Home
News

குழப்பமே வேணாம்.. சிறந்த தள்ளுபடி விலையில் OnePlus ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. நீண்ட நாட்களாக வாங்க விரும்பிய கேட்ஜெட்களை தற்போது மலிவு விலையில் வாங்கலாம். அதற்கான சரியான தருணம் இது.

பிளிப்கார்ட், அமேசான் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்களும் ஒரே காலக்கட்டத்தில் பண்டிகை தின விற்பனையை அறிவித்து வருகிறது. இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு விருப்பமான சாதனங்களை அதீத தள்ளுபடியில் வாங்கலாம்.

தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்..

தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்..

பழைய ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறோம். மேம்பட்ட அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். அந்த போனில் சமீபத்திய அனைத்து அம்சங்களும் இருக்க வேண்டும் அதேசமயத்தில் விலையும் சரியாக இருக்க வேண்டும் என்று சிந்தனை உங்களுக்கு இருந்தால் அதற்கு சரியான நேரம் இதுவாகும்.

முன்னணியில் இருக்கும் ஸ்மார்ட்போன் பிராண்ட்களில் ஒன்பிளஸ் பிரதான ஒன்று. ஆப்பிளுக்கு இணையான புகழை எதிர்கொண்டு வரும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பட்டியலை பார்க்கலாம் வாங்க.

OnePlus Nord CE 2 Lite 5G

OnePlus Nord CE 2 Lite 5G

OnePlus Nord CE 2 Lite 5G ஸ்மார்ட்போனானது மிகவும் ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் பேனல் இடம்பெற்றுள்ளது.

இது 60 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றுள்ளது.

தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்..

தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்..

தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,999 என கிடைக்கிறது. வங்கி சலுகைகள் உட்பட கூடுதல் சலுகைகளை பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,999 என கிடைக்கிறது.

OnePlus Nord CE 2 5G

OnePlus Nord CE 2 5G

சுமார் ரூ.30,000 விலைப் பிரிவில் விற்கப்பட்ட OnePlus Nord CE 2 5G ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.24,998 என கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. க்ரே மிரர் வண்ண விருப்பத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

65 வாட்ஸ் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்..

65 வாட்ஸ் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்..

இந்த ஸ்மார்ட்போனில் 65 வாட்ஸ் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கூடிய 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

6.45 இன்ச் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 64 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 11 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

OnePlus 10R 5G

OnePlus 10R 5G

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 80 வாட்ஸ் சூப்பர் வூக் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

ரூ.38,999க்கு விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.32,999க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 15 சதவீதம் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்..

இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்..

6.7 இன்ச் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதில் 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதிக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் இதில் இருக்கிறது.

OnePlus 10 Pro 5G

OnePlus 10 Pro 5G

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.71,999க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.66,999 என கிடைக்கிறது. பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

80 வாட்ஸ் சூப்பர் வூக் சார்ஜிங் ஆதரவு

80 வாட்ஸ் சூப்பர் வூக் சார்ஜிங் ஆதரவு

6.7 இன்ச் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் லென்ஸ், 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 8 எம்பி டெலி போட்டோ லென்ஸ் என்ற டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இதில் 80 வாட்ஸ் சூப்பர் வூக் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord phones Available with Huge discount: Right time to Update Your Smartphones.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X