OnePlus தயாரிப்புகள் மீது 50% வரை தள்ளுபடி! OnePlus Summer Sale 2023 துவங்கிடுச்சு! மிஸ் பண்ணிடாதீங்க!
OnePlus நிறுவனம் அதன் சம்மர் சேல்ஸ் 2023 விற்பனையை இந்தியாவில் அறிவித்துள்ளது. அதாவது நிறுவனத்தின் கோடைகால விற்பனை 2023 தேதி குறித்த விபரங்கள் மற்றும் சலுகைகள் குறித்த தகவலை நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. ஒன்பிளஸின் அணைத்து தயாரிப்புகளின் மீதும் தள்ளுபடி கிடைக்கிறது.
இந்த சேல்ஸ் இல் OnePlus Pad முதல் OnePlus 11 வரை அணைத்து தயாரிப்புகளின் மீதும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4 ஆம் தேதி 2023 முதல், இந்தியாவில் உள்ள நுகர்வோர் பல்வேறு சேனல்கள் மூலம் ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் இந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இந்த ஒன்பிளஸ் சம்மர் சேல்ஸ் 2023 (OnePlus Summer Sale) விற்பனையில் எந்தெந்த சாதனங்கள் மீது எவ்வளவு சலுகை கிடைக்கிறதென்று பார்க்கலாமா?

OnePlus 10 Pro, 10T மற்றும் 10R ஸ்மார்ட்போன்களின் விலைகள் மீது ரூ. 11,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளன. OnePlus 11 தொடர் ஸ்மார்ட்போன்கள் OnePlus.in மற்றும் OnePlus Store App இல் OnePlus Buds Pro 2/2R உடன் 50% தள்ளுபடியுடன் வருகின்றன. OnePlus 10 மற்றும் 11 சீரிஸ் போன்கள் மீது உடனடி வங்கி தள்ளுபடியாக ரூ.1,000 கிடைக்கிறது. மே 3 முதல் மே 8 வரை இந்த சலுகை கிடைக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 4G சாதனங்களை வாங்கும் போது ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யலாம். இது OnePlus 10 Pro மற்றும் 10T ஆகிய மாடல்களுக்கு பொருந்தும். OnePlus Nord Watch விலை ரூ.1,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. ICICI வங்கி மற்றும் Kotak கார்டு மூலம் ரூ.500 தள்ளுபடி கிடைக்கிறது. OnePlus Nord Wired Earphones விலை ரூ.200 வரை குறைத்துள்ளது. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் விலை ரூ. 300 வரை குறைந்துள்ளது.
OnePlus Nord CE3 Lite, OnePlus Nord CE2 Lite மற்றும் OnePlus Nord 2T ஆகியவை உடனடி வங்கி தள்ளுபடியாக ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. மே 4 முதல் 10 ஆம் தேதி வரை கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இது கிடைக்கிறது. OnePlus Nord 2T மீது ரூ.1,500 மற்றும் OnePlus Nord CE2 Lite விலையில் ரூ. 500 மற்றும் OnePlus Nord 2T விலையில் ரூ.1,500 தள்ளுபடி செய்யப்படுகிறது.

OnePlus Pad சாதனத்தின் மீது ரூ.1,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. கோடக் கார்டுடன் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இது பொருந்தும். அமேசான், OnePlus.in, OnePlus எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள் மற்றும் Flipkart.com இல் மே 11 முதல் 31 ஆம் தேதி வரை கிரெடிட் கார்டில் இந்த சலுகை கிடைக்கும். OnePlus Pad விலையை ரூ.5000 குறைக்க நீங்கள் எக்ஸ்சேன்ஜ் சலுகையை பயன்படுத்தலாம். Samsung மற்றும் Apple சாதனங்களின் எக்ஸ்சேஞ் செய்தால் ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும்.
OnePlus TV 65 Q2 Pro விலை ரூ. 5,000 குறைந்துள்ளது. OnePlus TV 32Y1, 43Y1 மற்றும் 40Y1 விலைகள் ரூ.1500 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. OnePlus 32 Y1S, 40 Y1S அல்லது 43 Y1S விலை ரூ.1500 வரை குறைக்கப்பட்டுள்ளன. OnePlus 32 Y1S Edge மற்றும் 43 Y1S Edge சாதனங்களும் இந்த தள்ளுபடியை பெறுகின்றன.
OnePlus 43 Y1S Pro, 50 Y1S Pro மற்றும் 55 Y1S Pro விலைகள் ரூ.3000 வரை குறைந்துள்ளது. OnePlus TV 55 U1S மற்றும் 65 U1S விலைகள் ரூ. 400 வரை குறைக்கப்பட்டுள்ளன. OnePlus கோடைகால விற்பனைச் சலுகைகள் இன்று மே 4 ஆம் தேதி முதல் 9 மே 2023 வரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்களில் கிடைக்கும்.
சில கிரெடிட் கார்டு சலுகைகள் மே 31 ஆம் தேதி வரை கிடைக்கும். இந்த சலுகைகள் Amazon.in, Flipkart, OnePlus.in, OnePlus Experience Stores வழியாக கிடைக்கும். இப்படி ஒரு சூப்பர் வாய்ப்பை நழுவ விடாமல் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








