Home
News

சடனாக விலை குறைந்த OnePlus Pad.. இது தான் புது பிரைஸ் கட் ரேட்.. யோசிக்காம உடனே வாங்கிடுங்க..

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) என்ற டேப்லெட் சாதனம் மீது திடீரெனெ விலை குறைப்பு (Price drop) அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனம் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad): விலை குறைப்பிற்கு பிறகு ஒன்பிளஸ் பேட் சாதனத்தை வாங்க கிடைக்கும் புதிய விலை தகவல் பற்றிய விபரமாக பதிவு தான் இது. கடந்த 2023 ஆம் ஆண்டில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் டேப்லெட் சாதனமாக இந்த ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) திகழ்ந்தது. இப்போது 2024 ஆம் ஆண்டின் துவக்கத்திலும் கூட, ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) சாதனம் ஒரு பெஸ்ட் ஆண்ட்ராய்டு டேப்லெட்டாக திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை.

சடனாக விலை குறைந்த OnePlus Pad.. இது தான் புது பிரைஸ் கட் ரேட்..

ஒன்பிளஸ் பேட் சீரிஸ்: இது 2023 ஆம் ஆண்டில் பலருக்கும் பிடித்த டேப்களில் ஒன்றாக திகழ்ந்தது. இப்போது நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த Android டேப்களில் (best android tablet device) இதுவும் ஒன்றாகும். OnePlus ஆனது 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகமான ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) உடன் டேப்லெட் பிரிவில் தனது பயணத்தை துவங்கியது. அக்டோபர் 2023 இல் நிறுவனம் ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) எடிஷன் அறிமுகத்தை அறிமுகம் செய்தது.

விலை குறைப்பு: மலிவு விலை டேப்லெட் சாதனமாக இது அறிமுகம் செய்தது. இருப்பினும், மக்களின் கவனத்தை ஈர்த்த பெஸ்ட் ஆண்ட்ராய்டு டேப்லெட் சாதனம் என்றால் அது ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) சாதனம் தான் என்பதில் சந்தேகமில்லை. சரி, இப்போது விலை குறைப்பு பற்றிய தகவலை பார்க்கலாம். OnePlus நிறுவனம் இப்போது அதன் ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) மீது முழுமையாக ரூ.1,500 விலை குறைப்பை அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் பேட் புது விலை: இந்த ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) சாதனம் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் வகைகளில் வருகிறது. இதில் 8ஜிபி மற்றும் 128ஜிபி மாடல் அதன் அசல் விலையான ரூ.37,999 இலிருந்து ரூ.36,499 விலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 12ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை இப்போது ரூ.38,499 என்ற விலைக்கு குறைந்துள்ளது. இதன் அசல் விலையான ரூ.39,999 விலையை விட இது ரூ.1,500 குறைந்துள்ளது.

சடனாக விலை குறைந்த OnePlus Pad.. இது தான் புது பிரைஸ் கட் ரேட்..

ரூ.3000 விலை குறைப்பு யாருக்கு: ஒன்பிளஸ், நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு மற்றும் வங்கி பயனர்களுக்கு ரூ. 3,000 உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. இது என்ட்ரி லெவல் ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) மாடலான 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலையை ரூ. 33,499 ஆகக் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை குறைப்பு அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகிய இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

யோசிக்காம உடன் வாங்குங்க: குறைந்த விலையில் ஒரு பெஸ்டான ஆண்ட்ராய்டு டேப்லெட் சாதனத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், நீங்கள் கட்டாயமாக இந்த ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) சாதனத்தை வாங்கலாம். ரூ. 1500 ஒரு பெரிய விலை குறைப்பு இல்லை என்று சிலர் கருதினாலும், நாள் இறுதியில் ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) வாங்கும் பொழுது உங்கள் கையில் 1500 ரூபாய் மிச்சமாகிறது என்பது சிறந்த விஷயம் தானே.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad The Best Android Tablet Gets Price Drops In India Check New Price and Specifications Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X