OnePlus TV 43 Y1S Pro: 4K UHD தரத்தில் புது ஸ்மார்ட் டிவி இவ்வளவு கம்மி விலையிலா? விற்பனை தேதி இதான்..

|

OnePlus நிறுவனம் அதன் ஸ்மார்ட் டிவி வரிசையில் புதிதாக OnePlus TV 43 Y1S Pro சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவியானது நாட்டில் ரூ. 29,999 என்ற தொடங்க விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 11, 2022 முதல் இது கிடைக்கும். OnePlus TV 43 Y1S Pro ஆனது 4K UHD (Ultra-HD) வீடியோ தெளிவுத்திறனுடன் வருகிறது. இது பாதுகாப்பான ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தில் இயங்கும் மற்றும் பயனர்களுக்கு முழுமையான ஸ்மார்ட் டிவி அனுபவத்தை வழங்கும். ஸ்மார்ட் டிவியின் முழு விவரக்குறிப்புகளையும் வாங்குவதற்கான சலுகைகளையும் பற்றிப் பார்க்கலாம்.

இந்தியாவில் OnePlus TV 43 Y1S Pro விவரக்குறிப்புகள்

இந்தியாவில் OnePlus TV 43 Y1S Pro விவரக்குறிப்புகள்

OnePlus TV 43 Y1S Pro என்பது ஒரு அரை பிரீமியம் ஸ்மார்ட் டிவி ஆகும். இது மிக உயர்ந்த தரத்தில் பார்க்கவும், அதிலிருந்து அற்புதமான அனுபவத்தைப் பெறவும் விரும்புபவர்களை இலக்காகக் கொண்டது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஸ்மார்ட் டிவி 4K UHD தெளிவுத்திறனை ஆதரிக்கும். மேலும், பயனர்கள் 10 பிட் வண்ண டெப்த் அம்சத்துடன் ஒவ்வொரு ஃப்ரேமிலும் மூச்சடைக்கக்கூடிய துல்லியத்தை வழங்குவதை பில்லியினுக்கும் அதிகமான வண்ணங்களைக் காணலாம் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிகத் துல்லியமான படம் மற்றும் கேமிங் அனுபவத்திற்கு

மிகத் துல்லியமான படம் மற்றும் கேமிங் அனுபவத்திற்கு

இது தவிர, மேம்பட்ட காமா எஞ்சின் அம்சத்துடன், பயனர்கள் ஸ்மார்ட் டிவியில் நிகழ் நேரப் படத் தரத்தை அனுபவிக்க முடியும். இது HDR10, HDR10+ மற்றும் HLG வடிவமைப்பிற்கான ஆதரவுடன் சிறந்த பார்வை அனுபவத்திற்காக வருகிறது. OnePlus TV 43 Y1S Pro இல் வேகமான கேமிங் அனுபவத்தைப் பெற, பயனர்கள் ALLM (தானியங்கு குறைந்த தாமதப் பயன்முறை) செயல்படுத்தலாம். இது தவிர, உங்களிடம் OnePlus Buds மற்றும் OnePlus வாட்ச் இருந்தால், அவற்றை OnePlus TV 43 Y1S Pro உடன் எளிதாக இணைக்கலாம்.

இன்னும் பான்-ஆதார் இணைக்காதவர்களுக்கு என்ன நடக்கும்? இந்த காலத்திற்குள் இணைத்தால் அபராதம் குறைவு..இன்னும் பான்-ஆதார் இணைக்காதவர்களுக்கு என்ன நடக்கும்? இந்த காலத்திற்குள் இணைத்தால் அபராதம் குறைவு..

தானாக சுவிட்ச் ஆப் ஆகும் டிவியா இது?

தானாக சுவிட்ச் ஆப் ஆகும் டிவியா இது?

ஸ்மார்ட் ஸ்லீப் கண்ட்ரோல் அம்சம் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஸ்மார்ட் டிவியுடன் இணைக்கப்பட்ட ஒன்பிளஸ் வாட்ச் உடன் இணைந்து செயல்படுகிறது. ஒன்பிளஸ் வாட்ச் அதன் பயனர் தூங்குவதை உணர்ந்தால் உடனடியாக ஒன்பிளஸ் டிவியை தானாக அணைத்துவிடும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் டிவியில் நிகழ்ச்சிகளோ அல்லது படமோ பார்த்துக்கொண்டிருக்கையில் உறங்கிவிட்டால் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி தானாகவே ஆஃப் செய்யப்படும்.

OnePlus TV 43 Y1S Pro இந்தியாவில் விலை

OnePlus TV 43 Y1S Pro இந்தியாவில் விலை

OnePlus TV 43 Y1S Pro ஆனது, Dolby Audio மூலம் இயங்கும் சினிமாடிக் சவுண்ட் அனுபவத்தைப் பயனர்களுக்கு வழங்குகிறது. OnePlus இன் இந்த ஸ்மார்ட் டிவியில் இரண்டு முழு அளவிலான ஸ்பீக்கர்கள் 24W மொத்த வெளியீட்டைக் கொண்டுள்ளன. OnePlus TV 43 Y1S Pro சாதனம் இந்தியாவில் ரூ. 29,999 என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவிக்கான திறந்த விற்பனை அமேசான் மற்றும் ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஏப்ரல் 11, 2022 அன்று தொடங்கும். மேலும், ஜியோ டிஜிட்டல், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் குரோமா ஆகியவை தயாரிப்புகளை பட்டியலிடும்.

LPG சிலிண்டரில் உள்ள எண்ணின் அர்த்தம் என்ன தெரியுமா? இது உங்கள் பாதுகாப்பிற்கானதா? இனி கூர்ந்து கவனியுங்கள்..LPG சிலிண்டரில் உள்ள எண்ணின் அர்த்தம் என்ன தெரியுமா? இது உங்கள் பாதுகாப்பிற்கானதா? இனி கூர்ந்து கவனியுங்கள்..

சலுகை விபரம்

சலுகை விபரம்

எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் ஸ்மார்ட் டிவி வாங்கினால் ரூ.2500 சிறப்பு தள்ளுபடி கிடைக்கும். SBI கிரெடிட் கார்டு மூலம் பயனர்கள் 6 மாதங்கள் வரை கட்டணமில்லா EMI ஐப் பெறலாம். மேலும், OnePlus TV 43 Y1S Pro ஐ ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 22, 2022 வரை வாங்கும் பயனர்கள், Amazon Prime வீடியோவுக்கான ஒரு வருட சந்தாவைப் பெறுவார்கள் (இந்தச் சலுகை Amazon மூலம் Smart TV வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்). இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க ஆசை இருந்தால், உங்களின் காலெண்டரில் ஏப்ரல் 11 ஆம் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus TV 43 Y1S Pro Launched in India Starting at Rs 29999 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X