Republic Day Sale 2020: OnePlus ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.!

|

ஒன்பிளஸ் குடியரசு தின விற்பனையை முன்னிட்டு ஒன்பிளஸ் 7டி சீரிஸ் மற்றும் ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது,அதன்படி இந்த சிறப்பு சலுகைகள் இன்று முதல் வரும் ஜனவர் 26-ம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ கிரெடிட்

எஸ்பிஐ கிரெடிட்

ஒன்பிளஸ் 7ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை எஸ்பிஐ பயன்படுத்தி ஈஎம்ஐ பரிவர்த்தனைகளில் அதிகபட்சமாக ரூ.3000-வரை கேஷ்பேக் பெறமுடியும். பின்பு அமேசான் வலைதளத்தில் எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் ரூ.1500வரை கேஷ்பேக் பெறமுடியும்.

 ஒன்பிளஸ் டிவி 55Q1 மற்றும் 55Q1 புரோ

ஒன்பிளஸ் டிவி 55Q1 மற்றும் 55Q1 புரோ

அமேசான் பே பயன்படுத்தி ஒன்பிளஸ் டிவி 55Q1வாங்குபோது ரூ.10,000 கேஷ்பேக் மற்றும் ஒன்பிளஸ் 55Q1 புரோஸ்மார்ட் டிவியை வாங்கும்போது ரூ.15,000-வரை கேஷ்பேக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட சலுகைகளும் இந்த டிவி மாடல்களுக்கும், ஸ்மார்ட்போன்களுக்கும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.!போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.!

standard மற்றும் Pro

standard மற்றும் Pro

ஒன்பிளஸ் டிவி Q1 சாதனம் பொதுவாக 55-இன்ச் 4கே கியூஎல்இடி ஸ்கிரீன் அமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3840 x 2160 பிக்சல் திர்மானம், 16:9 திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் ஒன்பிளஸ் டிவி Q1 ப்ரோ ஸ்மார்ட் டிவி ஆனது 55-இன்ச் கியூஎல்இடி ஸ்கிரீன் மற்றும் 100Hz refresh rate, local dimming zones ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒன்பிளஸ் டிவிகள் ஆனது standard மற்றும் Pro என்கிற இரண்டு வேரியண்ட்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4கே ஆதரவு

4கே ஆதரவு

இந்த ஸ்மார்ட் டிவிகள் 4கே ஆதரவுடன், 96 சதவிகித DCIP-3 மதிப்பெண்ணைக்கொண்டுள்ளது, கூடவே 120 சதவிகித NTSC மதிப்பெண்ணையும் கொண்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உலகில் எந்தவொரு ஸ்மார்ட் டிவியும் பெறாத உயர்ந்த மதிப்பெண்களை இந்த ஒன்பிளஸ் டிவி பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

டால்பி விஷன்

டால்பி விஷன்

பின்பு அனைவரும் எதிர்பார்த்தபடி ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளில் Gamma Color Magic ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது, எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவிகளில் உள்ள அனைத்து உள்ளடங்ககங்களும் 60ஹெர்ட்ஸ் என்கிற Refresh Rate விகிதத்தில் இருக்கும். ஒன்பிளஸ் புதிய ஸ்மார் டிவிகளில் இடம்பெற்றுள்ள டால்பி விஷன் தொழில்நுட்பம் ஆனது டிவிக்கு 40 சதவீதம் அதிக பிரகாசத்தையும், வண்ண துல்லியத்தையும் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிவிகளில் இருக்கும் OTT உள்ளடக்கத்தில் அமேசான் ப்ரைம்,ஈரோஸ் நவ், ஜீ டிவி,நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பல்வேறு செயலிகள் உள்ளன.

8ஸ்பீக்கர் மற்றும் 50வாட் சவுண்ட் அவுட்புட்

8ஸ்பீக்கர் மற்றும் 50வாட் சவுண்ட் அவுட்புட்

அனைவரும் எதிர்பார்த்தபடி 8ஸ்பீக்கர் மற்றும் 50வாட் சவுண்ட் அவுட்புட் கொண்ட sliding சவுண்ட்பார் ஆதரவுடன் வருகிறது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இதன் ஸ்பீக்கர்கள் ஃபார்வர்ட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்தைக் கொண்டுள்ளதால் அனைத்து ஒலிகளும் உங்களிடம் நேரடியாக வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆனது வெறும் 7 மிமீ தடிமனை மட்டுமே கொண்டுள்ளது மற்றும் இது 95.7 சதவிகிதம் ஸ்க்ரீன்-டூ-பாடி என்கிற விகிதத்தைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனங்களின் பின்புறம் ஒரு காந்த தகடு உள்ளது, அதை நகர்த்த டிவியில் உள்ள போர்ட்கள் வெளிப்படுகின்றன.

ஆண்ட்ராய்டு இயங்குதளம்

ஆண்ட்ராய்டு இயங்குதளம்

அறிமுகமான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது,பின்பு இந்த ஸ்மார்ட் டிவிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸமார்ட் டிவிகளின் யுஐ ஆனது ஆக்ஸிஜன் ப்ளே என்று அழைக்கப்படுகிறது. ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ரிமோட் ஆனது சில பொத்தான்களை மட்டுமே கொண்டுள்ளன, பின்பு இந்த ஸ்மார்ட் டிவிகளில் வாய்ஸ் எனேபிள் கூகுள் அசிஸ்டென்ட் in-built screen casting போன்ற வசதிகள் உள்ளன.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், RJ45, ஈதர்நெட் மற்றும் இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Republic Day sale: Top offers on OnePlus 7T series, OnePlus TV series and more : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X