அலறவிடும் விலை.. அல்டிமேட் டிசைன்.. போல்டபில் ஸ்மார்ட்போன்களின் ராஜாவா புது OnePlus Open..
ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள் (Foldable smartphone) இப்போது இந்தியாவில் புது ட்ரெண்டாகி வருகின்றன. சாம்சங் (Samsung), ஒப்போ (Oppo) போன்ற நிறுவனங்களை பின் தொடர்ந்து ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் முதல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் இப்போது அதன் முதல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் சாதனமான ஒன்பிளஸ் ஓபன் (OnePlus Open) விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் ரசிகர்களின் ஹைப்பை இந்த புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் சாதனம் அதிகரித்துள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கசிந்த விவரங்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் பரவி வருகின்றன.

ஒன்பிளஸ் ஓபன் (OnePlus Open) ஸ்மார்ட்போன் சாதனத்தின் வடிவமைப்பு, விவரக்குறிப்புகள் மற்றும் விலை வரம்பைச் சுற்றி பல அறிக்கைகள் இப்போது வெளிவரத் துவங்கியுள்ளன. முன்னதாக, அக்டோபர் மாத இறுதியில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சமீபத்திய தொழில்நுட்ப நிகழ்வில், இந்த புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தைக்கு வரும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இப்போது, ஒன்பிளஸ் ஓபன் போனின் இந்திய வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக நிறுவனம் டீஸ் செய்து, இதன் வருகையை இந்திய ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் பிராண்ட், X தளத்தில் (முன்னர் டிவிட்டர் - Twitter) பகிர்ந்த ஒரு இடுகையில், ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் சாதனம் அரை மடிப்பு முறையில் காண்பிக்கப்படும் ஒரு போஸ்டர் உடன் டீஸ் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் ஓபன் (OnePlus Open) ஆனது கருப்பு வண்ண விருப்பத்தில் காணப்படுகிறது.
இந்த புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் இடது விளிம்பில் அலெர்ட் ஸ்லைடர் (alert slider) மற்றும் வலது விளிம்பில் வால்யூம் ராக்கர் (volume rocker keys) மற்றும் பவர் பட்டன் (power button) உள்ளது. டீசர் புகைப்படம், "உண்மையான OnePlus அனுபவம் வெயிட்டிங்" என்ற வார்த்தைகளுடன் பதிவிடப்பட்டுள்ளது. "ஒன்பிளஸ் வெளியீட்டு தேதியை விரைவில் உறுதிப்படுத்தும்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய கசிவுகளின் படி, ஒன்பிளஸ் ஓபன் இந்தியா சந்தையில் ரூ.1,20,000 விலை கீழ் வெளிவரலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பு கசிந்த ரெண்டர்கள், பின் பேனலின் மேல் பக்கத்தில் மையமாக வைக்கப்பட்டுள்ள ஒரு வட்ட பின்புற கேமரா தொகுதியை பரிந்துரைத்துள்ளன. இது வட்டமான மூலைகளுடனும் லிச்சி போன்ற தோல் பூச்சுடனும் காணப்பட்டது.
OnePlus Open ஆனது 7.82' இன்ச் கொண்ட 2,440 x 2,268 பிக்சல்கள் உடைய OLED உள் டிஸ்பிளே மற்றும் 6.31' இன்ச் 1,116 x 2,484 பிக்சல்கள் OLED வெளிப்புற டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இரண்டும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் வரும். ஃபோன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரை கொண்ட ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் OnePlus Open-ன் மூன்று பின்புற கேமராவில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 48 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றை இந்த சாதனம் கொண்டிருக்கும்.
செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, தொலைபேசி 32 மெகாபிக்சல் அல்லது 20 மெகாபிக்சல் சென்சார் கொண்ட முன் எதிர்கொள்ளும் கேமராவைப் பெறும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் 4,805mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்.


Click it and Unblock the Notifications








