சத்தமில்லாமல் Charging Stations அம்சத்தை அறிமுகம் செய்த ஒன்பிளஸ்.!

|

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது ஒன்பிளஸ் நிறுவனம். இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் அனது பயனர்களுக்காக ஒரு புத்தம் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

நிறுவனத்தின் இந்த புதிய

அதன்படி ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய அம்சமானது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் உரிமையாளர்களுக்கு இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களில் - அருகிலுள்ள ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷன்களை பற்றிய தகவல்களை அறிவிக்கும்.

அம்சம் என்னவென்றால், நீங்கள்

மேலும் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், நீங்கள் ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷனை டிராக் செய்யலாம் மற்றும் அருகாமையில் இருக்கும் ஸ்டேஷனுக்கு இடையிலான தூரத்தையும் கூட கண்காணிக்கலாம்.

உலகையே மிரட்டி எடுத்த டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள்-உடைத்த காரணம் இதுதான்.!

டேஷன்களில்

குறிப்பாக ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷன்களில் ஒருங்கிணைகப்பட்ட beacon உதவியுடன், உங்கள் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அருகிலுள்ள சார்ஜிங் நிலையங்களை அடையாளம் காட்டுகிறது. பின்பு இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை அருகிலுள்ள சார்ஜிங் ஸ்டேஷனை அடையாளம் காணவும், அது சார்ந்த அறிவிப்பை உருவாக்கவும் அனுமதிக்கிறது.

ஸ்டேஷன்கள் பெங்களூர்

சுருக்கமாக கூற வேண்டும் என்றால் விமான நிலையங்களில் நீண்ட நிறுத்தங்களில் நீங்கள் சிக்கிக்கொள்வது போன்ற நேரங்களில், இந்த அம்சத்தினை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ம்யூட் செய்யலாம். குறிப்பாக இந்த சேவையை 6 மணி நேரம் வரை நீங்கள் ம்யூட் செய்யலாம்.

தற்சமயம் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் பெங்களூர் விமான நிலையத்தில் அணுக கிடைக்கிறது, விரைவில் டெல்லி விமான நிலையத்தில் தொடங்கப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

து மாணவர்களுக்கும் ஆசிரியர்களு

முன்பு இந்நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய கல்வி நல திட்டத்தை (Education Benefits programme) அறிமுகம் செய்தது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிரத்தியேக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த திட்டம் இந்தியா முழுவதும் 760 பல்கலைக்கழகங்கள் மற்றும் 38,498 கல்லூரிகளை உள்ளடக்கியது. பின்பு இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அல்லது ஒன்பிளஸ் டிவியை வாங்கும்போது ரூ.1,000 என்கிற தள்ளுபடியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 தகுதியான மாணவர்கள்

பின்பு இந்த கல்வி நல திட்டத்தின் கீழ் உடன் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி அல்லது பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எந்தவொரு ஒன்பிளஸ் அக்சஸெரீஸ்க்கும் 5% தள்ளுபடியை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் ஒன்பிளஸ் கல்வி நல திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, தகுதியான மாணவர்கள் அல்லது ஆசியர்கள் அவர்கள் உண்மையிலேயே ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிக்கு செல்கிறார்களா என்பது சரிபார்க்கப்படும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus Rolls Out Nearby Charging Station Feature and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X