Home
News

போய் வா நண்பா.. இந்த வாரம் முதல் மார்க்கெட்டை விட்டு வெளியேறும் OnePlus நிறுவனம்.. எந்தெந்த நாடுகளில்?

ஒரு புதிய அறிக்கையை நம்பும் பட்சத்தில், குறிப்பிட்ட நாடுகளின் சந்தைகளில் இருந்து ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் வெளியேறுகிறது; இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு - இந்த வாரமே வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் கிடைத்து உள்ளது

ஜெர்மன் வெளியீடான வின்பியூச்சரின் (WinFuture) சமீபத்திய அறிக்கையின்படி, ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் அதன் தாய் நிறுவனமான ஒப்போ (Oppo) ஆகியவைகள் இந்த வாரம் "முக்கியமான உத்திசார் மாற்றங்களை" அறிவிக்க தயாராகி வருகின்றன.

இந்த வாரம் முதல் மார்க்கெட்டை விட்டு வெளியேறும் OnePlus நிறுவனம்?

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக - ஒன்பிளஸ் நிறுவனமானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தைகளிலிருந்து வெளியேறும் என்றும், அதே நேரத்தில் ஒப்போ அந்த இடைவெளியை நிரப்ப குறிப்பாக ஐரோப்பா முழுவதும் தனது இருப்பை விரிவுபடுத்தும் என்றும் வெளியான அறிக்கை கூறுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு, இந்த ஆண்டு ஒரு சவாலான ஆண்டாக மாறியதன் விளைவாக இந்த வதந்தி பரவி வருகிறது. நினைவூட்டும் வண்ணம் கடந்த ஜனவரியில், இந்நிறுவனம் மூடப்படலாம் என்ற ஊகங்கள் இணையத்தில் வேகமாக பரவின; பின்னர் ஒன்பிளஸ் அந்த தகவல்களை பகிரங்கமாக மறுத்தது.

அப்போதிருந்து, இந்த பிராண்ட் தனது உலகளாவிய செயல்பாடுகளை குறைக்கக்கூடும் என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன; எதிர்கால உலகளாவிய ஒன்பிளஸ் போன்கள் நிறுவனத்தின் சொந்த ஆக்சிஜன்ஓஎஸ்-க்கு பதிலாக ஒப்போவின் கலர்ஓஎஸ் உடன் வரக்கூடும் என்ற சமீபத்திய வதந்தியும் இதில் அடங்கும்.

ஐரோப்பாவில் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை ஒன்பிளஸ் ஏற்கனவே தொடங்கியுள்ளது: ஐரோப்பாவின் சில பகுதிகளில் ஒன்பிளஸ் தனது செயல்பாடுகளை குறைத்து வருவதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்படுகின்றன. உதாரணமாக, ஜெர்மனியில் உள்ள நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் தற்போது ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடல் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது.

அதாவது இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் மாடலான ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மற்றும் நார்ட் (Nord) சீரீஸ் போன்கள் கூட இப்போது அங்கு கிடைப்பதில்லை. வின்பியூச்சரின் படி, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரியா, பெல்ஜியம், நெதர்லாந்து, செக் குடியரசு, டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களும் இதேபோன்ற மாற்றங்களை காண்கின்றனர்.

இந்த அறிக்கை உண்மையாக இருந்தால், சீனாவிற்கு வெளியே பிபிகே எலெக்ட்ரானிஸ்-ன் (BBK Electronics) ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் இது மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாக அமையும். பிரீமியம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், வியரபிள்ஸ் (wearables) மற்றும் ஆடியோ தயாரிப்புகள் என விரிவடைவதற்கு முன்பு, குறைந்த விலையில் உயர்தர (flagship-level) ஹார்ட்வேரை வழங்குவதன் மூலம் ஒன்பிளஸ் தனது நற்பெயரை உருவாக்கியது.

அதன் மிகப்பெரிய மேற்கத்திய சந்தைகளில் இரண்டிலிருந்து வெளியேறுவது என்பது அதன் செயல்பாட்டு பாதையில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். இந்த திட்டங்கள் குறித்து ஒன்பிளஸ் அல்லது ஒப்போ ஆகிய நிறுவனங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் இந்த வாரமே இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கருதப்படுகிறது. ஆக இந்த வதந்திகள் உண்மையா என்பதை அறிய நாம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை.

இப்போதைக்கு இந்திய சந்தையை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு எந்த சிக்கலும், பின்னடைவும் இல்லை. சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் என்6 உட்பட எல்லா முக்கிய மாடல்களும் இங்கே வாங்க கிடைக்கின்றன. இந்தியாவில் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹை-எண்ட் வேரியன்ட் ஆன 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது

Best Mobiles in India

English summary
OnePlus Reportedly to exit US and European market and official announcement Expected this week
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X