Home
News

OnePlus-ன் சிறப்பான Summer Launch 2025.. பட்ஜெட் விலையில் OnePlus Nord 5, Nord CE5.. போட்டு தாக்கும் அம்சங்கள்

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஜூலை 8 ஆம் தேதியன்று அதன் ஒன்பிளஸ் சம்மர் லான்ச் ஈவென்ட் 2025 (OnePlus Summer Launch Event 2025) நிகழ்வை நடத்தவுள்ளது. இந்நிகழ்வு எத்தனை மணிக்கு தொடங்கும்? இதை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? என்னென்ன அறிமுகமாகும்? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஒன்பிளஸ் சம்மர் லான்ச் ஈவென்ட் 2025 - லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த வெளியீட்டு நிகழ்வு ஜூலை 8 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கும். ஒன்பிளஸ்-ன் மற்ற எல்லா வெளியீட்டு நிகழ்வை போல, இதுவும் ஒன்பிளஸ்-ன் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் வழியாக லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும் மற்றும் சோஷியல் மீடியா பக்கங்களில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும்.

OnePlus Summer Launch 2025.. பட்ஜெட் விலையில் OnePlus Nord 5, Nord CE5

ஒன்பிளஸ் சம்மர் லான்ச் ஈவென்ட் 2025 - என்னென்ன அறிமுகமாகும்? இந்நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களாக ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்த் சிஇ 5 (OnePlus Nord CE5) ஆகிய 2 மாடல்களும், ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் ஆக ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) ஆகியவைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ஒன்பிளஸ் நோர்ட் 5, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன்கள் என்ன விலைக்கு வரும்? ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,000 முதல் ரூ.35,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.29,999 ஆக இருக்கலாம். மறுகையில் உள்ள ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.25,000 ஆக இருக்கலாம்.

OnePlus Summer Launch 2025.. பட்ஜெட் விலையில் OnePlus Nord 5, Nord CE5

ஒன்பிளஸ் நோர்ட் 5, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனில் LPDDR5X RAM உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட் இருபப்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அபெக்ஸ் சிப்செட் (MediaTek Dimensity 8350 Apex SoC) இடம்பெறும்.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா யூனிட் உடன் வரும் என்பதையும், அதில் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார் மற்றும் 8-மெகாபிக்சல் 116-டிகிரி அல்ட்ரா-வைட் ஷூட்டர் இடம்பெறும் என்பதையும் ஒன்பிளஸ் ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 சென்சாரை கொண்ட செல்பீ கேமரா இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டுமே 60fps இல் 4K வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும். மேலும் ஸ்மார்ட்போன் லைவ் போட்டோ (LivePhoto) அம்சத்தையும் ஆதரிக்கும்.

மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது ஐபி65 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு கட்டமைப்பு, 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 5200mAh பேட்டரி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் FHD+ (1272 x 2800 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கலம்.

OnePlus Summer Launch 2025.. பட்ஜெட் விலையில் OnePlus Nord 5, Nord CE5

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை இது மிகப்பெரிய 7,100mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மூலம் 59 நிமிடங்களில் 1% முதல் 100% வரை சார்ஜ் ஆகும் என்பதையும் ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. வெறும் 10 நிமிட சார்ஜ் ஆனது 6 மணிநேர யூட்யூப் பிளேபேக்கை உறுதியளிக்கிறது.

கேமராவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50எம்பி சோனி LYT-600 1/1.95″ ப்ரைமரி சென்சார் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சென்சார் ஒன்பிளஸ் 13 சீரிஸின் அதே மேம்பட்ட ரா எச்டிஆர் (RAW HDR) அல்காரிதம் மற்றும் ரியல் டோன் எக்ஸ்போஷர் தொழில்நுட்பம் இடம்பெறுகிறது.

OnePlus Summer Launch 2025.. பட்ஜெட் விலையில் OnePlus Nord 5, Nord CE5

ஒன்பிளஸ் பட்ஸ் 4 என்ன விலைக்கு வரும்? இது ரூ.6000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ்-ன் இந்த புதிய TWS பட்ஸ்கள் ஸ்டார்ம் கிரே மற்றும் ஜென் கிரீன் ஆகிய 2 கலர்களில் கிடைக்கும் என்பதும், இந்த பட்களில் 11மிமீ வூஃபர்கள் மற்றும் 6மிமீ ட்வீட்டர்கள் மற்றும் டூயல் DAC யூனிட்கள் இருக்கும் என்பதையும் அமேசான் இந்தியாவின் மைக்ரோசைட் வெளிப்படுத்தி உள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Summer Launch Event 2025 on July 8 Timing Live OnePlus Nord 5 Nord CE 5 Buds 4 Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X