Home
News

பேக் டூ பேக் அறிமுகம்.. அதுவும் அக்.24 ஆம் தேதியே.. OnePlus சும்மா தீயா இருக்கேப்பா.. என்ன தயாரிப்பு?

தனது முதல் ஃபோல்டபிள் போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த வேகத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த அறிமுகத்திற்கு.. அதுவும் மிகவும் முக்கியமான ஒரு அறிமுகத்திற்கு தயாராகி விட்டது. அதென்ன அறிமுகம்? அது ஏன் மிகவும் முக்கியம்? இதோ விவரங்கள்:

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதியன்று இந்தியா மற்றும் உலகளவில் வெளியான ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை தொடர்ந்து வருகிற அக்டோபர் 24 ஆம் தேதியன்று ​​ஒன்பிளஸ் நிறுவனம் புதிய மொபைல் போன் டிஸ்பிளேவை (New Mobile Phone Display) அறிமுகம் செய்யவுள்ளது.

பேக் டூ பேக் அறிமுகம்.. OnePlus சும்மா தீயா இருக்கேப்பா!

ஒன்பிளஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஒப்போ ஆகிய இரண்டும் பிஓஇ (BOE) உடன் இணைந்து அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு புதிய டிஸ்பிளேவை அறிமுகப்படுத்துகின்றன. இந்த புதிய பேனல் 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 3,000 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒன்பிளஸ் ஓப்பனில் உள்ள 2800 நிட்ஸை விட அதிக ப்ரைட்னஸை வழங்கும்.

இந்த டிஸ்பிளே ஏன் மிகவும் முக்கியமான ஒரு அறிமுகமாக கருதப்படுகிறது? "சன்ரைஸ்·ஈஸ்ட்" என்கிற பெயரின்கீழ் நடக்கவுள்ள வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த புதிய டிஸ்பிளேவானது, ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில், அதாவது ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓப்பனில் உள்ள டிஸ்பிளேவை சிறந்த டிஸ்பிளேவை பேக் செய்யும். ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் 2024 ஜனவரியில் அறிமுகம் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை கொண்டிருக்கலாம். இது 24ஜிபி வரையிலான ரேம் உடன் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் டாப் வேரியண்டில் 16ஜிபி ரேம் உள்ளது. கூடுதலாக, ஒன்பிளஸ் 12-ன் இன்டர்னல் ஸ்டோரேஜூம் 1டிபி ஆக அதிகரிக்கப்படலாம்.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 12ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய 5400mAh பேட்டரியை பேக் செய்யலாம். இது பாஸ்ட் 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றையும் ஆதரிக்கலாம். சார்ஜிங்கை விரைவுபடுத்த, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 2700mAh திறன் கொண்ட டூயல் பேட்டரிகள் பயன்படுத்தப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் கேமராக்கள் ஹார்டுவேர் அடிப்படையில் நல்ல மேம்பாடுகளை சந்திக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதில் 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் மெயின் கேமரா + 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா + பெரிஸ்கோப் லென்ஸுடன் 64 மெகாபிக்சல் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம்.

சில தினங்களுக்கு முன் அறிமுகமான ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 7.82-இன்ச் இன்னர் டிஸ்பிளே, 6.31-இன்ச் அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் மூலம் இயக்கப்படுகிறது. ரியர் பேனில் 48எம்பி மெயின் கேமரா + 64எம்பி டெலிஃபோட்டோ கேமரா + 48எம்பி அல்ட்ரா வைட் கேமரா உள்ளன.

இன்னர் டிஸ்பிளேவில், 20எம்பி மெயின் கேமராவும், 32-மெகாபிக்சல் கேமராவும் உள்ளன கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் டூயல்-செல் 4,800mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 67W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இருப்பினும் இது ரீடெயில் பாக்ஸில் 80W சார்ஜருடன் அனுப்பப்படும். ஏற்கனவே முன்பதிவுகளுக்கு திறந்துவிடப்பட்டள்ள இந்த ஸ்மார்ட்போனின் திறந்த விற்பனை அக்.27 முதல் தொடங்கும். இதன் விலை ரூ.1,39,999 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus to Launch New BOE Display on October 24 Expected to use on OnePlus 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X