அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.!
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் தனது ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட் டிவி அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி எட்டு ஸ்பீக்களை கொண்டிருக்கும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்பீக்கர்கள் அனைத்து 50வாட்ஸ் அவுட்புட்-ஐ உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த அம்சங்கள் சியோமி ஸ்மார்ட் டிவிகளில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியாகவுள்ள மாடல்கள் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி பற்றி வெளியாகியுள்ள தகவலின்படி, புதிய ஸ்மார்ட் டிவிகள் 43' இன்ச், 55' இன்ச், 64' இன்ச் மற்றும் 75' இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் 55Q1IN, 43Q2IN, 65Q2CN, 75Q2CN, மற்றும் 75Q2US என்ற மாடல் எண்களுடன் தனது ஸ்மார்ட் டிவிகளை பதிவு செய்துள்ளது என்பதும் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள், 4K HDR ஆதரவுடன் கூடிய ஒரு இன்பில்ட் ஸ்மார்ட் AI சேவையுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒன்பிளஸ் வெளியிடப்போகும் ஸ்மார்ட் டிவி வெறும் ஸ்மார்ட் டிவி அல்ல என்பது உறுதியாகியுள்ளது.

வெளியாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆனது மாலி ஜி51 ஜி.பீ.யு உடனான மீடியாடெக் எம்டி 5670எஸ்ஒசி செயலி கொண்டு இயங்கும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான தகவலின்படி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்டிவி செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த புதிய ஸ்மார்ட் டிவி வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் அமேசான் தளத்தில் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.40,000 முதல் ரூ.50,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட் டிவி 5ஜி இணக்கத்துடன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது தகவல் வட்டாரம்.


Click it and Unblock the Notifications