OnePlus Pad Go டேப்லெட்: இந்திய அறிமுக தேதி அறிவிப்பு.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
கடந்த சில தினங்களாக 'டீஸ்' செய்யப்பட்டு வந்த ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரண்டாவது டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் கோ (Oneplus Pad Go) எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது வருகிற அக்டோபர் 6, 2023 அன்று பிரத்யேகமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மறுபுறம், ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் டின் மைக்ரோசைட் (Microsite) ஆனது பிளிப்கார்ட்டில் 'லைவ்' ஆகியுள்ளது.

இதன்மூலம் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது இந்தியாவில் அறிமுகமானதும் அது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்குவதற்கு கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி, வரவிருக்கும் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது ஒரு டோன்டு டவுன் வெர்ஷனாக (Toned Down Version) இருக்கும்.
அதாவது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) உன் ஒப்பிடும்போது இதன் விலை குறைவானதாக, இதுவொரு பட்ஜெட் டேப்லெட்டாக (Budget Tablet) இருக்கலாம். மேலும், இது இரண்டு வெர்ஷன்களில் வரக்கூடும்: ஒன்று வைஃபை-ஒன்லி (WiFi Only), மற்றொன்று வைஃபை மற்றும் செல்லுலார் கனெக்டிவிட்டி (WiFi and Cellular Connectivity) உடன் வரலாம்.
வடிவமைப்பை பொறுத்தவரை, ஒன்பிளஸ் பேட் கோ ஆனது முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் பேட் உடனான ஒற்றுமையைக் கொண்டிருக்கும். அதாவது ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டில் அதே கர்வ்டு எட்ஜ் டிசைன் (Curved Edge Design) மற்றும் கேமரா செட்டப்பை (Camera Setup) நாம் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் பேட் கோவின் பின்புற வடிவமைப்பானது மேட் மெட்டல் (Matte Metal) மற்றும் க்ளாஸி பினிஷ் (Glossy Finish) உடனான இரண்டு வகையான க்ரீன் கலர் டெக்ஷரில் ஒரு தனித்துவமான 'ட்வின் மின்ட்' (Twin Mint) நிறத்தை பெரும். இது டேப்லெட் சந்தையில் தனித்துவமான மற்றும் புதிய பாணியை வழங்குவதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் மாடலில் நாம் கண்டதை போலவே ஒன்பிளஸ் பேட் கோ மாடலிலும் நாம் சிங்கிள் ரியர் கேமரா செட்டப் (Single Rear Camera Setup) மற்றும் நான்கு ஸ்பீக்கர்களை காணலாம்.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இந்த டேப்லெட் 2.4கே ரெசல்யூஷனை கொண்ட டிஸ்பிளே (2/4K Resolution Display) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்டு நிறுவனத்தின் சொந்த ஆக்சிஜன்ஓஎஸ் 13 (Oxygen OS 13) உடன் வரும். அறிமுகத்தை போது இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் டிவைஸ்களுக்கு இடையில் மிகவும் வேகமான ஃபைல் ஷேரிங்கிற்கு உதவும் கன்டென்ட் சின்க அம்சத்தையும் (Content Sync Feature) இதில் கொண்டு வரும். இதன் மூலம் பயனர்கள் தங்கள் ஒன்பிளஸ் டிவைஸ்களிலிருந்து ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டிற்கு மீடியா மற்றும் கிளிப்போர்டு கன்டென்ட்டை விரைவாக பகிர முடியும்.
மேலும், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பயனர்கள் வைஃபை இணைப்பை பயன்படுத்தாமலேயே தங்கள் ஸ்க்ரீன்களை ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் உடன் பகிர்ந்து கொள்ள முடியும் (Screen Sharing). கூடுதலாக, ஒன்பிளஸ் நிறுவனம் மேலும் ஒரு அம்சத்தை உருவாக்கி வருகிறது, இது பயனர்கள் தங்கள் ஒன்பிளஸ் டேப்லெட்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது,.
எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை (Expected Price) பொறுத்தவரை, ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் ஆனது இந்தியாவில் ரூ.25,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் ஆனது இந்தியாவில் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








