Home
News

உலகின் முதல் 24GB ரேம் போன்.. 1TB மெமரி வேற.. போட்டிபோட லேப்டாப் பத்தாது! எந்த மாடல்?

எந்தவொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் யோசனைகூட செய்து பார்த்திராத ரேம் (RAM) உடன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மாடல் வெளியாகயிருக்கிறது. ஒரு சராசரி லேப்டாப்பை விட வேகமாக செயல்பட போகும் அந்த போனில், மற்ற அம்சங்களும் அதீத தரத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சீனாவின் பிபிகே எலக்ட்ரானிக்ஸ் (BBK Electronics) நிறுவனத்துக்கு சொந்தமான ஒன்பிளஸ் (OnePlus), ஓப்போ (Oppo) மற்றும் ரியல்மி (Realme) ஆகிய பிராண்ட் போன்களில் கொடுக்கப்படும் ரேம் அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. ஏனென்றால், இப்போது வரும் போன்களில் கேமிங், மல்டி டாஸ்கிங், ஆப் ரீலோடிங் ஆகியவை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

உலகின் முதல் 24GB ரேம் போன்! போட்டிபோட லேப்டாப் பத்தாது! எந்த மாடல்?

இதனால் தடையில்லாத ரேம் அனுபவத்தை வழங்க ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், திட்டமிட்டு வருகின்றன. இதற்கெல்லாம், முன்னோடியாக உலகிலேயே முதல் முறையாக ஒரு லேப்டாப்பையே மிஞ்சும் வகையில், பிபிகே எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 24 ஜிபி ரேம் கொண்ட போனை களமிறக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திகள் சீனாவில் வெளியாகி, உலகம் முழுவதும் தீயாய் பரவிவருகிறது.

இந்த தகவலுக்கு பிபிகே எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்படவில்லை என்பதால், அது உண்மை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், முதலில் எந்த பிராண்ட் போனில் 24 ஜிபி ரேம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த பெருமையை ஒன்பிளஸ் பெற்று சென்றுள்ளது.

ஆம், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ (OnePlus Ace 2 Pro) போனே, 24 ஜிபி ரேம் உடன் வெளியாகும் முதல் போன் என்று சீன ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இவ்வளவு ரேம் கொடுக்கப்படுகிறது என்றால், அந்த போனின் மற்ற அம்சங்களும் அடுத்த லெவலுக்கு இருக்க வேண்டும்.

ஆகவே, ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனின் ஒவ்வொரு அம்சங்களும் எந்தவொரு போன்களிலும் இல்லாத வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நேரத்தில் அந்த போனின் முழு அம்சங்கள், விலை, அதில் என்ன எதிர்பார்க்கலாம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ அம்சங்கள் (OnePlus Ace 2 Pro Specifications): இந்த ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போன் 6.74 இன்ச் (1240*2772) கர்வ்ட் (Curved) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. அதில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 1440Hz பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் பல்ஸ் வருகிறது. இந்த போனின் விலை மிட்-ரேன்ஞ் போன்களை விட அதிமாக இருக்க வாய்ப்புள்ளது.

இதனால் ஃபிளாக்ஷிப் சிப்செட் கொடுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வருகிறது. அதேபோல ஓம்னிவிஷன் ஓவி64எம் (OmniVision OV64M) சென்சாருடன் கூடிய 64 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் கூடிய 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் கேலக்ஸிகோர் ஜிசி02எம் (GalaxyCore GC02M) சென்சாருடன் கூடிய 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இதன் டாப்-எண்ட் வேரியண்ட்டில் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, இந்த போன் 16 ஜிபி ரேம் + 256 மற்றும் 512 ஜிபி வேரியண்ட்டில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது, உலகிலேயே முதல்முறையாக 24 ஜிபி ரேம் கொண்ட போனாக இந்த ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போன் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதோடு 1டிபி ஸ்டோரேஜ் வரும் என்றும் கூறப்படுகிறது.

இது விர்ச்சுவல் ரேமாக கொடுக்கப்படுமா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகில்லை என்பதால், அது உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த போனின் விலையை ரூ.40 ஆயிரம் ரூ.50 ஆயிரத்துக்குள் விற்பனைக்கு வரலாம் அல்லது சற்று குறைவாகவும் வெளியாகலாம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus To Launch 24 GB RAM Phone With OnePlus Ace 2 Pro Here is Specification, Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X