Home
News

புது Phone, Tablet, Watch, Earbuds-னு.. எது வாங்குறதா இருந்தாலும் ஜூலை 16 வரை பொறுங்க.. ஏன்னா?

புதிய ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் அல்லது ஸ்மார்ட் வாட்ச் அல்லது இயர்பட்ஸ் என்று நீங்கள் எந்தவொரு புதிய டிவைஸ் அல்லது கேஜெட்டை வாங்க திட்டமிட்டு இருந்தாலும் சரி.. அதை ஜூலை 16 ஆம் தேதி வரையிலாக தள்ளிப்போடவும். ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனமானது ஜூலை 16 ஆம் தேதியன்று, அதன் பல வகையான புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. அப்படி என்னென்ன தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது? அது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற ஜூலை 16 ஆம் தேதி இத்தாலியின் மிலனில் நடைபெறும் நிறுவனத்தின் கோடைகால வெளியீட்டு விழாவில் மொத்தம் 4 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. அதில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போனும் அடங்கும்.

புது Phone, Tabletனு.. எது வாங்குறதா இருந்தாலும் ஜூலை 16 வரை பொறுங்க!

இதனுடன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2), புதிய ஸ்மார்ட் வாட்ச் ஆன ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் (OnePlus Watch 2R) மற்றும் புதிய இயர்பட்ஸ் மாடலான ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ (Nord Buds 3 Pro) ஆகியவைகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒன்பிளஸ் நிறுவனமானது அதன் 4 புதிய தயாரிப்புகளின் அம்சங்கள் மட்டுமின்றி, அவைகளின் வடிவமைப்பு குறித்தும் இன்னும் வாய் திறக்காமல் உள்ளது. ஆனால் ஆன்லைனில் வெளிவந்துள்ள எண்ணற்ற டிசைன் லீக்ஸ் வழியாக ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் டிசைனை மட்டும் சற்று யூகிக்க முடிகிறது.

எக்ஸ் தளம் வழியாக @OnePlusClub வெளியிடப்பட்ட புகைப்படத்தின்படி, ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும்: டூ-டோன் மின்ட் க்ரீன் பினிஷ் (two-tone mint green finish), டூ-டோன் சில்வர் பினிஷ் (two-tone silver finish) மற்றும் ஒரு பேஸிக் பிளாக் (basic black)

மூன்று கலர் ஆப்ஷன்களுமே புதிய கேமரா செட்டப் டிசைனை பெற்றுள்ளன. அனைத்து வேரியண்ட்களுமே 2 கிடைமட்டமாக பேக் செய்யப்பட்ட கேமராக்களுடன் வருகிறது. கூடவே ஒரு எல்இடி ஃபிளாஷ் யூனிட்டையும் கொண்டுள்ளது. ஆனால் எல்இடி ஃபிளாஷ் யூனிட் ஆனது கேமரா சென்சார்களுக்கு அருகே இல்லாமல் சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது

OnePlus Nord 4, முந்தைய அறிக்கையின்படி, Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC கொண்டதாகக் கூறப்படுகிறது. சாதனம் 120Hz திரை புதுப்பிப்பு வீதத்துடன் 6.74-இன்ச் OLED டிஸ்ப்ளே இடம்பெறலாம். இந்த போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராக்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. சாதனம் 5,500mAh பேட்டரி மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 100W வேகமான வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) ஸ்மார்ட்போனில் காணப்படும் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Snapdragon 7+ Gen 3) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74 இன்ச் 1.5கே கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, இது 50எம்பி SonyIMX 882 ப்ரைமரி சென்சார் மற்றும் 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டரை கொண்டிருக்கலாம்ம். பேட்டரியை பொறுத்தவரை, இது ஒரு பெரிய ஊக்கத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் முன்னோடியான ஒன்பிளஸ் நோர்ட் 3 மாடலில் நாம் பார்த்த 5000mAh இலிருந்து இது 5,500mAh ஆக அப்கிரேட் செய்யப்படலாம். இந்தியாவில் இது ரூ.23,000-ஐ சுற்றிய விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட்டில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 12.1 இன்ச் 3K LCD டிஸ்பிளே, 900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 16ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரை யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜ், 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 9510mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு போன்ற அம்சங்களை பேக் செய்யலாம். இது ரூ.42,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Summer Launch Event July 16 OnePlus Nord 4 Pad 2 Watch 2R Nord Buds 3 Pro Launching
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X