Home
News

மினி TV கணக்கா.. புது OnePlus டேப்லெட்.. 12140mAh பேட்டரி, 8 ஸ்பீக்கர், 13.2 இன்ச் டிஸ்பிளே, 16GB ரேம்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் டேப்லெட் ஆக ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ (OnePlus Pad 2 Pro) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் 13.2-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 12140mAh பேட்ட, தெர்மல் மேனேஜ்மேண்ட்டிற்கான 34,857 சதுர மிமீ வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் (Vapour chamber cooling system) ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. என்ன விலை? வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட்டின் அம்சங்கள் (OnePlus Pad 2 Pro Specifications Features):
- 13.2-இன்ச் 3.4கே எல்சிடி டிஸ்பிளே
- 2,400 × 3,392 பிக்சல்ஸ்
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 315ppi பிக்சல் டென்சிட்டி
- 89.3 சதவீதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ
- 900 நிட்ஸ் பிரைட்னஸ் லெவல்

மினி TV கணக்கா.. புது OnePlus டேப்லெட்.. என்ன விலை?

- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite chipset)
- 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS4.0 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ColorOS 15
- 13 மெகாபிக்சல் பின்புற கேமரா
- 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா
- 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 12,140mAh பேட்டரி

- வைஃபை 7
- ப்ளூடூத் 5.4
- என்எப்சி
- யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- எட்டு ஸ்பீக்கர் யூனிட் (Eight speaker units)
- அளவீட்டில் 289.61×209.66×5.97மிமீ
- எடையில் 675 கிராம்

ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட்டின் விலை (OnePlus Pad 2 Pro Price): சீனாவில் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.37,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜின் விலையாகும். இதே டேப்லெட்டின் 12ஜிபி + 256ஜிபி, 12ஜிபி + 512ஜிபி மற்றும் 16ஜிபி + 512ஜிபி ஆப்ஷன்களின் விலைகள் முறையே (தோராயமாக) ரூ.41,500, ரூ.45,000 ரூ.47,400) ஆகும்.

ஒன்பிளஸ்பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது டீப் ஸீ ப்ளூ (Deep Sea Blue) மற்றும் க்ளேசியர் சில்வர் (Glacier Silver) ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும். சீனாவில் மே 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அறிமுகம் குறித்த விவரங்கள் இல்லை. ஆனால் இது நிச்சயம் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும். ஏனென்றால் ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒருவேளை இது ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் உடன் சேர்த்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள் (OnePlus Pad 2 Specifications, Features): இது 3000 × 2120 ரெசல்யூஷன், 900நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 6 ஸ்பீக்கர் செட்டப், ஹை-ரெஸ் சவுண்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ், 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 67W SUPERVOOC வயர்டு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 9510mAh பேட்டரியை கொண்டுள்ளது. அறிமுகமான போது ஒன்பிளஸ் பேட் 2 விலை விவரங்கள்: இந்த டேப்லெட்டின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.42,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad 2 Pro Tablet Launched in China Check Out Price Specifications Features All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X