Home
News

பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா ஹைப் எகுறுது.!

ஒன்பிளஸ் OnePlus நிறுவனம் தனது வரவிருக்கும் ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) டிவைஸை பற்றி மீண்டும் ட்விட்டரில் டீஸ் செய்து, ரசிகர்களின் ஆர்வத்தை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்த்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னால் நிறுவனம், இந்தியாவில் அதன் புதிய OnePlus தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது என்று டீஸ் செய்திருந்தது.

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் பிப்ரவரி 7ம் தேதி, இந்தியாவில் அதன் கிளவுட் 11 (Cloud 11) நிகழ்வை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது, நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பிரிவில் ஒன்பிளஸ் 11 (OnePlus 11) சாதனத்தை வெளியிடுகிறது. இத்துடன் ஒன்பிளஸ் 11R (OnePlus 11R) சாதனத்தையும் நிறுவனம் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யவுள்ளது.

பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா?

பச்சையாக OnePlus Pad சாதனத்தை டீஸ் செய்து காட்டிய OnePlus.!

இது தவிர, மற்ற பிரிவுகளில், நிறுவனம் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 (OnePlus Buds Pro 2) இயர்பட்ஸ் சாதனம், புது ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி (OnePlus Smart TV) போன்ற புது மாடல்களையும் அறிமுகம் செய்யவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், முதல் முறையாக ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு புது டேப்லெட் மாடலும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த டிவைஸை நிறுவனம் ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) என்ற பெயரில் அறிமுகம் செய்யவுள்ளது.

ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் (OnePlus Earbuds), ஸ்மார்ட் டிவி போன்ற பிரிவுகளில் நிறுவனம் ஏற்கனவே பல சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதால், OnePlus புதிதாக அறிமுகம் செய்யவுள்ள புதிய டேப்லெட் சாதனம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தை நிறுவனம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக உயர்த்தி வருகிறது. இப்போது நிறுவனம் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக ஒன்பிளஸ் பேட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் இப்போது வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் பேட் சாதனம் ஸ்டைலஸ் அம்சத்துடன், மிகவும் ஸ்லிம் ஆன பெசல்களை கொண்டிருக்கும் என்று டீஸ் செய்துள்ளது. குறிப்பாக, நிறுவனம் வெளியிட்ட படத்தில் 'பச்சை' நிறத்தில் OnePlus Pad இருப்பது தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது. உலகளவில் இந்த புதிய சாதனம் இப்போது பெரிய ஹைப்பை உருவாக்கியுள்ளது.

பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா?

OnePlus Pad டிவைஸில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

முந்தைய டீசர் படத்தில், இதன் டிவைன் மற்றும் பின்பக்க ஒற்றை கேமரா விருப்பம் தெளிவாக காண்பிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய ஒன்பிளஸ் பேட் சாதனத்தின் சில விபரங்களும், விலை விபரமும் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் அம்சங்கள் பற்றிப் பேசுகையில், ஒன்பிளஸ் பேட் சாதனம் 12.4' இன்ச் கொண்ட முழு HD+ OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒன்பிளஸ் டேப்லெட் சாதனம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மூலம் இயக்கப்படும். இந்த டிவைஸ் 6ஜிபி ரேம் உடன் வரும் என்று கூறப்படுகிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால், ஒன்பிளஸ் பேட் இரட்டை பின்புற கேமராவைக் கொண்டிருக்கும் என்று லீக் குறிப்பிடுகிறது. இதில் 13MP + 5MP சென்சார் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால், நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர் புகைப்படத்தில் ஒற்றை கேமரா அமைப்பு மட்டுமே இருப்பது போல தெரிகிறது. இதன் முன்பக்கத்தில் 8MP முன் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus Pad ஆனது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 10,090 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும். ஒன்பிளஸ் பேட் சாதனம் ஆண்ட்ராய்டு 12L அவுட் ஆப் தி பாக்ஸ் (Android 12L Out of the box) உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.20,000 அல்லது அதற்கும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Pad Teased With Stylus In Green Colour Before Launch Of Feb 7th
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X