இத எதிர்பார்க்கல.. ON பண்ண இடத்தை அதிரவிடும் OnePlus Speaker.. மல்டிபிள் வூஃபர்.. 360 டிகிரி ஆடியோ வேற!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி.. ஸ்மார்ட் டிவி (Smart TV), இயர்பட்ஸ் (Earbuds), ஆண்ட்ராய்டு டேப்லெட் (Android Tablet), ஸ்மார்ட் வாட்ச் (Smart Watch), கீபோர்ட் (Keyboard) போன்ற இதர சில தயாரிப்புகளையும் விற்பனை செய்து வருகிறது என்பதை நம்மில் பலரும் அறிவோம்.
அந்த வரிசையில் ஒன்பிளஸ் ஸ்பீக்கர் (OnePlus Speaker) சேரும் என்று யாருமே நினைத்துக்கூட பார்த்து இருக்க மாட்டோம். ஆம்! ஒன்பிளஸ் நிறுவனமானது இந்திய சந்தையில் அதன் முதல் ஸ்பீக்கரை அறிமுகம் செய்யவுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ டீஸர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆடியோ தயாரிப்புகளை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நிறுவனமானது இதுவரை வயர்டு மற்றும் வயர்லெஸ் இயர்போன்கள் மற்றும் ஹெட்போன்களின் சீரீஸ்களை மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நோர்ட் பட்ஸ் 2ஆர் (Nord Buds 2R) மற்றும் நோர்ட் பட்ஸ் 2 (Nord Buds 2) மாடல்கள் அறிமுகமாகின
இதற்கிடையில், ஒன்பிளஸ் நிறுவனமானது அதன் அடுத்த ஆடியோ தயாரிப்பாக ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) மாடலை தான் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலைப்பாட்டில், ஒன்பிளஸ் நிறுவனமானது அதன் முதல் ஸ்பீக்கரை அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி, அதன் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் வழியாக, ஒன்பிளஸ் ஸ்பீக்கரின் இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டுள்ளது. "கெட் ரெடி டூ மேக் சம் ம்யூசிக் (Get ready to make some music) என்கிற தலைப்பின்கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒன்பிளஸ் ஸ்பீக்கரின் டீஸர் ஆனது, அது "விரைவில் அறிமுகமாகும்" என்ற குறிச்சொல்லையும் கொண்டுள்ளது. கூடவே "இசையின் அதிசயம் தொழில்நுட்பத்தின் சக்தியை சந்திக்கிறது" என்கிற டேக்லைனும் காணமுடிகிறது.
வெளியான டீஸர், ஒன்பிளஸ் ஸ்பீக்கரின் இன்டர்னல் ஹார்ட்வேர்ளை காட்சிப்படுத்துகிறது. அதன் வழியாக, ஒன்பிளஸ் ஸ்பீக்கர் ஆனது வெவ்வேறு திசைகளில் எதிர்கொள்ளும் பல வூஃபர்களை கொண்டிருக்கும் என்பதை அறிய முடிகிறது. ஆக இந்த ஸ்பீக்கர் 360 டிகிரி ஆடியோ அனுபவத்தை வழங்குமென்று எதிர்பார்க்கலாம்.

இதுதவிர்த்து ஒன்பிளஸ் ஸ்பீக்கர் பற்றிய கூடுதல் விவரங்களை ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. மேலும் இது ஒன்பிளஸ் ஸ்பீக்கர் என்று தான் அழைக்கப்படுமா அல்லது வேறு பெயரை பெறுமா என்பதிலும் தெளிவு இல்லை. இதுகுறித்த மேலதிக தகவல்கள் வெளியானதும், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
ஒன்பிளஸின் லேட்டஸ்ட் ஆடியோ டிவைஸ்களை பொறுத்தவரை, நோர்ட் பட்ஸ் 2ஆர் மற்றும் நோர்ட் பட்ஸ் 2 ஆகியவைகள் ரூ. 2,199 க்கும் மற்றும் ரூ. 2,999 க்கும் வாங்க கிடைக்கிறது. நோர்ட் பட்ஸ் 2ஆர் ஆனது டீப் கிரே மற்றும் டிரிபிள் ப்ளூ கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆரின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது வாய்ஸ் கால்களின் போது நாய்ஸ் ரிடெக்ஷனை ஆதரிக்கும் 12.4 மிமீ டைனமிக் டிரைவர்களை கொண்டுள்ளது மற்றும் 46 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. மறுகையில் உள்ள நோர்ட் பாஸ்ட் 2 ஆக்டிவ் நாய்ஸ் கேன்சல்லேஷன் ஆதரவை கொண்டுள்ளது. ஏஎன்சி அம்சம் முடக்கப்பட்ட நிலையில் இது 36 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி, ஒன்பிளஸ் நிறுவனம் நோர்ட் பட்ஸ் 3 மாடலில் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது, இது மெட்டாலிக் பூச்சுடன் வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது 48dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ப்ளூடூத் 5.3 அல்லது கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) மற்றும் டூயல் கெனெக்டிவிட்டி போன்ற ஆதரவுகளை பெறவும் வாய்ப்புள்ளது.
மேலும் இந்த இயர்பட்ஸ் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி55 ரேட்டிங் உடன் வரும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இதன் சார்ஜிங் கேஸ் ஆனது ஐபிஎக்ஸ்4 ரேட்டிங்கை பெறலாம். ஒவ்வொரு பட்ஸும் 58mAh பேட்டரியை பேக் செய்யலாம்; சார்ஜிங் கேஸில் 520mAh செல் இடம்பெறலாம். இப்படியாக இது மொத்தம் 33 மணிநேர பேட்டரி லைஃப்பை வழங்கலாம்.


Click it and Unblock the Notifications