தெறி லுக்கில் புது OnePlus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவி.! விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க!
ஒன்பிளஸ் நிறுவனம், அதன் தயாரிப்பு வரிசையில் எப்போது ஸ்மார்ட் டிவி மாடலை சேர்த்ததோ, அப்போதிலிருந்து இந்திய சந்தையில் அதன் வியாபாரம் படு வேகமாக வளர்ச்சியை கண்டுள்ளது. இப்போது நிறுவனம் புதிய OnePlus TV 65 Q2 Pro மாடலை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
கடந்த மாதம், OnePlus ஆனது OnePlus TV 65 Q2 Pro மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஒன்பிளஸ் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் பிரீமியம் மாடல் ஸ்மார்ட் டிவி (Smart TV) இதுவாகும். சில நாட்களுக்கு முன்பு OnePlus TV 65 Q2 Pro சாதனம் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைத்தது. இப்போது நிறுவனத்திடமிருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் டிவி இந்தியாவில் ஓபன் சேல்ஸ் விற்பனை மூலம் வாங்குவதற்கு கிடைக்கிறது.

தெறி லுக்கில் புது OnePlus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவி!
OnePlus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவி சாதனத்தின் பெயர் குறிப்பிடுவது போல, இது 65' இன்ச் QLED பேனலுடன் வருகிறது. இது 4K டிஸ்பிளே தெளிவுத்திறன் உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம் மற்றும் 1,200 nits பீக் பிரைட்னஸ் ஆகியவற்றை இதன் டிஸ்பிளே கொண்டுள்ளது. ALLM மற்றும் MEMC தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதோடு, DCI-P3 மூலம் 97% பரந்த வண்ண வரம்பு உள்ளது.
இதில் காமா என்ஜின் அல்ட்ரா ஆகிய அம்சங்கள் இதில் உள்ளது. இதனால், வீடியோ குவாலிட்டி நீங்கள் எதிர்பார்ப்பதை விட படு பயங்கரமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்த OnePlus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவி சாதனம் முழு அரே கொண்ட 120 டிம்மிங் ஜோன் வரிசையை இது ஆதரிக்கிறது. இதன் மூலம் டீப் ஆனா வீடியோ அனுபவத்தை உயர்தர கான்ட்ராஸ்ட் உடன் அனுபவிக்கலாம்.

OnePlus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவி ஆனது 30W ஸ்பீக்கர் சப்வூப்பர் உடன் 7 ஸ்பீக்கர் அமைப்பை கொண்டுள்ளது. இந்த சாதனத்தில் 70W சவுண்ட் அவுட்புட்டை உருவாக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும், OnePlus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவியில் சவுண்ட் டைனாடியோவால் (Dynaudio) டியூன் செய்யப்படுகிறது. மேலும் இது டால்பி அட்மோஸிற்கான ஆதரவுடன் வருகிறது.
OnePlus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவி சாதனம் MT9617 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 3GB ரேம் மற்றும் 32GB கொண்ட ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் பற்றி பார்க்கையில், இது Google TV மற்றும் OxygenPlay 2.0 உடன் Android 11 இயங்குதளத்தில் இயக்குகிறது. இது வாய்ஸ் கண்ட்ரோல், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் மற்றும் அலெக்சா போன்ற அம்சங்களுக்கான ஆதரவுடன் வருகிறது.
OnePlus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவி விலை என்ன?
OnePlus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவி சாதனம் இப்போது இந்தியாவில் ரூ.99,999 விலையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல சலுகைகளுடன் வருகிறது. OnePlus நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 தள்ளுபடியை இப்போது வழங்குகிறது. அனைத்து முக்கிய வங்கிகளுக்கும் 18 மாதங்களுக்கு நோ-காஸ்ட் EMI விருப்பமும் உள்ளது. வாங்கிய ஒரு வருடத்திற்குள் இலவச பேனல் மாற்று மற்றும் இரண்டு வருட உத்தரவாதமும் உள்ளது.


Click it and Unblock the Notifications








