Home
News

OnePlus இருக்கா.. அக்.16-க்கு அப்புறம்.. இதை தேடுவீங்க.. Mind Space-க்குள் Gemini AI.. OxygenOS 16 மட்டுமில்ல!

ஒட்டுமொத்த ஒன்பிளஸ் (OnePlus) பிரியர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அந்த தேதி உறுதியாகிவிட்டது. ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) வருகிற அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, ஒன்பிளஸ் மைண்ட் ஸ்பேஸ் (OnePlus Mide Space) உடன் ஜெமினி ஏஐ இன்டிகிரேஷன் செய்யப்பட இருப்பது உறுதியாகியது. இப்போது, அதிகாரப்பூர்வ தேதி உறுதியாகி இருக்கிறது. இதனால், ஒன்பிளஸ் பிரியர்கள் வெயிட்டிங் மோடுக்கு சென்றுவிட்டனர்.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 வெளியீடு
சீனாவில் ஓப்போ நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) வருகிற அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 வெளியீடு உறுதியாகாமல் இருந்தது. இதனால், ஒன்பிளஸ் பிரியர்கள் கடுப்பான நேரத்தில் ஜெமினி ஏஐ இன்டிகிரேஷனுடன் ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

OnePlus இருக்கா.. அக்.16-க்கு அப்புறம்.. இதை தேடுவீங்க.. என்ன வருது?

இந்த இன்டிகிரேஷன் மூலம் ஜெமினி ஏஐ அவுட்புட்களை ஒன்பிளஸ் மைண்ட் ஸ்பேஸ் மூலம் பெற்று கொள்ள முடியும் என்பதால், ஒன்பிளஸ் பிரியர்கள் படுகுஷியாகிவிட்டனர். இந்த நேரத்திலேயே அக்டோபர் 16ஆம் தேதி ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 அறிமுகம் செய்யப்படும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு வெர்ஷனாக இது இருக்கும்.

ஒன்பிளஸ் 15 சீரிஸ் (OnePlus 15 Series) மாடல்களுடன் இந்த ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 பயன்படுத்த கிடைக்கும். மற்ற மாடல்களுக்கு படிப்படியாக அப்டேட் செய்யப்படும் என்பதும் தெரியவந்துள்ளது. இதில் என்னென்ன பீச்சர்கள் கிடைக்கும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்யவில்லை. இருப்பினும், ஒன்பிளஸ் மைண்ட் ஸ்பேஸ் உடனான ஜெமினி ஏஐ இன்டிகிரேஷன் பிரதானமாக இருக்கப் போகிறது.

OnePlus இருக்கா.. அக்.16-க்கு அப்புறம்.. இதை தேடுவீங்க.. என்ன வருது?

ஜெமினி ஏஐ இன்டிகிரேஷன்
கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ ஒட்டுமொத்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கிடைத்தாலும், அந்தந்த ஸ்மார்ட்போன்களின் ஆப்களுடன் இன்டிகிரேஷன் செய்யப்படாமல், தனியாகவே கிடைப்பது வழக்கமாக இருக்கிறது. இது மாற தொடங்கி இருக்கிறது. இப்போது, ஒன்பிளஸ் நிறுவனம், நேரடியாக மைண்ட் ஸ்பேஸில் இருந்து ஜெமினி ஏஐ அவுட்புட் கொடுக்க இருக்கிறது.

அதாவது, ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) மூலம் ஒன்பிளஸ் மைண்ட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டது. இது ஆப் மூலம் செயல்படுகிறது. இது பர்சனல் அசிஸ்டன்ட் போல சேவையை கொடுக்கிறது. இதற்காக ஒன்பிளஸ் கீ (OnePlus Key) லேட்டஸ்ட் மாடல்களில் பிரத்யேகமாக கிடைத்தது. ஏஐ சர்ச் (AI Search), கன்டென்ட் கேப்ச்சர் (Content Capture), ஏஐ வாய்ஸ்ஸ்கிரிப் (AI VoiceScripe) ஆகியவற்றை கொடுத்தது.

இந்த ஒட்டுமொத்த ஒன்பிளஸ் மைண்ட் ஸ்பேஸ் பீச்சர்கள் ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 ஜெனரேஷனில் இருந்து ஜெமினி ஏஐ இன்டிகிரேஷனுடன் கிடைக்க இருக்கிறது. ஆகவே, ஜெமினி ஏஐ அசிஸ்டன்டை ஒன்பிளஸ் மைண்ட் ஸ்பேஸ் பீச்சர்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இது ஏஐ பவர்டு சர்ச் மற்றும் கன்டென்ட் ஜெனரேஷன்களில் மட்டுமே எதிர்பார்க்கலாம்.

மற்றபடி ஒன்பிளஸ் ஏஐயின் கீழ் கிடைக்கும் மற்ற பீச்சர்கள் பிரத்யேகமாக கொடுக்கப்படும். இது ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 ஜெனரேஷனில் அப்கிரேட் செய்யப்படவும் இருக்கிறது. இந்த ஜெமினி ஏஐ இன்டிகிரேஷன் மட்டுமல்லாமல், ஃபுல் ஸ்கிரீன் ஏஓடி (Full-Screen AOD) மற்றும் லிக்விட் கிளாஸ் யுஐ (Liquid Glass UI) போன்ற பீச்சர்களும் வரும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிலேயே முதலில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 கிடைக்க இருக்கிறது. இதனால், இந்த போன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே, இந்த போனில் 7300mAh பேட்டரி, 120W சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் போன்ற இதுவரை கிடைக்காத பீச்சர்கள் வர இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus To Launch OxygenOS 16 on October 16 With Gemini AI integration
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X