Home
News

தீப்பிடித்து எறிந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்! பயனரின் டிவிட்டர் பதிவிற்கு ஒன்பிளஸ் அளித்த பதில்!

ஒன்பிளஸ் பயனாளர் ஒருவர் திடீரென நள்ளிரவில் அவரின் ஒன்பிளஸ் ஒன் ஸ்மார்ட்போன் தீப்பிடித்து இருந்துள்ளது என்று ஒன்பிளஸ் நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளார்.

தீப்பிடித்த ஒன்பிளஸ் ஒன்

தீப்பிடித்த ஒன்பிளஸ் ஒன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் சாதனமான ஒன்பிளஸ் ஒன் பயன்படுத்திக் கொண்டிருந்த ராகுல் ஹிமாலியன் என்ற ஒன்பிளஸ் வாடிக்கையாளர், ஜூலை 3 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 03:15 மணியளவில் தீப்பிடித்ததாகப் புகார் அளித்தார்.

டிவிட்டர் பதிவு

இந்த சம்பவம் குறித்த விவரங்களை ஹிமான்லியனின் நண்பரான, இந்தியா டுடே செய்தி தொகுப்பாளர் சைதி நருலம் அவரின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில் தீப்பிடித்து எறிந்த ஒன்பிளஸ் ஒன் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ஸ்மார்ட்போன் சார்ஜிங் இல் இல்லை

ஸ்மார்ட்போன் சார்ஜிங் இல் இல்லை

ஒன்பிளஸ் வாடிக்கையாளர் ஆதரவுக்கு அனுப்பபட்டுள்ள மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தது 'இந்த சம்பவம் நிகழ்ந்த பொழுது அவரின் ஸ்மார்ட்போன் சார்ஜிங் இல் இல்லை என்று உறுதிப்படத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைவிடக் குறிப்பாகச் சம்பவம் நடந்தபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

19 டிகிரியில் தீப்பிடித்த ஸ்மார்ட்போன்

19 டிகிரியில் தீப்பிடித்த ஸ்மார்ட்போன்

நள்ளிரவில் குடும்பத்தினர் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நேரம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதேபோல் சம்பவம் நடந்த போது அறையின் ஏர் கண்டிஷனர் 19 டிகிரியில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பெரிய ஆபத்திலிருந்து தப்பித்த குடும்பம்

பெரிய ஆபத்திலிருந்து தப்பித்த குடும்பம்

எரியும் ஸ்மார்ட்போனின் வாசனை காரணமாக குடும்பத்தினர் தூக்கத்திலிருந்து விழித்ததாகவும், அறை முழுதும் புகை சூழ்ந்துகொண்டதாகவும் அவர் மின்னஞ்சலில் கூறியுள்ளார். உரிய நேரத்தில் கவனித்ததனால் பெரிய ஆபத்திலிருந்து குடும்பத்தினர் தப்பித்துள்ளனர்.

ஒன்பிளஸ் பதில்

இந்த சமத்துவம் குறித்த டிவிட்டர் பதிவிற்கு ஒன்பிளஸ் நிறுவனம் உடனே பதில் அளித்துள்ளது. ஒன்பிளஸ் பயனருக்கு நிகழ்த்த இந்த அசம்பாவிதத்திற்கு வருந்துவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் டிவீட் செய்து பதில் அளித்துள்ளது.

பேட்டரிகளை மாற்றம் செய்வது அவசியம்

பேட்டரிகளை மாற்றம் செய்வது அவசியம்

ராகுல் ஹிமாலியன் பயன்படுத்திய ஸ்மார்ட்போன் 5 வருட பழைமையானது என்பதனால், பேட்டரி கோளாறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கும் என்று கருதப்படுகிறது. உங்களின் பல கேட்ஜெட்களின் பேட்டரிகளை மாற்றம் செய்வது அவசியம் என்பதைக் கவனம் கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus One catches fire and oneplus replied to users : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X