Home
News

என்ன சொல்றீங்க.. இனி ஸ்மார்ட் டிவி கிடைக்காதா? சத்தமின்றி OnePlus செய்த காரியம்.. அதிர்ச்சியடைந்த பயனர்கள்!

சியோமி, சாம்சங் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வந்தது ஒன்பிளஸ் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யும் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இந்திய இணையதளத்தில் இருந்து டிவி (TV) மற்றும் மானிட்டர் (Monitor) வகைகளின் குறிப்புகளை நீக்கி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

 இனி ஸ்மார்ட் டிவி  கிடைக்காதா? சத்தமின்றி OnePlus செய்த காரியம்..

அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு சற்று உயர்வான விலையில் ஒன்பிளஸ் டிவி க்யூ1 (OnePlus TV Q1) சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. அதன்பிறகு பட்ஜெட் விலை டிவி மட்டுமே அறிமுகம் செய்து வந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு முதல் ஒன்பிளஸ் நிறுவனம் எந்த ஒரு புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களையும் அறிமுகம் செய்யவில்லை.

அதேபோல் கடந்த ஆண்டு ஸ்மார்ட் டிவி விற்பனையில் இருந்து ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவனங்கள் வெளியேறக்கூடும் என்று தகவல் வெளிவந்தது. தற்போது டிவி விற்பனையில் இருந்து ஒன்பிளஸ் நிறுவனம் டிவி விற்பனையில் இருந்து வெளியேறுவதாகத் தெரிகிறது.

 இனி ஸ்மார்ட் டிவி  கிடைக்காதா? சத்தமின்றி OnePlus செய்த காரியம்..

காரணம் என்னவென்றால், OnePlus அதன் அதிகாரப்பூர்வ இந்திய இணையதளத்தில் இருந்து அதன் டிவி மற்றும் மானிட்டர்களை நீக்கி உள்ளது. தற்போது டிவி வாங்கும் இணையதளத்தில் 404 பக்கத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

அதேபோல் ஒன்பிளஸ் இணையதளத்தின் மெனுவில் கூட ஸ்மார்ட் டிவி மற்றும் மானிட்டர் குறிப்புகள் இல்லை. எனவே இந்நிறுவனம் டிவி விற்பனையில் இருந்து வெளியேறுவதாகத் தான் தெரிகிறது. ஆனாலும் ஒன்பிளஸ் நிறுவனம் டிவி விற்பனை நிறுத்துவதாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 போனை வரும் ஏப்ரல் 1-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 அம்சங்கள் ( OnePlus Nord CE 4 specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 chipset) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும்; அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. 5500எம்ஏஎச் பேட்டரி வசதி கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 போன். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W fast charging) வசதி உள்ளது.

6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 அறிமுகம் செய்யப்படும். அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

 இனி ஸ்மார்ட் டிவி  கிடைக்காதா? சத்தமின்றி OnePlus செய்த காரியம்..

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் அறிமுகம் செய்யப்படும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மின்ட் (mint) மற்றும் கிரே (grey) நிறங்களில் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக ரூ.25000 பட்ஜெட்டில் இந்த போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus TV and Monitor sections removed from website: Do you know the reason?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X