செப்டம்பர் 26: ஒன்பிளஸ் டிவி மற்றும் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் செப்டம்பர் 26-ம் தேதி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் ஒன்பிளஸ் டிவி மற்றும் ஒன்பிளஸ் 7டி சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது, மேலும் இந்த சாதனங்கள் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

எட்டு ஸ்பீக்கர்

குறிப்பாக ஒன்பிளஸ் டிவி அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி எட்டு ஸ்பீக்கர்ளை கொண்டிருக்கும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்பீக்கர்கள் அனைத்து 50வாட்ஸ் அவுட்புட்-ஐ உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த அம்சங்கள் சியோமி ஸ்மார்ட் டிவிகளில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

55' இன்ச், 64' இன்ச்

வெளியாகவுள்ள மாடல்கள் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி பற்றி வெளியாகியுள்ள தகவலின்படி, புதிய ஸ்மார்ட் டிவிகள் 43' இன்ச், 55' இன்ச், 64' இன்ச் மற்றும் 75' இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் 55Q1IN, 43Q2IN, 65Q2CN, 75Q2CN, மற்றும் 75Q2US என்ற மாடல் எண்களுடன் தனது ஸ்மார்ட் டிவிகளை பதிவு செய்துள்ளது என்பதும் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Vu 'அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி' அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

4K HDR ஆதரவு

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள், 4K HDR ஆதரவுடன் கூடிய ஒரு இன்பில்ட் ஸ்மார்ட் AI சேவையுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒன்பிளஸ் வெளியிடப்போகும் ஸ்மார்ட் டிவி வெறும் ஸ்மார்ட் டிவி அல்ல என்பது உறுதியாகியுள்ளது.

மீடியாடெக் எம்டி 5670எஸ்ஒசி

வெளியாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆனது மாலி ஜி51 ஜி.பீ.யு உடனான மீடியாடெக் எம்டி 5670எஸ்ஒசி செயலி கொண்டு இயங்கும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு பயத்தை கண்ணில் காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.!

ரூ.40,000 முதல் ரூ.50,000

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் அமேசான் தளத்தில் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.40,000 முதல் ரூ.50,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட் டிவி 5ஜி இணக்கத்துடன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது தகவல் வட்டாரம். மேலும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியுடன் தனது ஒன்பிளஸ் 7டி சிரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus TV, OnePlus 7T series confirmed to launch in India on September 26 and more details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X