Home
News

ஒன்பிளஸ் நிறுவன விளம்பரத்தூதரானார்-அமிதாப்.!

இந்தியாவிற்கான புதிய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.

By Ilamparidi

சீன ஸ்மார்ட்போன் தாயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 3டி உள்ளிட்ட தயாரிப்புகளின் மூலம் வாடிக்கையாளர்களிடத்தே குறிப்பிடத்தகுந்த அளவினுக்கு வரவேற்பு பெற்ற நிறுவனமாகும்.மேலும்,தமது ஸ்மார்ட்போன்களை அனைவரும் வாங்கிடக்கூடிய பட்ஜெட்டிற்கு ஏற்ற விலையில் விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனம்,தற்போது இந்தியாவிற்கான தனது விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை அறிவித்துள்ளது.

அதுகுறித்த தகவல்கள் கீழே.

ஒன்பிளஸ் நிறுவன விளம்பரத்தூதரானார்-அமிதாப்.!

ஒன்பிளஸ்:

நாம் மேற்குறிப்பிட்டவாறு தனது தயாரிப்புகளை எளியோர்களும் வாங்கிப்பயன் படுத்திடக்கூடிய வகையில்,விற்பனை செய்துவருகிற சீன ஸ்மார்ட்போன் நிறுவனமாகும்.இது 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மதம் தோற்றுவிக்கப்பட்டது.இது ஓப்போ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.சீனாவைத் தவிர்த்து உலகம் முழுவதும் 42 நாடுகளில் தனது சேவையை வழங்குகிறது.

ஒன்பிளஸ் நிறுவன விளம்பரத்தூதரானார்-அமிதாப்.!

விளம்பர தூதராக அமிதாப்:

இந்நிறுவனம் தற்போது இந்தியாவிற்கான அதன் விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை நியமித்துள்ளது.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் சிஇஓ "இந்தியாவிற்கான நமது விளம்பரதூதராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள திரு.அமிதாப் அவர்களை வரவேற்கிறோம்.மேலும் அவரின் வருகை காரணமாக இந்தியாவில் நமது நிறுவனம் வளர்வதோடு,புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் கூடும் என்றார்.

ஒன்பிளஸ் நிறுவன விளம்பரத்தூதரானார்-அமிதாப்.!

அமிதாப்:

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் அமிதாப் ஒன்பிளஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.அந்நிறுவனத்தின் தொழில்நுட்பம் சிறந்த ஒன்று.ஒன்பிளஸ் நிறுவனத்தின் பயனாளராக நானே இருப்பது இந்தியாவில் அந்நிறுவனம் குறித்த விழிப்புணர்வை ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடத்தே ஏற்படுத்திட உதவிடும் என்றார்.

மேலும் படிக்க

முதன் முறையாக 'டிஸ்லைக் ஆப்ஷன்'-அறிவித்தது பேஸ்புக்.!

Best Mobiles in India

English summary
OnePlus ropes in Amitabh Bachchan as its new brand ambassador.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X