Home
News

மூன்று அளவு முறையான விலை: வேற லெவல் அனுபவம் கொடுக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி!

ஒன்பிளஸ் டிவி யூ1 எஸ் தொடர் ஸ்மார்ட்டிவி விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஒன்பிளஸ் யூ1 எஸ் எல்இடி ஸ்மார்டிவி தொடர் டால்பி ஆடியோ டைனடியோவுடன் இணைந்து 30 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்டிவியின் முக்கிய விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி விரைவில்

ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி விரைவில்

ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி விரைவில் யூ1 எஸ் தொடரை அறிமுகம் செய்ய உள்ளது. ஒன்பிளஸ் டிவி 40 ஒய் 1 ஸ்மார்ட்டிவி ரூ.21,999 விலையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் விரைவில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்டிவியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியின் முக்கிய விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் புதிய ஸ்மார்ட்டிவி

ஒன்பிளஸ் புதிய ஸ்மார்ட்டிவி

டிப்ஸ்டர் இஷன் அகர்வால் வெளியிட்ட தகவலின்படி, ஒன்பிளஸ் புதிய ஸ்மார்ட்டிவியை 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என மூன்று அளவுகளில் இது கிடைக்கும். மூன்று மாடல்களும் எல்இடி பேக்லிட் எல்இடி பேனல் 840 x 2160 பிக்சல்கள் 4கே தீர்மானத்துடன் வருகிறது. மேலும் இது எச்டிஆர்10+, எச்எல்ஜி மற்றும் எம்இஎம்சி உடன் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என கூறப்படுகிறது.

டால்பி ஆடியோ ஆதரவு

டால்பி ஆடியோ ஆதரவு

ஒன்பிளஸ் யூ1 எஸ் எல்இடி டிவி தொடர் டால்பி ஆடியோவுடன் டைனடியோவுடன் இணைந்து 30 வாட்ஸ் ஸ்பீக்கர்களோடு வருகிறது. மேலும் வெளிப்புற சாதனங்களை இணைக்க எச்டிஎம்ஐ 2.0 போர்ட்கள் இருக்கும். அதேபோல் ஸ்மார்ட்டிவி மென்பொருள் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் ஆதரவோடு வருகிறது. மேலும் இதில் ஸ்மார்ட் வாய்ஸ் கட்டுப்பாடு கூகுள் அசிஸ்டெண்ட் ஆதரவோடு வருகிறது. ஆக்ஸிஜன் ப்ளே உள்ளடக்க ஆதரவையும் கொண்டிருக்கிறது.

மைக்ரோஃபோன் மற்றும் கூகுள் டியோ வீடியோ அழைப்பு

மைக்ரோஃபோன் மற்றும் கூகுள் டியோ வீடியோ அழைப்பு

மேலும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி 1080 பிக்சல் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் மற்றும் கூகுள் டியோ வீடியோ அழைப்புகளுக்கான ஆதரவோடு டிவி கேமராவையும் வெளியிடும் என கூறப்படுகிறது. அதேபோல் நிறுவனம் டிவிகளோடு தொகுக்கப்பட்ட கேமரா அம்சமும் இருக்கிறது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி விலை

ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி விலை

மேலும் மைஸ்மார்ட் பிரைஸின் அறிக்கையின்., ரெட்மி எக்ஸ் தொடர் ஸ்மார்ட்டிவிகளை ஒப்பிடும்போது வரவிருக்கும் ஒன்பிளஸ் டிவிகள் இரண்டில் இருந்து மூன்று மடங்கு அதிகம் செலவாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவிகளின் விலை குறித்து பார்க்கையில் , இதன் 50 இன்ச் மாடல் இந்திய மதிப்பீடு விலை ரூ.36,999 ஆக இருக்கும் எனவும் 55 இன்ச் மாடல் இந்திய மதிப்பீடு விலை ரூ.42,999 ஆக இருக்கும் எனவும் 65 இன்ச் இந்திய மதிப்பீடு விலை ரூ.59,999 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்டிவிகள் மீடியாடெக் செயலி மற்றும் 2 ஜிபி ரேம், 16 ஜிபி உள்சேமிப்புடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் சேவை

அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் சேவை

ஸ்மார்ட் டிவி நிறுவனங்கள் உட்பட அனைத்து மின்னணு நிறுவனங்களும் சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் பெரும்பாலான ஸ்மார்ட்டிவிகள் பட்ஜெட் விலையிலேயே அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் டிவி வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் சேவையால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். பட்ஜெட் விலையிலான சிறந்த ஸ்மார்ட் டிவிகள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Oneplus TV U1s Series May Launching Soon with these Specification: Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X