OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!

|

Amazon, Flipkart, Xiaomi, Samsung போன்ற முன்னணி பிராண்ட்கள் அனைத்தும் இப்போதே அதன் பண்டிகை கால சிறப்பு விற்பனை தேதிகளை அறிவிக்கத் துவக்கி, இன்னும் 2 நாட்களில் விற்பனைக்கே தயாராகி வரும் நிலையில், OnePlus பிராண்ட் இப்போது அதன் இந்திய ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை குஷி அடையச் செய்யும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலம், OnePlus நிறுவனம் அதன் தீபாவளி சிறப்பு விற்பனை தேதிகளை அறிவித்து, சலுகை விபரங்களை உறுதிப்படுத்தியுள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போல, ஒன்பிளஸ் சிறப்பு விற்பனை

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போல, ஒன்பிளஸ் சிறப்பு விற்பனை

ஆம், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போல, ஒன்பிளஸ் பிராண்ட்டும் அதன் சிறப்பு விற்பனை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன் படி, இந்த சிறப்பு விற்பனை வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அமேசான் பிரைம் மெம்பர்களுக்கான அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையும் இதே நாளில் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

OnePlus ஸ்மார்ட்டிவி, OnePlus ஸ்மார்ட்போன் மீது அபார தள்ளுபடியா?

OnePlus ஸ்மார்ட்டிவி, OnePlus ஸ்மார்ட்போன் மீது அபார தள்ளுபடியா?

OnePlus அறிவித்துள்ள இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையில், அதன் பலதரப்பட்ட தயாரிப்புகள் மீது நம்ப முடியாத சலுகையை நிறுவனம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, OnePlus பிராண்டின் கீழ் வரும், OnePlus ஸ்மார்ட்டிவி, OnePlus ஸ்மார்ட்போன், OnePlus இயர்பட்ஸ் மற்றும் அக்சஸரீஸ் போன்ற தயாரிப்புகள் மீது தாராளமான தள்ளுபடியை நிறுவனம் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!

ரூ.9,000 விலை வரம்பு முதல் புது OnePlus ஸ்மார்ட் டிவிகள் கிடைக்குமா?

ரூ.9,000 விலை வரம்பு முதல் புது OnePlus ஸ்மார்ட் டிவிகள் கிடைக்குமா?

குறிப்பாக OnePlus ஸ்மார்ட் டிவிகள் ரூ.9,000 விலை வரம்பு முதல் கிடைக்கும் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதேபோல், OnePlus இன் ஸ்மார்ட்போன்கள் மீதும் தாராளமான தள்ளுபடி கிடைக்கும் என்பதை நிறுவனம் உறுதியளித்துள்ளது. இத்துடன், சில வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளுடன் வாடிக்கையாளர்கள், அவர்களுக்குப் பிடித்த OnePlus தயாரிப்பை மிகவும் குறைந்த விலையில் வாங்கி செல்லலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

எந்தெந்த OnePlus தயாரிப்புகள் மீதெல்லாம் தள்ளுபடி கிடைக்கும்?

எந்தெந்த OnePlus தயாரிப்புகள் மீதெல்லாம் தள்ளுபடி கிடைக்கும்?

OnePlus அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கப்பெறும் சில சலுகை விபரங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். OnePlus 10 Pro, OnePlus 10R 5G, OnePlus Buds Pro, OnePlus Nord CE 2 Lite 5G, OnePlus Nord Buds, OnePlus TV 32|40|43 Y1, OnePlus TV 43|50 Y1S Pro, OnePlus TV 32|43 Y1S Edge போன்ற தயாரிப்புகள் மீது என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.

வண்டி நம்பர் பிளேட் விபரங்களை வைத்து உரிமையாளரை ஆன்லைனில் கண்டுபிடிப்பது எப்படி?வண்டி நம்பர் பிளேட் விபரங்களை வைத்து உரிமையாளரை ஆன்லைனில் கண்டுபிடிப்பது எப்படி?

OnePlus 10 மற்றும் OnePlus Nord CE 2 Lite 5G மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்?

OnePlus 10 மற்றும் OnePlus Nord CE 2 Lite 5G மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்?

OnePlus 10 Pro 5G ஆனது எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் ரூ.10,000 தள்ளுபடியில் கிடைக்கும். ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜியின் விலை ரூ.66,999 இல் இருந்து ரூ.55,999 விலையில் (வங்கி தள்ளுபடி உட்பட) கிடைக்கும்.

OnePlus 10R 5G ஆனது ரூ.29,999 என்ற விலையில் வங்கி தள்ளுபடி உட்பட, RedCoins மூலம் பயனர்களுக்குக் கூடுதலாக ரூ.1,000 சேமிக்க முடியும்.

OnePlus Nord CE 2 Lite 5G ஆனது ரூ.17,499 என்ற விலையிலிருந்து வாங்கக் கிடைக்கும். கூப்பன் மூலம் பயனர்கள் ரூ. 500 கூடுதலாகச் சேமிக்க முடியும். கூடுதலாக, 12 மாத நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டத்தை நீங்கள் வெறும் ரூ.99 விலையில் வாங்கலாம்.

OnePlus Nord Buds மற்றும் OnePlus Phone Cooler மீதும் சலுகையா?

OnePlus Nord Buds மற்றும் OnePlus Phone Cooler மீதும் சலுகையா?

OnePlus Nord பட்ஸ் ரூ. 2799 என்ற விலைக்குப் பதிலாக ரூ.2,099 (வங்கி தள்ளுபடி உட்பட) விலையில் கிடைக்கும். இதேபோல், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ரூ.6,490 (வங்கி தள்ளுபடி உட்பட) என்ற சலுகை விலையில் வாங்க கிடைக்கும். பயனர்களுக்குச் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்க OnePlus Phone Cooler ரூ.3299 விலைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.9,499 விலையில் புது OnePlus TV வாங்கலாமா? உண்மையா?

ரூ.9,499 விலையில் புது OnePlus TV வாங்கலாமா? உண்மையா?

OnePlus TV 32|40|43 Y1 ரூ.18,999 என்ற விலைக்குப் பதிலாக ரூ.9,499 என்ற விலை முதல் வாங்க கிடைக்கும். RedCoins மூலம் பயனர்கள் ரூ.1500 கூடுதலாகச் சேமிக்க முடியும். அதேபோல், OnePlus TV 43|50 Y1S Pro மாடலின் விலை ரூ. 23,499 இலிருந்து தொடங்கும். மேலும் RedCoins மூலம் பயனர்கள் ரூ. 1000 வரை கூடுதலாகச் சேமிக்க முடியும். இறுதியாக, OnePlus TV 32|43 Y1S Edge மாடலின் விலை ரூ.12,499 இலிருந்து தொடங்கும்.மீண்டும் RedCoins உதவியுடன் பயனர்கள் ரூ.1500 வரை கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus TV, OnePlus 10 Pro, OnePlus 10R 5G Gets Heavy Discounts On September 22

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X