OnePlus உடன் Jio கூட்டு.. இனி ஒன்பிளஸ் டிவிகளில் 'இந்த' அம்சம்.. VPN கூட இருக்கா? ஜாலி தான்..

|

OnePlus நிறுவனம் JioPages உடன் கூட்டுச் சேருவதாக அறிவித்துள்ளது. JioPages என்பது ரிலையன்ஸ் ஜியோவிற்கு சொந்தமான மற்றும் ஜியோவால் உருவாக்கப்பட்ட ஒரு செயலியாகும். ஜியப் பேஜஸ் (JioPages) என்பது இப்போது ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் இரண்டிற்கும் கிடைக்கும் ஒரு இணைய உலாவியாகச் செயல்படுகிறது. OnePlus நிறுவனம் இந்தியாவில் விரிவான ஸ்மார்ட் டிவிகளை வழங்கி வருகிறது. மேலும் ஜியோபேஜஸ் உடனான இந்த கூட்டாண்மை OnePlus TV உரிமையாளர்கள் தங்கள் ஸ்மார்ட் டிவிகளுடன் பாதுகாப்பான மற்றும் வேகமான இணைய உலாவல் அனுபவத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது.

OnePlus TV பயனர்களுக்கு இப்போது JioPages சேவை

OnePlus TV பயனர்களுக்கு இப்போது JioPages சேவை

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஸ்மார்ட் டிவி பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட உலாவல் அனுபவத்தை வழங்க Jio உடன் கூட்டுச்சேர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள OnePlus TV பயனர்கள் இப்போது JioPages மூலம் மேம்படுத்தப்பட்ட உலாவல் அனுபவத்தைப் பெறுவார்கள் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் ஒரு வெளியீட்டில், பயனர்களுக்கு மேம்பட்ட இணைய உலாவல் அனுபவத்தை வழங்க, JioPages வேகமான Chromium இன்ஜினுடன் வருகிறது, என்றும், இது உலாவல் அனுபவத்தை பாதுகாப்பாகவும் மேம்படுத்தப்பட்டதாகவும் வைத்திருக்க உதவுகிறது என்றும் கூறியுள்ளது.

ஒன்பிளஸ் டிவிகளில் இனி டெஸ்க்டாப் போன்ற அனுபவம்

ஒன்பிளஸ் டிவிகளில் இனி டெஸ்க்டாப் போன்ற அனுபவம்

ஒன்பிளஸ் டிவி திரைகளில் நிலையான டெஸ்க்டாப் போன்ற அனுபவத்துடன் சிறந்த இன் கிளாஸ் வலைப்பக்கத்தை ரெண்டரிங் செய்வதையும் பயனர்கள் பார்க்கலாம். JioPages இன் சிறந்த அம்சங்களில் ஒன்று, பயனர்களுக்குத் தடையற்ற இணைய உலாவல் அனுபவத்தை வழங்குவதற்காக உள்ளமைக்குப்பட்ட விளம்பரத் தடுப்பான் உடன் இந்த ஸ்மார்ட் டிவி பிரௌசர் இப்போது வருகிறது. இது விளம்பர தொல்லைகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பதோடு, டேட்டாவையும் மிச்சம் பிடிக்கிறது.

Gmail இல் கொட்டிக்கிடக்கும் மெயில்களை எப்படி எளிமையாக டெலீட் செய்வது? இது தெரிஞ்சா உங்கள் மெயில் பாக்ஸ் கிளீன்Gmail இல் கொட்டிக்கிடக்கும் மெயில்களை எப்படி எளிமையாக டெலீட் செய்வது? இது தெரிஞ்சா உங்கள் மெயில் பாக்ஸ் கிளீன்

ஜியோ பேஜஸில் VPN அம்சம் கூட இருக்கா?

ஜியோ பேஜஸில் VPN அம்சம் கூட இருக்கா?

ஜியோ பேஜஸ் இரண்டு புதிய அம்சங்களுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான பயன்முறை மற்றும் VPN ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இது பயனர்களுக்குப் பாதுகாப்பான உலாவல் அனுபவத்தைச் சேர்க்க உதவுகிறது. பயனர்கள் முகப்புத் திரையில் கிடைக்கும் Quicklinks அம்சமும் இதில் உள்ளது. அங்கு அவர்கள் தங்களுக்குப் பிடித்த இணையதளங்களைச் சேமித்து வைத்து, வேண்டிய நேரத்தில் எளிமையாக கிளிக் செய்து பயன்படுத்தலாம்.

மாணவர்களுக்கான பிரத்தியேக ஸ்டடி மோடு அம்சம்

மாணவர்களுக்கான பிரத்தியேக ஸ்டடி மோடு அம்சம்

இந்தி, குஜராத்தி, தமிழ் மற்றும் பிற பிராந்திய மொழிகள் போன்ற பல்வேறு மொழிகளில் இணையத்தில் உலாவக்கூடிய பிராந்திய மொழிகளுக்கான ஆதரவையும் JioPages வழங்குகிறது. ஜியோ பேஜஸ் பிரௌசரரில் ஒருங்கிணைக்கப்பட்ட மாணவர்களுக்கு ஏற்ற 'Study Mode' அம்சம் கூட உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இது மாணவர்கலின் படிப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் முக்கிய படிப்புகளுக்கான தளத்தை ஆதரிக்கும் அம்சத்துடன் வருகிறது. நிச்சயமாக இந்த மேம்படுத்தப்பட்ட அம்சத்தை மாணவர்கள் பாராட்டுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை என்று நிறுவனம் நம்புகிறது.

ஏலியன்களால் ஒரு பெண் கர்ப்பமா? UFO சாட்சிகளுடன் மனிதர்களுக்கு பாலியல் சந்திப்பா? பென்டகன் ஆவணம் சொன்ன உண்மை..ஏலியன்களால் ஒரு பெண் கர்ப்பமா? UFO சாட்சிகளுடன் மனிதர்களுக்கு பாலியல் சந்திப்பா? பென்டகன் ஆவணம் சொன்ன உண்மை..

ஸ்மார்ட் டிவி விற்பனையில் பட்டையை கிளப்பும் ஒன்பிளஸ்

ஸ்மார்ட் டிவி விற்பனையில் பட்டையை கிளப்பும் ஒன்பிளஸ்

அறியாதவர்களுக்கு, ஒன்பிளஸ் 2021 முதல் 2021 வரை 300% ஆண்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதேபோல், ஒன்பிளஸ் நிறுவனம் 2021 ஆம் ஆண்டின் Q4 இல் நாட்டின் முதல் ஐந்து முன்னணி ஸ்மார்ட் டிவி பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று எதிர்முனை ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. OnePlus TV பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் டிவிகளில் இப்போது முதல் எளிமையாக JioPages பயன்பாட்டை சில நொடிகளில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus Partners With JioPages For Safe and Fast Browsing In Smart TVs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X