Home
News

OnePlus Pad 5G சாதனம் அறிமுகமாகிறதா? என்ன விலையில் என்ன அம்சத்துடன் வெளிவரும்?

OnePlus நிறுவனம் OnePlus Pad என்ற புதிய டேப்லெட்டை விரைவில் வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது OnePlus இன் முதல் டேப்லெட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வதந்திகளின்படி, நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், OnePlus இல் இருந்து இதுவரை எந்த குறிப்பும் வெளிவரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், OnePlus Pad 5G இன் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் சுற்றி வருகின்றன. OnePlus Pad 5G பயனர்களுக்கு என்ன பேக் செய்யக்கூடும் என்று பார்ப்போம்.

OnePlus Pad 5G டேப்லெட் இல் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

OnePlus Pad 5G டேப்லெட் இல் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய OnePlus Pad 5G ஆனது 12.4' இன்ச் அளவுள்ள OLED டிஸ்ப்ளேவுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷடோவ்லீக் (ShadowLeak) இன் கசிவின் படி, இந்த புதிய ஒன்பிளஸ் பேட் 5ஜி சாதனத்தின் டிஸ்பிளே FHD+ தெளிவுத்திறனை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த புதிய ஒன்பிளஸ் பேட் 5ஜி கேஜெட் ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ் அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 12 இல் இயங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus Pad 5G சாதனத்தின் கேமரா மற்றும் ஸ்டோரேஜ் அம்சம்

OnePlus Pad 5G சாதனத்தின் கேமரா மற்றும் ஸ்டோரேஜ் அம்சம்

வதந்திகளுக்குள்ளான இந்த புதிய ஒன்பிளஸ் பேட் 5ஜி சாதனத்தின் முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்கான 8MP சென்சார் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், இதன் பின்புறம் 13MP பிரதான சென்சார் மற்றும் 5MP இரண்டாம் நிலை சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்புடன் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும், OnePlus Pad 5G ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்டைக் கொண்டிருக்கக்கூடும். மேலும், இந்த சாதனம் 6GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒரு மெமரி வேரியண்டில் கிடைக்கலாம்.

ஒன்பிளஸ் பேட் 5ஜி பேட்டரி மற்றும் சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் விலை

ஒன்பிளஸ் பேட் 5ஜி பேட்டரி மற்றும் சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் விலை

OnePlus இன் டேப்லெட் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 10900mAh பேட்டரியை பேக் செய்யக்கூடும். பாதுகாப்பிற்காக, OnePlus Pad 5G ஆனது பக்கவாட்டு கைரேகை ஸ்கேனர் மற்றும் புளூடூத் 5.1 மற்றும் 3.5mm ஆடியோ ஜாக்கிற்கான அம்ச ஆதரவுடன் வரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. வதந்திகளின்படி, டேப்லெட்டின் விலை 2,999 யுவான் ($471 USD) ஆக இருக்கலாம் என்று டிப்ஸ்ட்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்திய மதிப்பின் படி, இந்த புதிய ஒன்பிளஸ் பேட் 5ஜி சாதனத்தின் விலை ரூ. 35,945 விலையை நெருங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus Pad 5G ஏற்கனவே உற்பத்தி கட்டத்தில் உள்ளதா?

OnePlus Pad 5G ஏற்கனவே உற்பத்தி கட்டத்தில் உள்ளதா?

இது மோசமான விலையாகத் தெரியவில்லை. ஆனால், ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் வரவில்லை என்பதால், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விவரக்குறிப்புகள் கசிவை உப்புடன் எடுத்துக் கொள்ளுங்கள். பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மா, OnePlus Pad 5G ஏற்கனவே யூரேசிய மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் உற்பத்தி கட்டத்தில் நுழைந்துவிட்டதாகக் கூறியிருந்தார். ஒன்பிளஸ் இந்த ஆண்டு பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 6 புதிய சாதனங்களா?

இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 6 புதிய சாதனங்களா?

இந்த ஆண்டு மே அல்லது ஏப்ரல் மாதத்தில் வரக்கூடிய OnePlus Nord 2T சாதனமும் இதில் அடங்கும். இதனுடன், ஒன்பிளஸ் 10 ப்ரோவை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. OnePlus ரசிகர்களுக்கு இப்போதே இந்த டேப்லெட் சாதனத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது என்பதே உண்மை. OnePlus இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 6 புதிய சாதனங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Pad 5G Might Sport Snapdragon 865 and OLED Display : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X