ஆர்டர் அனல் பறக்குது.. OnePlus டேப்லெட் மீது ரூ.6000.. போன்கள் மீது ரூ.10,000 விலை குறைப்பு.. Amazon அதிரடி!
அமேசான் (Amazon) வலைதளத்தில் நடக்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Great Indian Festival Sale) ஸ்மார்ட்போன்களின் மீது ஆர்டர்களுக்கு இணையாக ஒரு ஆண்ட்ராய்டு டேப்லெட் மீதும் ஆர்டர் குவிகிறது. அது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) ஆகும். தற்போது இந்த டேப்லெட் அதன் அசல் விலையை விட ரூ.6000 குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் பேட்-ன் அசல் விலை என்ன? ஆபர் விலை? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
அமேசானில் தற்போது ஒன்பிளஸ் பேட் டேப்லெட் ஆனது ரூ.6,000 விலை குறைப்பு / டிஸ்கவுண்ட்டை பெற்று ரூ.31,990 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் இது ரூ.37,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.30,000 ரேன்ஜில் திடமான ஆண்ட்ராய்டு டேப்லெட்டை தேடும் எவருக்குமே இது ஒரு சிறந்த டீல் ஆகும்!

ஒன்பிளஸ் பேட் மீதான இந்த அமேசான் டீல் எப்போது காலாவதியாகும் என்று தெரியவில்லை. இது அமேசானின் தீபாவளி பண்டிகை கால சிறப்பு விற்பனை முடியும் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒரு சிறப்பு விற்பனை நேரலையில் இருக்கும் போது, அமேசான் ஒப்பந்த விலைகளை அதிகரிக்காது.
மேலும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் கடைசி தேதியும் (Amazon Great Indian Festival Sale End Date) இன்னும் வெளியிடவில்லை. ஆக இது வேண்டுமானாலும் முடியவடையலாம். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் கடந்தகாலமகளை புரட்டிப்பார்க்கும் போது, இது "கிட்டத்தட்ட" ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் பேட் முக்கிய அம்சங்கள்: இது 11.6-இன்ச் என்கிற அளவிலான 144 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்பிளவை கொண்டுள்ளது. 88% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோவுடன் வரும் இந்த டேப்லெட்டின் அனைத்து பக்கங்களிலும் 6.54 மிமீ என்கிற அளவிலான மிகவும் மெல்லிய பெஸல்களே உள்ளன. பெரும்பாலான ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகள் பிளாக் அல்லது க்ரே நிறத்தில் மட்டுமே கிடைக்கும் நிலைப்பாட்டில், ஒன்பிளஸ் பேட் ஹாலோ கிரீன் நிறத்திலும் வாங்க கிடைக்கிறது.
12ஜிபி வரையிலான ரேம் மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப் உடன் வரும் ஒன்பிளஸ் பேட் டேப்லெட் ஆனது 9510mAh என்கிற அளவிலான பேட்டரியை பேக் செய்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பேட்டரி 14.5 மணிநேர வீடியோ பிளேபேக் டைம் மற்றும் 30 நாட்கள் ஸ்டேண்ட்பை டைமை வழங்கும். இந்த பேட்டரி 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது சுமார் 80 நிமிடங்களில் 0 - 100 சதவீதம் சார்ஜ் செய்யும் திறனை கொண்டுள்ளது.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான முக்கிய ஆபர்களை பொறுத்தவரை.. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) ஸ்மார்ட்போன் ஆனது 37% தள்ளுபடியை பெற்று ரூ.26,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போன் ஆனது 6% தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு பதிலாக ரூ.23,499 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) ஸ்மார்ட்போன் ஆனது 30% தள்ளுபடியை பெற்று ரூ.39,999 க்கு பதிலாக ரூ.27,997 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது 19% தள்ளுபடியை பெற்று ரூ.19,999 க்கு பதிலாக ரூ.16,290 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போன் ஆனது 12% தள்ளுபடியை பெற்று ரூ.42,999 க்கு பதிலாக ரூ.37,998 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








