Home
News

உஷாரய்யா உஷாரு.. ஜெர்மனியில் திடீரென நிறுத்தப்பட்ட OnePlus Pad விற்பனை.. இந்தியாவில் நம்பி வாங்கலாமா?

சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட்டாக ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) இந்தியா உட்பட, உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஏற்கனவே முன்பதிவை (Pre-order) தொடங்கிவிட்ட இந்த டேப்லெட்டின் திறந்த விற்பனை (Open Sale) வருகிற மே 2 முதல் நடக்கவுள்ளது.

இதற்கிடையில், ஒன்பிளஸ் பேட்டின் விற்பனையானது ஜெர்மனி (Germany) நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது என்கிற தகவல் ஒன்பிளஸ் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஒன்பிளஸ் பேட்டின் விற்பனை திடீரெனெ நிறுத்தப்பட்ட என்ன காரணம்? இந்தியாவில் உள்ளவர்கள் இதை நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:

உஷாரய்யா உஷாரு.. ஜெர்மனியில் நிறுத்தப்பட்ட OnePlus Pad விற்பனை!

சமீபத்திய காலங்களில் அறிமுகமான ஒரு நல்ல ஆண்ட்ராய்டு டேப்லெட் (Android Tablet) என்றால் அது ஒன்பிளஸ் பேட் ஆகத்தான் இருக்கும். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக, ஜெர்மனியில் ஒன்பிளஸ் பேட்டின் விற்பனை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து இந்திய பயனர்கள் குழப்பமடையவோ, பீதியடைவோ தேவையில்லை.

ஏனென்றால், ஜெர்மனியில் ஒன்பிளஸ் பேட்டின் விற்பனை நிறுத்ததப்பட்டதிற்கு பின்னால் எந்த விதமான 'நெகட்டிவ்' காரணங்களும் இல்லை. அதாவது ஒன்பிளஸ் பேட்டில் ஏதோ கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதனால் தான் ஜெர்மனியில் அதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என்று நீங்கள் நினைத்தால் - அது100% தவறு!

பிறகு என்ன தான் காரணம்? என்று கேட்டால்.. ஒன்பிளஸ் பேட்டிற்கு ஏற்பட்டுள்ள 'ஹை டிமாண்ட்' (High Demand) தான் முக்கிய காரணம் என்பது போல் தெரிகிறது (கூடவே இன்னொரு காரணமும் இருக்கிறது). ஜெர்மனியில் ஒன்பிளஸ் பேட்டிற்க்கான முன்பதிவுகள் இந்த ஏப்ரல் மாதம் முழுவதுமே நடந்துள்ளது. இதற்கிடையில் இந்தியாவிலும் முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளது.

"எங்கே ப்ரீ-ஆர்டர் செய்தவர்களுக்கு ஒன்பிளஸ் பேட்-ஐ கொடுக்க முடியாமல் போய்விடுமோ?" என்கிற நோக்கத்தில் ஒன்பிளஸ் நிறுவனம், ஜெர்மனியில் அதன் ஒன்பிளஸ் பேட்டிற்கான முன்பதிவுகளை நிறுத்தி உள்ளது போல் தெரிகிறது. இதன் பின்னணியில் 'ஹை-டிமாண்ட்' தான் உண்மையான காரணமா என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் வெளிப்படுத்தவில்லை.

இருப்பினும் ஒரு அறிக்கை வழியாக "ஜெர்மனியில் ஏப்ரல் 10 மற்றும் 24 க்கு இடையில் முன்பதிவு செய்தவர்கள் அனைவருக்குமே ஒன்பிளஸ் பேட்டும், எங்களுடைய முழு ஆதரவு மற்றும் உத்தரவாதமும் கிடைக்கும்" என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே ஜெர்மனியில் தனது வர்த்தகத்தை நிறுத்தியுள்ளது (இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்).

கடந்த ஆண்டு இந்நிறுவனம் ஜெர்மனியில் தனது ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதை திடீரென நிறுத்தியது. இதற்கிடையில் ஒன்பிளஸ் பேட்டின் முன்பதிவுகள் ஜெர்மனியில் அறிவிக்கப்பட்டதே சற்று ஆச்சரியமாக இருந்தது, இருப்பினும் அது இனி நடக்காது என்பது போல் தெரிகிறது. ஜெர்மனியில் ஒன்பிளஸ் மற்றும் நோக்கியாவிற்கு (NOKIA) இடையேயான சிக்கல்கள் தான் இதற்கெல்லாம் காரணம்.

மேற்கண்ட சிக்கல்கள், குழப்பங்கள் எல்லாமே ஜெர்மனியில் தான். எனவே இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் பற்றி உங்களுக்கு எந்த சந்தேகமும், குழப்பமும் வேண்டாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் பேட் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் இந்தியாவில் வாங்க கிடைக்கும்: 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.37,999 என்றும், 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.39,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Pad Sales Suspended in Germany Is OnePlus Fans in Indian Should Bother About This or Not
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X