Home
News

இந்த விலைக்கு ஒன்பிளஸ் 43இன்ச் ஸ்மார்ட்டிவி இந்தியாவில் அறிமுகம்-காமா எஞ்சின், கேமிங் ஆதரவு, சினிமா தர அனுபவம்

ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1எஸ் ப்ரோ 4கே அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளே ஆதரவோடு இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியானது படத்தின் தரத்தை மேம்படுத்த காமா எஞ்சின் ஆதரவோடு வருகிறது. ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட்டிவியானது ஏப்ரல் 11 முதல் வாங்குவதற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்காலம்.

ஒன்பிளஸ் 43 ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட்டிவி

ஒன்பிளஸ் 43 ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட்டிவி

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் டிவி ஒய் தொடரில் ஒன்பிளஸ் ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட்டிவியை 43 இன்ச் அளவோடு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் பட்ஸ் டிடபிள்யூஎஸ் இயர்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்படும் கூடுதல் அம்சங்கள் உட்பட பல்வேறு மேம்பாட்டு ஆதரவுகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 10-பிட் வண்ண ஆழத்துடன் மேம்படுத்தப்பட்ட 4கே அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1எஸ் ப்ரோ ஆனது டால்பி ஆடியோ தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டத்தைக் கொண்டிருக்கிறது. ஆழ்ந்த சினிமா அனுபத்திற்காக இந்த அம்சம் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்டிவி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இந்தியாவில் ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1எஸ் ப்ரோ விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1எஸ் ப்ரோ ஆனது ஏப்ரல் 11 முதல் விற்பனைக்கு கிடைக்கும், இதன் விலை ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியை அமேசான் மற்றும் ஒன்பிளஸ்.இன் மூலம் ஆன்லைனில் வாங்க முடியும். கூடுதலாக இது ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் பிற ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்கள் மூலம் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட்டிவியை எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.2,500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்டிவியின் சிறப்பம்சங்கள்

ஸ்மார்ட்டிவியின் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட்டிவியின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1எஸ் ப்ரோ ஆனது மேம்படுத்தப்பட்ட 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இது நிகழ்நேர படத்தின் தரத்தை மேம்படுத்த காமா எஞ்சினைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி டிஸ்ப்ளே ஆனது எச்டிஆர் 10+, எச்டிஆர் 10 மற்றும் எச்எல்ஜி வடிவ ஆதரவையும் சிறந்த பார்வை அனுபவத்திற்கு என வழங்குகிறது. 24 வாட்ஸ் ஒருங்கிணைந்த ஆடியோ வெளியீட்டை வழங்கும் இரண்டு முழு அளவிலான ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ மேம்படுத்தப்பட்ட சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் ஆனது அதிவேக சினிமா தர அனுபவத்தை வழங்குகிறது.

பொழுதுபோக்கு மையமாக செயல்படும் வகையில் வடிவமைப்பு

பொழுதுபோக்கு மையமாக செயல்படும் வகையில் வடிவமைப்பு

ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட்டிவியானது வீட்டு பொழுதுபோக்கு மையமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. அதேபோல் தடையற்ற சுற்றுச்சூழல் அனுபவத்தை எளிதாக்கும் வகையில் இதில் ஸ்மார்ட் மேனேஜர் அம்சம் இடம்பெற்றுள்ளது. ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 தொழில்நுட்ப வசதி இதில் இருக்கிறது. இதன்மூலம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வைஃபை அல்லது செல்லுலார் இணைப்பைப் பயன்படுத்தி இணைக்காமல் நேரடியாக டிவியுடன் இணைக்க அனுமதிக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஸ்மார்ட் ஸ்லிப் கண்ட்ரோல் அம்சம்

ஸ்மார்ட் ஸ்லிப் கண்ட்ரோல் அம்சம்

அதேபோல் ஒன்பிளஸ் பட்ஸ் சாதனம் டிவியுடன் கனெக்ட் செய்திருக்கும் போது பட்ஸை காதுகளில் இருந்து அகற்றுவதன் மூலம் இணைக்கப்பட்ட இயர்பட்ஸ்கள் தாமாகவே டிவியை இடைநிறுத்துகிறது. அதேபோல் ஸ்மார்ட் ஸ்லிப் கண்ட்ரோல் அம்சத்தை பயன்படுத்த, ஒன்பிளஸ் வாட்ச் நேரடியாக இந்த ஸ்மார்ட்டிவியுடன் இணைக்கலாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

கிட்ஸ் பாதுகாப்பு பயன்முறை

கிட்ஸ் பாதுகாப்பு பயன்முறை

ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட்டிவியானது கேம் பயன்முறை ஆதரவோடு வருகிறது. இது பயனர்களை எச்டிஎம்ஐ மூலமாக கேமிங் கன்சோலை இணைக்க அனுமதிக்கிறது. மேலும் விரைவான செயல்பாடு ஒட்டுமொத்த மென்மையான கேமிங் அனுபவத்தையும் செயல்படுத்த ஆட்டோ லோ லேட்டன்சி மோடை செயல்படுத்துகிறது. அதேபோல் குழந்தைகள் ஆரோக்கியமான உள்ளடக்கத்தை மட்டும் அனுபவிக்க கிட்ஸ் பயன்முறையும் இதில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Oneplus TV 43 Y1S Pro Smart TV Launched in India With Gamma Engine, Gaming Console, 4K Display: Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X