Home
News

ஐயையோ.. யார் கண்ணு பட்டுச்சோ இந்த OnePlus போனுக்கு இப்படி ஒரு நிலைமையா? அட பாவமே..

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில், முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதை நிறுவனம் ஒன்பிளஸ் ஓபன் (OnePlus Open) போல்டபில் போன் என்று அழைக்கிறது. இதன் அறிமுகத்திற்காக நிறுவனம் வேகமாக ரெடியாகி வருகிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் (OnePlus Foldable Smartphone) சாதனம் முதல் முறையாக ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ஒன்பிளஸ் ஓபன் என்ற பெயருடன் அறிமுகமாகும் என்பதை சமீபத்திய லீக் தகவல்கள் உறுதிப்படுத்தின. இதற்கு முன் வெளியான தகவலின் படி, இந்த புதிய ஒன்பிளஸ் ஓபன் போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டு வந்தது.

ஐயையோ.. யார் கண்ணு பட்டுச்சோ இந்த OnePlus போனுக்கு இப்படி ஒரு நிலைமையா

ஆனால், சமீபத்தில் வெளியான புதிய லீக் தகவல் இந்த செய்தியை மாற்றி கூறுகிறது. இதன்படி, வரவிருக்கும் ஒன்பிளஸ் ஓபன் போல்டபில் ஸ்மார்ட்போனின் (OnePlus Open Foldable Smartphone) அறிமுகம் இன்னும் சில காலம் தள்ளி போகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஒன்பிளஸ் ரசிகர்கள் இப்போது கவலை அடைந்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ஒரு பிரபலமான டிப்ஸ்டர் தகவல் ஒன்பிளஸ் ஓபன் (OnePlus Open) போனின் அறிமுகம் போஸ்ட்பாண்ட் செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு கூறியுள்ளது. பிரபல டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர் (Max Jambor) கூறியுள்ள தகவலின் படி, OnePlus நிறுவனம் தனது முதல் போல்டபில் ஸ்மார்ட் போனான OnePlus Open ஐ ஆகஸ்ட் 29 அன்று அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இருப்பினும், டிப்ஸ்டரின் சமீபத்திய ட்வீட் வெளியீடு தாமதத்தை சந்திக்கும் (OnePlus Open Phone Launch Delay) என்பதை வெளிப்படுத்துகிறது. டிஸ்பிளே உற்பத்தி செயல்முறையை மாற்றுவதற்கு ஒன்பிளஸ் நிறுவனம் கடைசி நிமிடத்தில் எடுத்த முடிவுதான் காலதாமதத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் BOE பேனல்களை இடம்பெறச் செய்யும் நோக்கம் கொண்ட ஒன்பிளஸ் ஓபன், இப்போது அதற்கு பதிலாக சாம்சங் பேனல்களை (Samsung Panel) ஏற்றுக்கொள்ளும் என கூறப்படுகிறது.

ஐயையோ.. யார் கண்ணு பட்டுச்சோ இந்த OnePlus போனுக்கு இப்படி ஒரு நிலைமையா

OnePlus Open போனுக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தகவலை இன்னும் OnePlus அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களில் ஒன்பிளஸ் ஓபன் மாடலை பற்றிய பல லீக் தகவல்களை நாம் ஆங்காங்கே கேள்விப்பட்டு வருகிறோம். சமீபத்திய லீக் தகவல் இந்த சாதனத்தை ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட் (Qualcomn Snapdragon 8 Gen 2 SoC) உடன் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

இது 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (Storage) உடன் இடம்பெறும். ஒன்பிளஸ் ஓபன் போன் 7.8' இன்ச் 2K AMOLED பிரைமரி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இதனுடன் 6.3' இன்ச் AMOLED கவர் ஸ்கிரீன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் பிளாக் (Black) மற்றும் க்ரீன் (Green) நிறங்களில் வெளிவரும்.

ஒன்பிளஸ் ஓபன் போன் (OnePlus Open Foldable Phone) ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 32 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கொண்ட 50 மெகாபிக்சல் சென்சார் உடன் டிரிபிள் ரியர் கேமரா (Triple camera) அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போன் முன்பக்கத்தில், டூயல் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கும்.

OnePlus Open ஆனது OnePlus இன் முதல் போல்டபில் ஸ்மார்ட் போன் மாடலாக சந்தையில் நுழைய உள்ளது என்பதனால் அதிக எதிர்பார்ப்பை இந்த சாதனம் உருவாக்கியுள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் ஓபன் சாதனம் சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5), கூகுள் பிக்சல் போல்ட் (Google Pixel Fold) மற்றும் விவோ கேஸ் போல்ட் 2 (Vivo X Fold 2) உடன் போட்டியிடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Open Foldable Smartphone Launch May Get Delayed Specification Details Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X