யு 1 எஸ் இந்த பண்டிகை காலத்தில் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி உங்களைக் கவர்ந்திழுக்க ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது டிஸ்ப்ளேவில் இருந்து தொடங்கி உங்கள் கைக்கு வந்து சேரும் விலை வரை எல்லாவற்றிலும் சிறப்பான விஷயங்களுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட் டிவியுடன் என்ன சலுகைகள் கிடைக்கிறது. எப்போது வாங்கலாம் என்பது போன்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒன்பிளஸ் டிவி யு 1 எஸ் 4K அல்ட்ரா-எச்டி ஸ்மார்ட் டிவி
இந்த ஸ்மார்ட் டிவி 4K அல்ட்ரா-எச்டி (UHD) தெளிவுத்திறன் கொண்ட திரையுடன் வருகிறது. இது HDR10+ சான்றிதழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பொருள் நீங்கள் உங்கள் டிவி திரையில் சிறந்த வண்ணங்களை மிக உயர்ந்த தரத்தில் பார்க்க முடியும் என்பதை இது உணர்த்துகிறது. உங்களுக்கான பிக்சர் அனுபவம் பல மடங்கு இதில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் டிவி யு 1 எஸ் மாடல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ. 43,999 விலையில் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கிறது.

50' இன்ச், 55' இன்ச் மற்றும் 65' இன்ச் மாடலுக்கு சலுகை எவ்வளவு?
இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் மூன்று வகைகள் உள்ளன, அது 50' இன்ச், 55' இன்ச் மற்றும் 65' இன்ச் ஆகிய அளவுகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியை ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு அல்லது இஎம்ஐ மூலம் வாங்க விரும்பும் நபர்களுக்கு ரூ. 3,000 உடனடி தள்ளுபடி விலை குறைப்பு கிடைக்கிறது. இதே சலுகை கோடக் வங்கி அட்டைதாரர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளுக்கு 10% கேஷ்பேக் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் உடன் ஆறு மாத கட்டணமில்லா இஎம்ஐ கிடைக்கிறது.

1 வருட உத்தரவாதத்துடன் வாங்க என்ன செய்ய வேண்டும்?
இந்த புதிய ஒன் பிளஸ் ஸ்மார்ட் டிவியின் விவரக்குறிப்புகளைப் பார்ப்போம், அது உண்மையில் சிறப்பானது தானா, அப்படி என்ன அம்சங்களை எல்லாம் நிறுவனம் இந்த டிவியுடன் வழங்குகிறது என்பதை என்பதைப் பார்ப்போம். ஒன்பிளஸ் டிவி யு 1 எஸ் விவரக்குறிப்புகள் மற்றும் விலை பற்றி பார்க்கலாம், முதலில், நீங்கள் ஸ்மார்ட் டிவியை நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து நேரடியாக வாங்கினால், அதை 1 வருட உத்தரவாதத்துடன் பெறலாம் என்பது அருமையான விஷயம்.

இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் விலை என்ன?
இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் 50' இன்ச் மாடல் ரூ .43,999 என்ற விலையிலும், இதன் 55' இன்ச் மாடல் ரூ .49,999 என்ற விலையிலும் மற்றும் இதன் 65' இன்ச் மாடல் ரூ .66,999 என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் டிவி யு 1 எஸ் ஆன்ட்ராய்டு டிவி இயங்குதளத்தில் ஆக்சிஜன் பிளே 2.0 உடன் இயங்குகிறது. இது ஒரு பிரீமியம் பெசல் வடிவமைப்பு உடன் வருகிறது. நாங்கள் முன்பே குறிப்பிட்டது போல இது 4K தரத்தை வழங்கும் டிஸ்பிளே பேனலுடன் வருகிறது. 65' இன்ச் மாடலில் 30W வெளியீடு கொண்ட நான்கு யூனிட் ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளது.

மூன்று மாடல்களிலும் உள்ள வேறுபாடு இது தானா?
மற்ற இரண்டு சிறிய வகை மாடல்களைப் பொறுத்தவரை (55' இன்ச் மற்றும் 50' இன்ச்) ஸ்மார்ட் டிவிகளில் 30W இன் அதே சக்தி வெளியீட்டைக் கொண்ட இரட்டை-யூனிட் ஸ்பீக்கருடன் வருகிறது. இவை அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கும் சிறந்த சலுகைகள் என்பதை மறக்க வேண்டாம். ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் இருந்து அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீப காலமாக ஒன்பிளஸ் இந்திய சந்தையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications